நட்சத்திர ஓட்டல்களில் 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

By Saravana Rajan

மும்பையில், நட்சத்திர ஓட்டல்களில் ஆடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய எம்பிஏ பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நட்சத்திர ஓட்டலுக்கு வரும் கார்களை கவனித்து, தனது கைவரிசையை மிக எளிதாக காட்டியிருக்கிறார் இந்த பலே கில்லாடி வாலிபர். இதுகுறித்து போலீசார் தெரிவித்திருக்கும் தகவல்கள் கார் வைத்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

கடந்த மாதம் 26ந் தேதி மும்பையை சேர்ந்த அர்ஜுன் கார்க் என்பவர் அங்குள்ள ஹாலிடே இன் ஓட்டலில் இரவு உணவு சாப்பிட சென்றிருக்கிறார். தனது ஆடி க்யூ7 சொகுசு காரின் சாவியை ஓட்டலின் வாலட் பார்க்கிங் பணியாளரிடம் கொடுத்துவிட்டு ஓட்டலுக்குள் சென்றிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து கார் சாவியை கேட்கும்போது, வாலட் பார்க்கிங் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கார் சாவியை காணவில்லை. காரை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கார் காணாமல் போனது குறித்து அர்ஜுன் கார்க் போலீசில் புகார் அளித்தார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸ் விசாரணையில் இறங்கினர். அப்போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடியே, வாலட் பார்க்கிங் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த கார் சாவியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

விசாரணயை தீவிரப்படுத்தியதுடன், மும்பையிலுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் போலீசார உஷார் படுத்தியிருந்தனர். அப்போது, ஹயாத் ரெசிடென்ஸி ஓட்டலில் கார் திருடும் நபர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த ஓட்டலை சுற்றிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

அப்போது, அங்கு வந்த ஆடி கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அந்த கார் திருடு போன அர்ஜுன் கார்க்கின் கார் என்பது உறுதியானது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த சதேந்திரா சிங் ஷெகாவத் [35] என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், காரை அவர்தான் திருடிச் சென்றது சதேந்திராதான் தெரிய வந்தது. அவரிடமிருந்து அந்த ஆடி க்யூ7 காரும் மீட்கப்பட்டது.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கும் சதேந்திரா தனது திறமையை தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறார். கார்களை திருடி விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

விலை உயர்ந்த உடைகள், காலணிகள் சகிதம் நுனி நாக்கு ஆங்கிலத்துடன் மும்பையில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு டிப் டாப்பாக சென்றுள்ளார். இதனால், ஓட்டல் பணியாளர்களுக்கு சந்தேகம் வரவில்லை.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

வாலட் பார்க்கிங் பணியாளர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பி, அங்கு மேஜையிலோ அல்லது சிறிய பீரோவிலோ வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த கார்களின் சாவிகளை நைசாக எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

நேராக பார்க்கிங் பகுதியில் நிற்கும் காரை ரிமோட் லாக்கிங் சிஸ்டம் மூலமாக திறந்து கொண்டு கார்களை நூதனமாக எளிதாக போட்டிருக்கிறார். ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களை இவர் எளிதாக திருடிச் சென்றிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

இதுவரை மும்பையில் 20க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை சதேந்திரா திருடியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி, புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் விலை உயர்ந்த கார்களை திருடியிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சதேந்திரா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவாம். கார் திருட்டு, வழிப்பறி, தாக்குதல் போன்ற செயல்களுக்காக ஏற்கனவே மூன்று முறை சிறை தண்டனை பெற்றிருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

கடைசியில் ஜோத்பூர் சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளியே வந்த சதேந்திரா மீண்டும் தனது கைவரிசையை மும்பையிலுள்ள ஓட்டல்களில் காட்டியிருக்கிறார். திருடப்பட்ட கார்களை ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த போதை மருந்து கடத்தல் கும்பல்களிடம் விற்பனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

 ஆடி உள்ளிட்ட 20 சொகுசு கார்களை ஆட்டையை போட்ட எம்பிஏ பட்டதாரி!

எது எப்படியிருந்தாலும் விலை உயர்ந்த கார்களை வைத்திருப்பவர்கள் கார்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையாகவும் செயல்படுவது அவசியம்.

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2016, 16:37 [IST]
English summary
Car Theft: MBA graduate Arrested in Mumbai. Read in Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+