விஜய், அஜித்திற்கு கூட இந்த விஷயம் தெரியாது! சூட்டிங்கில் பயன்படுத்தும் இந்த வேன்ல இவ்வளவு விஷயம் இருக்குதா?
சினிமா பிரபலங்கள் படப்பிடிப்பு நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வெடுப்பதற்காக கேராவேன்களை பயன்படுத்தி இருப்பார்கள். இதை நேரில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பலர் பார்த்திருக்கக்கூடும். இந்த கேரா வேன் குறித்து பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் திரை பிரபலங்கள் பயன்படுத்தும் பல வாகனங்கள் உண்மையிலேயே கேராவேன் கிடையாது. இது குறித்த விரிவான விபரங்களை தான் காணப் போகிறோம்.
சினிமா என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு தனிமனிதையும் சினிமா மிகப் பெரிய அளவுக்கு தாக்கி வருகிறது. இந்நிலையில் சினிமாவில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். இதனால் சினிமா நடிகர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது அங்கு படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக, படபிடிப்பிற்கு தயாராவதற்காக தனியாக ஒரு வேனை தயார் செய்து வைத்திருப்பார்கள். அங்கு உள்ளே அவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் இருக்கும். இந்த வசதிகள் கொண்ட வேனை கேராவேன் என பொதுவாக அழைக்கிறார்கள். இப்படியாக வெளி இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்தும் வாகனங்கள் மொத்தம் மூன்று விதமான வாகனங்கள் உள்ளன.
இன்று மொத்தம் மூன்று விதமான வாகனங்கள் இப்படியாக சூட்டிங் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கேராவேன், வெனிட்டி வேன், கேம்பர் வேன். இதில் கேராவேன் என்பது நாம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அந்த வேனில் உள்ளே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். வீட்டில் உள்ள பெட்ரூம் சோபா மட்டுமல்லாமல் கிட்சன் பாத்ரூம் வாஷ்பேஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த வேனில் இருக்கும். நாம் வீட்டில் இருப்பது போலவே இந்த வேன் உள்ளே இருக்க முடியும்.

ஆனால் இன்று சினிமா ஷூட்டிங்கில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது வேனிட்டி வேன் எனப்படும் வாகனம் தான். வேனிட்டி வேன் எனப்படுவது மேக் அப் வாகனமாகும். இந்த வாகனத்திற்கு உள்ளே ஒருவர் மேக்கப் போடுவதற்கான அனைத்து விஷயங்களும் இருக்கும். முக்கியமாக பெரிய கண்ணாடி அதன் முன்பே மேக்கப் பொருட்களை வைப்பதற்கான டேபிள், அவர்கள் அமர்ந்து மேக்கப் செய்வதற்கான சேர் மற்றும் ஸ்டூல்
மேக்கப் சாதனங்களை வைப்பதற்கான இடம், உடை மாற்றுவதற்கான அறை, இப்படியாக இந்த வாகனத்திற்கு உள்ளே செட்டப் செய்யப்பட்டிருந்தால் இது வேனிட்டி வேன் என அழைக்கப்படும். இங்கு கிச்சன்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது. வீட்டில் உள்ள மற்ற அறைகளில் உள்ள சாதனங்கள் எல்லாம் இந்த வேன் உள்ளே இருக்காது.

அடுத்ததாக கேம்பர் வேன். இந்த வாகனத்தின் பெயரை கேட்டாலே உங்களுக்கு எளிதாக புரிந்திருக்கும். நீங்கள் வெளியூருக்கு கேம்ப்க்கு செல்கிறீர்கள் என்றால் அந்த கேம்புக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்று இந்த வேனை வைத்தே கேம்ப் செட்டப் செய்வதற்கான அனைத்து தேவைகளும் இருக்கும்.
இந்த வேனிற்க்கு வெளியே ஓப்பன் செய்து கேம்ப் செட்டப் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். மற்ற வேனிட்டி வேன் மற்றும் கேராவேன் ஆகியவை முற்றிலும் மூடப்பட்டதாக இருக்கும். இதுதிறந்து கொள்ளும் வசதியுடன் கொண்ட வேனாக இருக்கும்.இது கேம்ப் செட்டப் செய்ய வசதியாக இருக்கும்.

இதில் கேராவேன்க்கு என சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது. இந்த கேரளா பயணத்தின் போது வாகனத்தின் உள்ளே இருக்கும் அனைத்து அம்சங்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். அனைத்து அம்சங்களும் பேட்டரியில் இயங்கும்படிதான். இந்த வாகனத்தை செட்டப் செய்திருப்பார்கள். ஆனால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிடையாது. இது வேனிட்டி ரக வேன்கள் தான்.
வேனிட்டி ரக வேன்கள் உள்ளே செட்டப் செய்யப்பட்டிருக்கும் பொருட்களை பயன்படுத்த வெளியில் இருந்து மின் சக்தியை உள்ளே செலுத்த வேண்டிய தேவை இருக்கும். உதாரணமாக மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதற்கு டிரையர் போன்ற அதிக மின் சக்தி தேவைப்படும் பொருட்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
இதற்கு பேட்டரியை பயன்படுத்தினால் அதிக நேரம் சார்ஜ் நிக்காது இதனால் இந்த வென்டிவினை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு வெளியில் இருந்து மின்சாரத்தை எடுத்து இந்த வேலன் உள்ளே செலுத்தினால் இந்த வேலைக்கு உள்ளே இருக்கும் அனைத்தும் நம் வீட்டில் உள்ள மின்சாரம் போல செயல்படும்.
இப்படி தான் படப்பிடிப்பு தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுவது தான் சிலர் நட்சத்திரங்கள் அவர்கள் தேவைக்கு ஏற்ப வேனிட்டி வேன்களில் கிச்சன்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கஸ்டமர்களை செய்து வருகிறார்கள். எவ்வளவு கஷ்டமைசேஷன் வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும். வெளியிலிருந்து மின் சக்தி வருவதால் அதை நாம் வீடு போல பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனால் கேராவேனை பயன்படுத்தும் போது அப்படியாக பயன்படுத்த முடியாது. அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் பேட்டரியில் இயங்கும் வகையான பொருட்களாக மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். இதனால் பெரும்பாலும் படபிடிப்பு தளங்களுக்கு கேராவேனை பயன்படுத்த மாட்டார்கள் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இதை பொதுவாக கேராவேன் என அழைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









