ரோட்டுல நிக்குற காரை திருடி ஆன்லைனில் விற்கும் கும்பல் கைது! இவ்வளவு ஈஸியா திருடிட்டாங்களே!

கார்களை திருடி ஆன்லைன் மூலம் விற்பனை செய்த 13 பேர் கொண்ட கும்பலை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளார்கள். இவர்கள் எப்படி காரை திருடி எப்படி ஆன்லைன் மூலம் திருட்டு கார் என தெரியாமலேயே விற்பனை செய்தார்கள் என்று அவர்கள் சொன்ன தகவல் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி எல்லாம் கூட நடக்கிறதா என யோசிக்க வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கார் திருட்டு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பொது வெளியில் காரை நிறுத்தி விட்டு செல்லும்போது திரும்பி வந்து பார்த்தால் கார் இல்லாமல் இருக்கும் கார் திருடர்கள் காரை விதவிதமான வகையில் திருடி செல்கிறார்கள். இப்படியாக சொல்லப்பட்ட கார் மறுபடியும் அமைப்பு அல்லது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Car theft

இதன் மூலம் திருடர்களுக்கு அதிக பணம் கிடைப்பதால் இந்த திருட்டு சம்பவம் இந்தியாவில் பல இடங்களில் நடந்து வருகிறது. இதில் பல நூதமான விஷயங்களும் நடந்துள்ளன. என்னதான் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகன திருட்டை தடுப்பதற்காக ஏராளமான விஷயங்களை பின்பற்றினாலும் அதையும் மீறி திருடர்கள் வாகனங்களை திருடி செல்கிறார்கள்.

இப்படியாக டெல்லி பகுதியில் அடிக்கடி வாகனத்திற்கு நடந்து வந்துள்ளது. இதை குறித்து புகார் வந்த நிலையில் போலீசார் இந்த வாகனத்திற்கு ஈடுபடும் கும்பலை பிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் செய்தார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட கும்பல் வாகனங்களை திருடி அதை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்துள்ளார்கள்.

Car theft

கைது செய்தவர்களை விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன விஷயம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் எப்படி காரை திருடினார்கள் அதை எப்படி விற்பனை செய்கிறார்கள்? இதன் மூலம் அவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்ற விபரங்களை எல்லாம் அவர்கள் கூறியது நம்மையெல்லாம் ஒரு நொடி உறைய வைத்து விடுகிறது.

கைது செய்யப்பட்ட 13 பேரும் வெவ்வேறு விதமான பணிகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்கள் பணிகளை பயன்படுத்தி கார்களை திருடுவது முதல் அதை விற்பனை செய்து பணம் வாங்குவது வரை பல்வேறு விதமான திருட்டு வேலைகளை செய்துள்ளார்கள். இதன் மூலம் திருடப்பட்ட கார் உண்மையான உரிமையாளர் இடமிருந்து வாங்குவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அந்த காரை வாங்குபவரிடம் அது திருட்டு கார் என தெரியாமலே விற்பனை செய்து உள்ளார்கள்.

Car theft

இந்த 13 பேர் கும்பலில் சிலர் முதலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு வாகனத்தின் ஆவணங்களை தயார் செய்கிறார்கள். ஒரிஜினல் ஆவணங்கள் எல்லாம் அவர்கள் கைக்கு கிடைத்த பிறகு அந்த ஆவணத்தில் உள்ள காரின் மாடல் கலர் உள்ளிட்ட விஷயங்களை பார்த்து அதேபோன்ற ஒரு காரை திருட்டுக்காக தேடுகிறார்கள். அந்த காரை சந்தர்ப்பம் பார்த்து திருடி விடுகிறார்கள்.

திருடப்பட்ட காரை இவர்கள் இடத்திற்கு கொண்டு வருகிறார்கள். கொண்டு வந்து காரின் இன்ஜின் நம்பர் சேஸிஸ் நம்பர் உள்ளிட்ட விபரங்களை அளித்து இவர்கள் கையில் வைத்திருக்கும் ஆவணத்தில் உள்ள எண்னை அதில் பொறிக்கிறார்கள் இப்பொழுது அவர்கள் திருடி வந்த வாகனம் வேறு வாகனமாக இருந்தாலும், இவர்கள் செய்த திருட்டு வேலையால் அந்த வாகனம் இவர்கள் கையில் வைத்திருக்கும் ஆவணத்திற்கான வாகனமாக மாறி விடுகிறது.

இதன் பிறகு இந்த கும்பலில் உள்ள சிலர் ஆன்லைன் மூலம் செகண்ட் ஹேண்டில் வாகனங்களை விற்பனை செய்யும் வெப்சைட்டில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்கள் பணியாற்றும் நிறுவனத்தை வைத்து தங்கள் கும்பல் திருடிய காரை அந்த ஆன்லைன் தளம் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளார்கள். இப்படியாக பல்வேறு வாகனங்களை அவர்கள் வெற்றிகரமாக விற்பனையும் செய்துள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை இவர்கள் அனைவரும் பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து போலீசார் இவர்களை மடக்கி பிடித்து அனைவரையும் கைது செய்துள்ளார்கள். இந்த திருட்டு சம்பவம் தற்போது இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் நீங்கள் பொதுவெளியில் வாகனங்களை பார்த்து செய்யும்போது அதை சரியாக லாக் செய்து விடுங்கள். அதே நேரம் உங்கள் வாகனத்தில் எப்பொழுதும் ஒரு ஜிபிஎஸ் கருவியை பொருத்தி இருப்பது சிறந்தது. இதன் மூலம் வாகனம் திருடப்பட்டாலும் திருடப்பட்ட வாகனத்தை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்திருட்டு என்பது உலக அளவில் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த வாகன திருட்டை சமாளிக்க வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். இது கொண்டு வந்தால் பெரிய அளவில் திருட்டு தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியே திருடப்பட்டாலும் திருடப்பட்ட வாகனத்தை மீட்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 12:17 [IST]
English summary
Car theft tried to sell on online portals 20 vehicles recovered 13 arrested
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X