பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

பிளாஸ்டிக் சர்ஜரி, பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன் சுற்றி வளைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ளது ஷதாரா மாவட்டம். இங்கு ஒரு கொள்ளையனின் பெயரை கேட்டால், ஊரே நடுங்கும். அந்த கொள்ளையனின் பெயர் குணால். கடந்த 20 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட புதிய கார்களை கொள்ளையடித்துள்ளதாக குணால் மீது புகார்கள் உள்ளன.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

குணாலின் தற்போதைய வயது 40 மட்டுமே. அப்படியானால் தனது 20வது வயதில் இருந்து புதிய கார்களை குறி வைத்து கொள்ளையடித்து வருகிறார் குணால். இவர் கார்களை திருடுவதில் கை தேர்ந்தவர். வெறும் ஐந்தே நிமிடங்களில் ஒரு புதிய காரை திருடி விடும் அளவிற்கு அனுபவசாலி.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

கார்களை எப்படி திருட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கும் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை யூ-டியூப்பில் குணால் அப்லோட் செய்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். நாளுக்கு நாள் குணாலின் அட்டகாசம் அதிகரித்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது லாக் அப்பில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கார்களை கொள்ளையடிக்கும் தொழில் செய்து வந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை முடிவை எடுப்பதாக அவர் கடிதமும் எழுதி வைத்திருந்தார். ஆனால் போலீசார் அவரை எப்படியோ காப்பாற்றி விட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் அதன் பின்பும் கூட குணால் திருந்தவில்லை. போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய குணால் மீண்டும் கார்களை கொள்ளையடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் குணாலின் கூட்டாளியான ஷாகித் என்பவரும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

எனவே குணால் மற்றும் ஷாகித் ஆகியோரை பிடிக்க ஷதாரா மாவட்டத்தின் வாகன திருட்டிற்கு எதிரான போலீஸ் படை தீவிரம் காட்டி வந்தது. இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு (மே 15) அவர்கள் இருவரும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது குணாலும், ஷாகித்தும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் பயணித்து கொண்டிருந்தனர். அவர்களை 9 பேர் அடங்கிய போலீஸ் படை சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் குணால்தான் டிரைவர் இருக்கையில் இருந்தார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் போலீசார் சுற்றி வளைத்த போதும் கூட அவர்கள் இருவரும் அசரவில்லை. சரண் அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு துளியும் இருந்ததாக தெரியவில்லை. எனவே காரை ரிவர்ஸில் எடுத்த குணால், போலீஸ் வேனின் மீது பலமாக மோதினார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அத்துடன் மற்றொரு வாகனத்தின் மீது காரை மோதினார். இதன்பின் காரில் இருந்து இறங்கிய குணால், பெரிய இரும்பு ராடால் தாக்கி 3 போலீசாரை காயப்படுத்தினார். அத்துடன் துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டவும் செய்தார்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் போலீசார் எப்படியோ அவரை மடக்கி பிடித்து விட்டனர். அந்த சமயத்தில் குணால் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பது பின்னர்தான் தெரியவந்தது. அதன்பின் குணால் மற்றும் ஷாகித்தை போலீசார் கைது செய்தனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

100க்கும் மேற்பட்ட கார்களை திருடி உள்ளதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பு மாஸ்க் மற்றும் க்ளவுஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டு கார்களை திருடுவதை குணால் வழக்கமாக வைத்திருந்தார். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில்தான் அவர் கார்களை திருடுவாராம்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள பிரபல கார் கொள்ளையன் குணால் தொடர்பாக மேலும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. போலீசாரிடம் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக குணால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அத்துடன் தனது பெயர், முகவரி ஆகியவற்றையும் மாற்றி கொண்டு போலீசாரிடம் இருந்து அவர் தப்பித்து வந்துள்ளார். குணாலின் தற்போதைய பெயர் பூத்நாத். இதனிடையே கைது செய்யப்பட்ட உடன் டெல்லி ஆனந்த் விகார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்கள் இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

அப்போது செயல் விளக்கத்திற்காக, லாக் செய்யப்பட்டிருந்த ஒரு காரை திறக்கும்படி குணாலிடம் போலீசார் கூறியுள்ளனர். வெறும் நான்கே நிமிடங்களில் குணால் காரை திறந்து விட்டதால், போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் குணால் திருடிய கார்கள் எல்லாம் பெரும்பாலும் 2019 மாடல்கள்தான். ஆனால் திருடப்பட்ட கார்களை குணால் யாரிடம் விற்பனை செய்துள்ளார்? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக குணாலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

தற்போதைக்கு 4 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து கொண்டு 20 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்துள்ளார் குணால். அதுவும் பொம்மை துப்பாக்கியை வைத்து கொண்டு!

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

ஆனால் ஒரு வழியாக போலீசார் தற்போது குணாலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விட்டனர். இது கார் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும். குணால் பிடிபட்டுள்ள சம்பவம் தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொம்மை துப்பாக்கி மூலம் 20 ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கொள்ளையன்... அதிர்ச்சி தகவல்

மோட்டார் வாகனங்களை திருடினால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை (க்ரைம்ஸ் ஆக்ட் 1990-ன் செக்ஸன் 154எஃப்-ன் படி ) விதிக்கப்படும். கார்களின் பாதுகாப்பிற்கு இன்று பல்வேறு டெக்னாலஜிகள் இருந்தாலும், கொள்ளையர்களும் அதற்கேற்ப தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடக்கத்தது. கார் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2019, 12:35 [IST]
English summary
Car Thief Who Stole Over 100 New Cars Caught — The Dude Carried A Toy Pistol. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+