முன்ஜென்மத்தில் மலையாளியாக இருந்ததாக கார்ல் ஸ்லிம் நம்பிக்கை!
முன்ஜென்மத்தில் தான் ஒரு மலையாளியாக இருந்ததாக மறைந்த டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாராம்.
கார்ல் ஸ்லிம் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு, தன்னை ஒரு முழு மலையாளியாக மாற்றிக் கொள்ளவும் ஆசைப் பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிட நம்பிக்கை
இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் ஸ்லிம், இந்தியாவில் பணியாற்றுவதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்வதற்கு முன் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜோதிடத்தின் மீது கார்ல் ஸ்லிம்முக்கு திடீர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜோதிடரின் கூற்றுப்படி பல்வேறு விஷயங்கள் தனது வாழ்க்கையில் நடந்துள்ளதாக கருதியுள்ளார்.

முன்ஜென்மத்தில்...
முன்ஜென்மத்தில் ராமகிருஷ்ணன் என்ற மனிதராக கார்ல் ஸ்லிம் வாழ்ந்ததாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அவர் கூறியதை ஏற்றுக் கொண்டதுடன், அதனை தனது நெருங்கிய நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார்.

கேரளாவுக்கு முதல் பயணம்
கேரளாவுக்கு முதல் பயணம் மேற்கொண்டபோது, தனது முன்ஜென்மத்தில் ராமகிருஷ்ணன் கேரக்டருடன் முடிச்சுப் போட்டுக்கொண்டார். அது முதல் கேரளாவை தனது பூர்விக பூமியாக நினைக்கத் துவங்கியுள்ளார்.

அடிக்கடி கேரளா
மலையாளியாக இருந்ததாக நம்பிய கார்ல் ஸ்லிம் அடிக்கடி கேரளாவுக்கும் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஓய்வெடுக்க விரும்பினால் நேராக கேரளா வந்துவிடுவாராம்.

திருமண விழா
சில ஆண்டுகளுக்கு முன் ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரனின் மகள் திருமணம் குருவாயூர் கோயிலில் நடந்தது. இதற்கு மலையாளிகளின் பாரம்பரிய உடையணிந்து கார்ல் ஸ்லிம் வந்திருந்தாராம்.

வேஷ்டி மீது ஆர்வம்
முழு மலையாளியாக தன்னை மாற்றிக் கொள்ள ஆசைப்பட்ட கார்ல் ஸ்லிம் வேஷ்டி கட்டி பழகிக் கொண்டாராம்.

கேரளாவில் குடியேற விருப்பம்
ஓய்வுக்குப் பின் கேரளாவிலேயே நிரந்தரமாக குடியேற கார்ல் ஸ்லிம் திட்டமிட்டிருந்தாராம்.

கேரள ஸ்டைல் வீடு
கேரளத்தவர்களின் ஸ்லைடரில் வீடு ஒன்றை கட்டவும் அவர் ஆசைப்பட்டதாகவும் பிரபல மலையாள பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீட்டை சரியாக கட்டித் தருவதற்காக பாலேந்திரனிடம் கோரிக்கையையும் வைத்தாராம். இந்த நிலையில், அவரது மரணம், அவரது ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.


Click it and Unblock the Notifications








