Car Theft Chinese App மூலம் கார்களை திருடும் திருடர்கள்! இந்த கார்கள் தான் அவங்க டார்கெட்! ஜாக்கிரதையா இருங்க
உ.பி மாநிலம் காஸியாபாத் பகுதியில் சீன சாஃப்ட்வேர்களை வைத்து மாருதி கார்களை குறித்துத் திருடிய கும்பல் போலீசில் பிடிபட்டுள்ளது. ரோட்டில் நிற்கும் 200 கார்களை இந்த கும்பல் திருடியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில் உள்ள விஜய்நகர் போலீஸ் ஸ்டேஷனிற்கு ஒரு கும்பல் இரவு நேரங்களில் கார் திருட்டில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசா் தனிப்படை அமைத்து இந்த குழுவிற்கு வலையை விரித்தனர்.

போலீசார் வீச வலையில் காஸியாபாத் பகுதியைச் சேர்ந்த கவ்ரவ் மற்றும் உமேஷ் ஆகிய இருவர் போலீசில் சிக்கினர். போலீசார் அவர்கள் எப்படி கார்களை திருடுவார்கள் என்று நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த கார் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இன்று தயாரிக்கப்படும் கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் அதையும் மீறி எப்படி கார்கள் திருடப்படுகிறது என்பது தெரியாமல் போலீசார் குழம்பிப் போய் இருந்தனர். இதற்குப் பதிலளித்த அந்த திருடர்கள் சொன்ன விஷயம் தான் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கார்களை கொள்ளையடிப்பதற்காக அவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆப்பை பயன்படுத்தியுள்ளனர். அவர்களது முதல் டார்கெட் சாலையில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் கார்கள் தான். இந்த கார்களை குறி வைக்கின்றனர். தொடர்ந்து சாலையிலேயே நிற்கும் காரை தான் தேர்வு செய்து திருடியுள்ளனர்.
இவர்கள் காரின் கதவைக் கள்ளச் சாவியைக் கொண்டு முதலில் திறந்து உள்ளே செல்கின்றனர். அங்கு ஸ்டிரிங் வீலுக்கு அருகே எலெக்ட்ரிக் கண்ட்ரோல் யூனிட் இருக்கும். அதில் அதில் உள்ள வயர்களை இவர்களது டேப்லெட்டில் கனெக்ட் செய்கின்றனர். இந்த டேப்லெட்டில் இவர்கள் சீனாவில் வாங்கிய சாஃப்ட்வேர் இருக்கும்.
இதைப் பயன்படுத்தி வாகனத்தின் முழு கண்ட்ரோலையும் டேப்லெட்டில் எடுக்கின்றனர். பின்னர் ஸ்டிரயிங் லாக்கை இந்த சாஃப்ட்வேர் மூலமே அன்லாக் செய்து காரை ஸ்டார்ட் செய்து திருடிச் செல்கின்றனர். மொத்தமே 2-2.30 நிமிடங்களில் காரை திருடிவிடுகின்றனர்.
இந்த கும்பல் இதுவரை 200க்கும் அதிகமான கார்களை திருடி நேபாளம், பீகார், பஞ்சாப் போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று அங்கு விற்பனை செய்கின்றனர். மேலும் இந்த காரை லீகல் முறையிலான காராக தெரிவதற்காக இந்த காருக்கு போலியான ஆர்சி புக்கை தயாரிக்கின்றனர்.
இவர் பயன்படுத்திய சாஃப்ட்வேரை வைத்து காரின் தகவல்களை எளிமையாகப் பெறுகின்றனர். அதை வைத்து போலியான பதிவுச் சான்றைத் தயாரிக்கின்றனர். இதை வைத்து செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் இந்த கார்களை விற்பனை செய்ததாக அந்த திருடர்கள் கூறினர். இதைக் கேட்ட அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
பின்னர் போலீசார் இந்த சாஃப்ட்வேரை எப்படி வாங்கினீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் நொய்டாவைச் சேர்ந்த தீபன்சு சவுகான் என்பவர் இவர்களுக்கு இந்த சாஃப்ட்வேரை ரூ3.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும். இதை இவர் சீனாவிலிருந்து வாங்கி இவரைப் போன்ற சிலருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறினர்.
இதையடுத்து போலீசார் திபன்சு சவுகானைப் பிடிக்கச் சென்ற போது அவர் தகவலறிந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் இதுவரை 20-25 கும்பலுக்கு இந்த சாஃப்ட்வேரை விற்பனை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து அவரை பிடித்து மற்ற கும்பலையும் பிடித்து இந்த சாஃப்ட்வேர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
தற்போது பிடிபட்ட கும்பலிடமிருந்து ஒரு பலேனோ, வேகன்ஆர், போன்ற 12 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் போலியான ஆர்சிபுக்கை அச்சடிக்க வைத்திருந்த பிரிண்டர், சாஃப்ட்வேர், துப்பாக்கி கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் மற்றவர்களையும் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ரோட்டில் நிற்கும் கார்களை குறிவைத்து இப்படியாகச் சீன சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஒரு கும்பல் திருட முயற்சி செய்துள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் பார்க்கிங் இல்லாமல் ரோட்டில் காரை நிறுத்தும் ஓனர்கள் தற்போது பெரும் பயத்தில் இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன? : இரவு நேரங்களில் காரை முறையான பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். பார்க்கிங்கில் நிறுத்தப்படாத கார்கள்தான் அதிகம் திருடப்படுகிறது. சாலையில் கார்களை நிறுத்துவது திருடர்களுக்குச் சுலபமானது. இதனால் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள்.


Click it and Unblock the Notifications








