தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், மர்மமாக உலா வந்த கார் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன், தீவிரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களை குறி வைத்து அடுத்தடுத்து தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இதில், சுமார் 360 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

குறிப்பாக இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்களே இதற்கு காரணம்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இந்த சூழலில் கேரள மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலா வந்து கொண்டிருந்த கார் ஒன்றை போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

கேரள மாநில போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பழைய தலைமுறை ஹோண்டா அக்கார்டு (Honda Accord) கார் ஆகும். சாம்பல் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் பூட் லிட்டில், சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் முகம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த கார் சமீப காலமாக இங்கு மர்மமான முறையில் உலா வந்து கொண்டிருந்தது. இந்த கார் சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, ஒசாமா பின்லேடனின் ஸ்டிக்கர் இருப்பதை மற்றொரு வாகனத்தில் இருந்த ஒருவர் கவனித்துள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

உடனே அவர் அதனை புகைப்படமும் எடுத்துள்ளார். இதுதொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்ததை அடுத்து நாங்கள் விசாரணையில் இறங்கினோம். ஒசாமா பின்லேடனின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள'' என்றனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கார், கேரளாவிற்கு மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசாரின் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த கார் போலீசாரின் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டபோது, மூன்று பேர் காருக்குள் இருந்தனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

உடனே அவர்கள் மூவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை அவர்கள் மூவரும் வெளியிட்டனர். கேரளாவில் பள்ளிமுக்கு என்ற இடம் உள்ளது. அந்த ஊரை சேர்ந்த ஒருவரிடம் இருந்துதான் இந்த காரை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

அத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றை முன்னிட்டு இந்த காரை வாடகைக்கு எடுத்ததாகவும் அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து காரின் உண்மையான உரிமையாளரை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அவரிடமும் தீவிர விசாரணையை தொடங்கினர்.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

அப்போது இந்த காரை சுமார் ஓராண்டுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வாங்கியதாக, அதன் காரின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காருக்கு இன்னும் என்ஓசி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இதனிடையே கார் பறிமுதல் செய்யப்பட்டபோது அதனுள் இருந்த 3 பயணிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் காரின் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தென் இந்திய மாநிலங்கள், குறிப்பாக கேரளா உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சமயத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவு அமைப்புகளும் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் சூழலில் மர்மமாக உலா வந்த கார்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இந்தியாவின் புதிய கார் மார்க்கெட்டை விட யூஸ்டு கார் (Used Car) மார்க்கெட் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு விலை உயர்ந்த லக்ஸரி கார்கள் கூட ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவே பலர் செகண்ட் ஹேண்டு கார் மார்க்கெட்டை நாடி செல்கின்றனர்.

ஒருவேளை நீங்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் கார் வாங்க திட்டமிட்டால், காரின் முழு சர்வீஸ் ஹிஸ்டரியையும் கேளுங்கள். அதேபோல் காரில் ஏதேனும் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பதையும் ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்து பாருங்கள்.

அதேபோல் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஏதேனும் ஒட்டப்பட்டிருக்கிறதா? என்பதையும் கூட ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்து விடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் மீது எந்த விதமான தவறும் இல்லாவிட்டாலும் கூட இதுபோன்ற வில்லங்கங்களில் சிக்கி கொள்ள நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Source: Manoramaonline

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2019, 19:07 [IST]
English summary
Car With Bin Laden Sticker Seized In Kerala. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+