கடுமையான விபத்தில் சிக்கி இரண்டு துண்டான காரில் இருந்து பெண் ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

விபத்தில் சிக்கி இரண்டு துண்டுகளாகிப் போன காரில் இருந்து பெண் ஓட்டுநர் ஒருவர் காயமில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்.

By Arun

மிகவும் கோரமாக அரங்கேறிய சாலை விபத்தில் சிக்கி இரண்டு துண்டுகளான காரில் இருந்து பெண் ஓட்டுநர் ஒருவர் காயமேதுமில்லாமல் அதிசயத்தக்க வகையில் உயிர்பிழைத்துள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

கடுமையாக நடந்தேறும் விபத்துக்களின் முடிவு இதைப்போன்று இருப்பதில்லை, பொதுவாக இப்படிப்பட்ட விபத்துக்களில் உயிரிழப்புகள் என்பது 100% உறுதியான ஒன்றாக இருக்கலாம், அல்லது குறைந்தபட்சமாக மிகவும் மோசமான காயங்களாவது ஏற்படலாம்.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹைவே-101 ல் தன்னுடைய காரில் பயணித்துக்கொண்டிருந்த டாம் பாண்ட் என்பவர், ஒரு வளைவில் திரும்பும் போது சாலையில் புகை மண்டலமாகவும் மற்றும் சிதறல்கள் காற்றில் பறப்பதையும் கண்டிருக்கிறார்.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

சில நொடிகளுக்கு முன்னர் தான் அங்கு அவர் வாழ்நாளிலேயே பார்த்திருக்காத கடுமையான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. முதலில் அது இருசக்கர வாகன விபத்து என்று எண்ணியுள்ளார், புகை அடங்கியவுடன் தான் அது கார் விபத்து என்பதே அவருக்கு தெரியவந்துள்ளது.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

சாலையில் நடுவே செவர்லே இம்பாலா கார் ஒன்று சரி பாதியாக அறுக்கப்பட்டது போல இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இரண்டு துண்டுகளான அந்தக் காரின் மற்றொரு பகுதி சாலையோரமாக இருந்த மலைப்பகுதியில் இருந்ததையும் கண்டார்.

விபத்து நடந்த ஹைவே-101 நெடுஞ்சாலை நான்கு லேண்கள் கொண்டதாகும். வாகனங்கள் எதிரும் புதிருமாக செல்ல திசைக்கு இரண்டு லேண்கள் இதில் உள்ளது. ஆனால் செண்டர் மீடியன் இல்லாமல் இருந்துள்ளது. சாலையின் ஓரமாக மலை அமைந்துள்ளது.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

விபத்தில் இரண்டு துண்டுகளான செவர்லே இம்பாலா காரை ஓட்டி வந்தவர் ‘அபோல் லான்சாங்க்' என்ற பெண் ஆவார். இதே போல டொயோட்டா காரை கெவின் ஃபெண்டி என்பவர் ஓட்டிவந்துள்ளார். இவர்களைத்தவிர வேறு யாரும் அந்த கார்களில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

விபத்துக்குள்ளான இரண்டு கார்களும் எதிரெதிர் திசைகளில் வந்துகொண்டிருந்தன. அப்போது கெவின் ஃபெண்டி ஓட்டிவந்த டொயோட்டா கார், டிரிஃப்ட் செய்து வழுக்கிச் சென்று எதிர்திசையில் வந்துகொண்டிருந்த லான்சாங்க் ஓட்டிவந்த இம்பாலா கார் மீது மிகவும் பலமாக மோதியுள்ளது.

இதில் இம்பாலா கார் இரண்டு துண்டுகளாக உடைந்து, அதில் ஒரு பாதி கார் சாலை நடுவிலும், மற்றொரு பகுதி அருகில் இருந்த மலை மீதும் விழுந்துள்ளது.

விபத்தில் இரண்டு துண்டான காரிலிருந்து ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்..!

இந்த கோர விபத்தில் ஆச்சரியம் அளிக்கத்தக்க வகையில் இரண்டு துண்டுகளான காரின் ஒரு பகுதியில் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையில் அதனை ஓட்டிவந்த பெண் எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்துள்ளார். மேலும் சிறு காயங்களுடன் கெவினனும் உயிர்பிழைத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக இதைப்போன்ற விபத்துக்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இந்த சம்பவம் மிக அரிதிலும் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. விபத்தை வீடியோவாக எடுத்த முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரியான டாம் பாண்ட் , இதைப்போன்ற ஒரு விபத்தை தம் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று கூறினார். இந்த விபத்துக்கு காரணம் போதை வஸ்துக்களாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தை படம்பிடித்த டாம், அதனை வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனை மேலே உள்ள ஸ்லைடரில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil about worst accident slices car in two pieces but driver survives without any injury.
Story first published: Wednesday, May 17, 2017, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X