இன்சூரன்ஸ் எடுத்துட்டா போதும் வண்டிக்கு என்ன பிரச்சனை வந்தாலும் கிளைம் கிடைக்கும்னு நினைக்காதீங்க!

தொலைந்து போன காரை அதன் உரிமையாளர் புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய காலதாமதம் ஆனால் அந்த காரணத்தை சுட்டிக்காட்டி இன்சுரன்ஸ் நிறுவனங்கள் அந்த காருக்கான கிளைமை நிராகரிக்க கூடாது என தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற விதிமுறை இருக்கிறது. அனைத்து வாகனங்களும் இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டு சாலையில் இயக்கப்பட வேண்டும். இது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்தியாவில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் செயல்படும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு விதமான இன்சூரன்ஸ் ஆப்ஷன்களையும் வழங்குகின்றன.

car theft insurance

இதனால் இந்தியாவில் அதிகம் செலவு செய்து வாகனங்களை வாங்குபவர்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்வதற்காக அவர்கள் விரும்பிய இன்சூரன்ஸ் பேக்கேஜை பெறுகிறார்கள். இப்படியாக சில பேக்கேஜ்களில் வாகனம் திருடப்பட்டாலும் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடு செய்யும் வகையில் இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் இருக்கிறது.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம் போர்கோன் காலை என்ற பகுதியில் உள்ள பைரவத் என்ற விவசாயி சொந்தமாக வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாகனத்திற்கு டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வாங்கிய வாகனம் திருடு போயுள்ளது.

car theft insurance

இது தொடர்பாக இவர் போலீசில் புகார் அளிக்க பல்வேறு முறை சென்றும் போலீசார் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்துள்ளார்கள். ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அந்த வழக்கு பதிவை வைத்து இவர் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் தன் வாகனம் தொலைந்து போனதாக கூறி இன்சூரன்ஸ் கேட்டுள்ளார்.

இந்த கிளைமை விசாரித்த இன்சூரன்ஸ் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட வழக்கில் வாகனம் தொலைந்து போன உடன் வழக்கு பதிவு செய்யப்படாமல் காலதாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி இன்சூரன்ஸ் கிளைமை நிராகரித்துள்ளார்கள். இதையடுத்து இந்த விவசாயி நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

car theft insurance

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கில் நடந்தது குறித்து முழுமையாக இரு தரப்பினரும் கேட்டு விசாரித்து தெரிந்து கொண்டார்கள். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்ட காரணத்திற்காக இன்சூரன்ஸ் கிளைமை நிராகரிப்பது என்பது நியாயமான செயலாக இருக்காது எனவும் வழக்கு பதிவு செய்ய தாமதமாவது நுகர்வோரின் தவறு கிடையாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வாகனத்தை தொலைத்த விவசாயிக்கு இன்சூரன்ஸ் மூலம் கிளைம் பணத்தை அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படியாக வழக்கு பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு இன்சூரன்ஸ் கிளைம்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது வாகனம் தொலைந்ததற்கு இருந்தாலும் சரி விபத்தாக இருந்தாலும் சரி இப்படியான காலதாமதத்தை காரணமாக கூறி நிராகரிப்புகள் நடந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் போலீசில் புகார் அளிக்கும் போது போலீசார் குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இந்த வழக்கில் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறதா புகார் உண்மைதானா என விசாரணைகளை முடித்த பின்பே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வார்கள். பல போலியான புகார்கள் வருவதன் காரணமாக இப்படியான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பது தான் வழக்கம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களுக்காக இன்சூரன்ஸ் பெரும் நபர்கள் பலருக்கு அதை கிளைம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறது. என்னென்ன தவறுகள் எல்லாம் செய்தால் கிளைம் கிடைக்காது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதை அவர்கள் விழிப்புணர்வுடன் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் சரியான வழிமுறையை பின்பற்ற முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2024, 12:54 [IST]
English summary
Car theft insurance police delay claim cancellation
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X