சவூதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ் காரை நூதன முறையில் திருடி விற்ற பலே கார் திருடன்!

Written By:

சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் இங்கிலாந்து நாட்டை தங்களது இரண்டாவது தாயகம் போல பயன்படுத்தி வருகின்றனர். வியாபாரம், ஷாப்பிங், ஓய்வுக்காக என அவர்கள் நினைத்தவுடன் பறப்பது இங்கிலாந்துக்குத்தான்.

அவ்வாறு அடிக்கடி இங்கிலாந்து செல்லும் வளைகுடா நாட்டு செல்வந்தர்கள் இங்கிலாந்து செல்லும்போது பயன்படுத்துவதற்காக, அங்கேயே மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி அங்குள்ள வாடகை கராஜ்களில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். அதற்காக டிரைவர்களை நியமித்து அந்த காரை பராமரித்து வருவது அவர்களது வழக்கமாக இருக்கிறது.

சவூதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ்

சவூதி இளவரசரின் ரோல்ஸ்ராய்ஸ்

இந்த நிலையில், சவூதி இளவரசர் ஷேக் அலி இப்ராஹீம் இங்கிலாந்தில் உள்ள மேஃபேர் கராஜில் தனக்கு சொந்தமான ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தார். இங்கிலாந்துக்கு செல்லும்போது அந்த காரை பயன்படுத்தி வந்தார்.

சாவி இல்லாமல்...

அந்த காரின் ஒரு சாவி இளவரசர் ஷேக் இப்ராஹீமிடமும், மற்றொரு சாவி அவரது டிரைவரிடமும் இருந்தன. அந்த காரை வாரம் ஒருமுறை இப்ராஹீமின் டிரைவர் போய் பார்த்து வருவது வழக்கம். இதேபோன்று, மேஃபேர் கராஜில் நிறுத்தப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காரை பார்த்து ஆய்வு செய்வதற்காக இப்ராஹிமீனின் டிரைவர் சென்றிருக்கிறார்.

கார் மாயம்

அங்கு சென்று பார்த்தபோது காரை காணவில்லை. இதுகுறித்து இப்ராஹீமுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அந்த கார் வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

டூப்ளிகேட் சாவி

இதையடுத்து, விசாரணை நடத்தியதில் முகம்மது ஹம்சா[25] என்ற இளைஞர் அந்த காரை போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயருக்கு மாற்றியது தெரிய வந்தது. மேலும், இங்கிலாந்து போக்குவரத்து பதிவு அலுவலகத்திடமிருந்து கிடைத்த சான்றுகளை காண்பித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடமிருந்து நேரடியாக டூப்ளிகேட் சாவிகளை பெற்றிருக்கிறார்.

விற்பனை

பின்னர் அந்த காரை கராஜிலிருந்து திருடிச் சென்று ஹட்டர்ஸ்ஃபீல்டு என்ற இடத்தில் உள்ள யூஸ்டு கார் டீலரிடம் விற்பனை செய்துவிட்டார். அந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் 97,000 பவுண்ட் மதிப்புடைய அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை 27,000 பவுண்ட் விலையில் விற்பனை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

மோசடி புகார்

இதையடுத்து, அவர் மீது போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மோசடி செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வந்த ஹம்சா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அந்த கார் மீது எனக்கு சட்டரீதியாக முழு உரிமை உள்ளது என்று கூறினார்.

சூப்பர் [கார்] திருடன்

இது நீதிபதிகளையே அதிர்ச்சியடைய வைத்தது. வரும் பிப்ரவரி 27ந் தேதிக்கு இந்த வழக்கின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், நிபந்தனை ஜாமீனில் ஹம்சா விடுவிக்கப்பட்டிருக்கிறான். இதுமட்டுமல்ல, பல விலை உயர்ந்த கார்களை இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக ஹம்சா மாற்றி திருடி விற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Car thief stole Saudi Prince RollsRoyce Car in England.
Story first published: Saturday, November 19, 2016, 11:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark