ஆணவத்தில் ஆடிய நபருக்கு ஸ்பாட்லயே தண்டனை! ஒரே நாளில் ஹீரோவாக மாறிய 18 வயது பெண் தொழிலாளி! உலகமே பாராட்டுது!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், பெண் ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு காரை கழுவி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அந்த காரின் முன் பக்க ஜன்னல் கண்ணாடி திடீரென திறக்கப்படுகிறது.

அதற்கு பிறகு காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண் ஒருவர், தான் பாட்டிலில் வைத்திருந்த லெமன் ஜூஸை, காரை கழுவி கொண்டிருந்த பெண் மீது ஊற்றுவதை பார்க்க முடிகிறது. இதனால் காரை கழுவி கொண்டிருந்த பெண் அதிர்ச்சியடைந்தார். எனினும் காருக்கு உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை அவர் உடனடியாக பழி வாங்கி விட்டார்.

Car Wash

தான் கையில் வைத்திருந்த குழாயை, காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி அவர் திருப்ப, பழி வாங்குதல் படலம் சிறப்பாக அரங்கேறியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் அமெரிக்காவின் (United States) இண்டியானா (Indiana) பகுதியில் நடைபெற்றுள்ளது. காரை கழுவி கொண்டிருந்த பெண்ணின் பெயர் அன்னா ஹரிக்கி (Anna Harycki) என்பதாகும்.

18 வயது மட்டுமே நிரம்பிய அவர், அந்த கார் வாஷிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். அவர் தனது பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான், காரின் உள்ளே அமர்ந்திருந்த பெண், லெமன் ஜூலை அவர் மீது ஊற்றியுள்ளார். அவர் ஏன் அப்படி செய்தார்? என்பதற்கான காரணம் நமக்கு தெரியவரவில்லை.

Car Wash Issue

எனினும் இது ஒரு மோசமான செயல்பாடு என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த மோசமான செயலை செய்த பெண்ணுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அன்னா ஹரிக்கியின் செயலை அவர்கள் பாராட்டி கொண்டும் உள்ளனர். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அன்னா ஹரிக்கியின் நிறுவனமும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அன்னா ஹரிக்கி மீது லெமன் ஜூலை ஊற்றிய பெண் இனிமேல் தங்கள் நிறுவனத்தில் 'கார் வாஷ்' செய்ய முடியாது என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து அன்னா ஹரிக்கி கூறுகையில், ''எனது மேனேஜர்களிடம் நடந்ததை கூறினேன்.

என் மீது லெமன் ஜூஸை ஊற்றிய அந்த பெண்ணின் செயலை அவர்கள் ஆதரிக்கவில்லை. எனவே அந்த பெண் இனி எங்கள் நிறுவனத்தில் 'கார் வாஷ்' செய்ய முடியாது என அவர்கள் அறிவித்து விட்டனர்'' என்றார். அமெரிக்காவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம், அந்த நாட்டை கடந்து, உலகம் முழுவதும் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில் காரில் வந்த பெண் ஏன் லெமன் ஜூஸை ஊற்றினார்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் கீழ் நிலையில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை நாம் மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைவரும் மனதில் கொள்வது சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 16, 2024, 23:55 [IST]
English summary
Car wash viral video instant karma all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+