மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்கு பதிலாக வந்த கார்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ... இது எங்கு நடந்தது!!

பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. சொகுசான பயணம், விரைவான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்கு மக்கள் பலர் இதை பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில் பெரும் போக்குவரத்தை தவிர்க்க பிரபலங்கள்கூட இந்த மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சூழலில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் ரயிலுக்கு பதிலாக கார்கள் சில அணிவகுத்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது, முதலில் உண்மைதானா என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Cars on a metro train track viral video

சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி என இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் மெட்ரோ ரயில் (Metro Rail) சேவைத் தொடங்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் அடுத்தகட்டமாக இரண்டாம் நிலை (மதுரை போன்ற) நகரங்களில்கூட மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே பயணிகள் சில மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்க, ரயில் பயணிக்கும் தண்டவாளத்தில் கார்கள் சில வரும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இது எப்படி சாத்தியம் ஆகும் என்றே இந்த சம்பவம் நம்மிடையே கேள்வியை எழுப்பி இருக்கின்றது.

அதேவேளையில், இது உண்மை சம்பவம் அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸால் உருவாக்கப்பட்டி வீடியோவே இதுவாகும். உண்மையில் இதுபோன்ற ஓர் சம்பவம் நடைபெறுவது சாத்தியமற்ற ஒன்றாகும். சமீபத்தில்கூட இதேபோல் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வாகனங்கள் சில இந்தியாவின் முக்கிய சாலை ஒன்றில் பயணிக்கும் வீடியோவே வெளியாகியது.

அந்த வீடியோவில் ஸ்கூபி டூ வேன், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் வரும் செவ்ரோலட் கேமரோ பம்பிள் பீ கார், பேக் டூ த ஃப்யூச்சர் படத்தில் வரும் டிலோரியன் டிஎம்சி 12 மற்றும் பேட்மொபைல் கார் ஆகியவையே இடம் பெற்றிருக்கின்றன. இந்த கார்கள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தன. எனவே பலர் இது உண்மை என்றே நம்பத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், கைதேர்ந்த கிராஃபிக் நிபுணர்களால் உருவாக்கப்பட்டதே அந்த வீடியோ ஆகும். இதேபோலவே மிகவும் தத்ரூபமாக இந்த கிராஃபிக் வீடியோவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவும் பார்த்த முதலில் நம்பும் வகையிலேயே இருக்கின்றது. ஆனால் கொஞ்சம் உற்று பார்க்கும்போதே அது ஓர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸால் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வருகின்றது.

இந்த வீடியோவில் இந்தியாவின் பிரபலமான கார் மாடல்களான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகியவையே இடம் பெற்றிருக்கின்றன. இரண்டு கார்களும் மிக மிக துள்ளியமாக, அதாவது, சாலையில் தோன்றினால் எப்படி இருக்குமோ அப்படியே இதிலும் காட்சியளிக்கின்றன. மேலும், இது இன்டஸ் கோ நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட கிராஃபிக் வீடியோ என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்டஸ்கோ விளம்பர பதாகை கார்களுக்கு இடையில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த இன்டஸ் கோ ஓர் கார் வாடகை நிறுவனம் ஆகும். நிறுவனத்தின்கீழ் பலதரப்பட்ட கார்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இவர்கள் மக்களை ரீச் செய்யும் நோக்கிலேயே இந்த விநோத யுக்தியை பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதற்கேற்ப பலரின் கவனத்தையும் அவர்கள் திசை திருப்பி இருக்கின்றனர். வாகன உற்பத்தியாளர்கள் பல கோடி ரூபாய்களை செலவிட்டு அவர்களின் கார்களை விளம்பரப்படுத்தி வருகின்ற சூழலில், இவர்கள் சிம்பிளாகவும், அதேவேளையில், அசத்தலாகவும் இந்த வீடியோவை உருவாக்கி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய வீடியோ கிரெட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இன்டஸ் கோ-வும் வாகனங்களைப் பயன்படுத்தி கிராஃபிக் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. கிரெட் ஓர் நிதி நிறுவனம் ஆகும். வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல ரீச் இருப்பதன் விளைவாகவே நிறுவனங்கள் வாகனங்களைச் சார்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 5:00 [IST]
English summary
Cars travel on metro rail track here we explain how
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+