Just In
- 31 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது?
கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது என நீங்கள் எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்கள் இல்லாத உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது. அதேபோல் விண்டுஷீல்டு வைப்பர்கள் (Windshield Wipers) இல்லாத கார்களை கற்பனை செய்து பார்ப்பதும் மிகவும் கடினம். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பது போல, மழை வரும் நேரங்களில்தான் விண்டுஷீல்டு வைப்பர்களின் அருமை புரியும்.

இன்றைய நவீன கால கார்களின் முக்கிய பாகங்களில் ஒன்றாக விளங்கும் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது? யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? விண்டுஷீல்டு வைப்பர்கள் உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த கதை கடந்த 1866ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

விண்டுஷீல்டு வைப்பர்களை கண்டறிந்த மேரி ஆண்டர்சன் (Mary Anderson), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அன்றைய தினம்தான் பிறந்தார். அடிப்படையிலேயே புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டவராக மேரி ஆண்டர்சன் இருந்தார். இதன் விளைவாக உருவானதுதான் இன்றைய நவீன கால கார்களின் விண்டுஷீல்டு வைப்பர்கள்.

கடந்த 1902ம் ஆண்டு நியூயார்க் நகருக்கு மேரி ஆண்டர்சன் சென்றிருந்தார். அங்கு டிராம் (Tram) ஒன்றில் அவர் பயணித்தார். அது பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்த சமயம். இதனால் ட்ராமின் முன் பக்க கண்ணாடியில் பனி படர்ந்து கொண்டே இருந்தது. எனவே டிரைவர் அடிக்கடி ட்ராமை நிறுத்தி பனியை துடைத்து கொண்டிருந்தார்.

பனியை துடைப்பதற்காக ஒவ்வொரு முறையும் அவர் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்ட வேண்டியதாக இருந்தது. ஆனால் அவ்வாறு துடைத்தும் கூட, அவை முழுவதும் சுத்தமாகவில்லை. அத்துடன் இதனால் கால விரயமும் ஏற்பட்டது. இதனை பார்த்த மேரி ஆண்டர்சன் இந்த பிரச்னை தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும் என்று விரும்பினார்.

பின்பு அலபாமா திரும்பிய மேரி ஆண்டர்சன், புது டிவைஸ் ஒன்றை கண்டுபிடித்தார். ரப்பரால் செய்யப்பட்ட பிளேடு போன்ற அமைப்பு விண்டுஷீல்டில் அங்கும் இங்கும் சென்று பனி, மழை நீரை துடைக்கும் வகையில் இந்த டிவைஸ் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை டிராமுக்கு உள்ளே இருந்தபடியே டிரைவர்கள் லிவர் மூலமாக இயக்க முடியும்.

இதுதான் இன்றைய நவீன கால விண்டுஷீல்டு வைப்பர்களுக்கு அடிப்படை. ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத அன்றைய கால கட்டத்தில், மேரி ஆண்டர்சனின் கண்டுபிடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவித சந்தேக கண் கொண்டே பார்த்தனர். இது டிரைவர்களின் கவனத்தை சிதறடித்து விடும் என அவர்கள் கூறினர். இருந்தபோதும் மேரி ஆண்டர்சன் மனம் தளரவில்லை.

இந்த கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை கேட்டு, கடந்த 1903ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி அவர் விண்ணப்பித்தார். இதன்பின் 1903ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி, அமெரிக்க காப்புரிமை அலுவலகம் இந்த விண்டோ க்ளீனிங் டிவைஸிற்கு காப்புரிமை வழங்கியது. ஆனால் அந்த சமயத்தில் எந்தவொரு நிறுவனமும் மேரி ஆண்டர்சனின் ஐடியாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

யாரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்காததால், மேரி ஆண்டர்சன் இம்முறை சற்றே மனம் தளர்ந்து போனார். இதன்பின் கடந்த 1920ம் ஆண்டு அவரது காப்புரிமை காலாவதியானது. ஆனால் அந்த சமயத்தில்தான் ஆட்டோமொபைல்கள் வானளவிய வளர்ச்சியை பெற தொடங்கின. எனவே விண்டுஷீல்டு வைப்பர்களுக்கான தேவையும் உயர்ந்தது.

அதாவது மேரி ஆண்டர்சனின் காப்புரிமை காலாவதியான சமயத்தில்தான், விண்டுஷீல்டு வைப்பர்கள் அங்கீகாரம் பெற தொடங்கியிருந்தன. கேடிலாக்தான் (Cadillac) இந்த வைப்பர்களை அனைத்து கார் மாடல்களிலும் அறிமுகம் செய்த முதல் கார் உற்பத்தியாளர் (1922ம் ஆண்டில்). இதன்பின் அனைத்து நிறுவனங்களும் இதையே பின்பற்ற தொடங்கி விட்டன.

ஆரம்பத்தில் மேரி ஆண்டர்சனின் கண்டுபிடிப்பில் முதலீடு செய்ய யாருமே முன்வரவில்லை. ஆனால் இன்று அவரது கண்டுபிடிப்பு இல்லாத கார்களே கிடையாது. உண்மையில் ஹென்ரி ஃபோர்டு கார்களை உற்பத்தி செய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே, மேரி ஆண்டர்சன் விண்டுஷீல்டு வைப்பர்களுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்து விட்டார்.

ஆனால் இந்த கண்டுபிடிப்பில் இருந்து தனது வாழ்நாள் முழுவதும் மேரி ஆண்டர்சன் எந்தவித பொருளாதார பலன்களையும் துரதிருஷ்டவசமாக அறுவடை செய்யவில்லை. ஆம், அவர் தனது கண்டுபிடிப்பின் மூலம் கொஞ்சம் கூட பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் ஆட்டோமொபைல் வரலாற்றில் அவரது பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அதே சமயம் கார்களில் விண்டுஷீல்டு வைப்பர்கள் பயன்படுத்தப்படுவதை மேரி ஆண்டர்சன் எப்படியோ தன் வாழ்நாளில் பார்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு போராட்டங்களை சந்தித்த மேரி ஆண்டர்சன் கடந்த 1953ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.