இந்தியாவின் சிறந்த 'உள் அமைப்பு' கொண்ட கார் மாடல்கள்!!

Written By:

பல நூறு கார் மாடல்களை கொண்ட இந்திய கார் மார்க்கெட்டில், 10 லட்சம் ரூபாய் வரை எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட மார்க்கெட்டில்தான் எண்ணிக்கையின் அடிப்படையில் மாடல்களும், விற்பனையும் அதிகம். அதில், சிறந்த உள்ளமைப்பு அமைப்பு கொண்ட மாடல்களை தேர்வு செய்து வழங்கியிருக்கிறோம்.

தரமான பாகங்கள், சிறப்பான டிசைன் மற்றும் வசதிகளை வைத்து இந்த பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த முன் இருக்கை இடவசதி கொண்ட மாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளோம்.

ஒவ்வொரு செக்மென்ட்டிலும் முதன்மையான மாடலையும், அதற்கடுத்த ஆப்ஷன் கொண்ட மாடலின் விபரத்தையும் வழங்கியிருக்கிறோம். வாருங்கள், இந்தியாவின் சிறந்த இன்டிரியர் கொண்ட மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

ஆரம்ப நிலை கார் மார்க்கெட்டில் டாடா நானோ, மாருதி ஆல்ட்டோ, டட்சன் கோ ஆகிய கார் மாடல்கள் உள்ளன. இதில், ஹூண்டாய் இயான் காரின் உள்பக்கம் ரம்மியமாகவும், பிரிமியமாகவும் இருக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது, தரமான உதிரிபாகங்கள், கவர்ச்சியான வடிவமைப்பு போன்றவை இதனை பட்ஜெட் காராக கூற முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் சிறந்த இன்டிரியர் கொண்ட மாடல் ஹூண்டாய் இயான் மட்டுமே என்று கூற முடியும்.

செவர்லே பீட்

செவர்லே பீட்

ஆரம்ப நிலை கார்களுக்கு அடுத்த ஏ+ கார் செக்மென்ட்டில் ஸ்போர்ட்டியான இன்டிரியருடன் கவர்கிறது செவர்லே பீட். வெளிப்பறத் தோற்றம், இடவசதி மைனஸ் பாயிண்ட்டுகளாக இருந்தாலும், டேஷ்போர்டு டிசைன் செய்யப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, மீட்டர் கன்சோல் பிற கார் மாடல்களிலிருந்து மிக வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

இந்த செக்மென்ட்டில் தரமான உதிரிபாகங்கள், நாகரீகமான வடிவமைப்பு கொண்ட கார் ஹூண்டாய் ஐ10 கார். டொயோட்டா லிவா, மாருதி ரிட்ஸ், ஹோண்டா பிரியோ கார்களை ஒப்பிடுகையில் இந்த கார் சிறப்பானதாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், தரமானதாகவும் இருக்கிறது.

 ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

பட்ஜெட் ஹேட்ச்பேக் மாடல்களை விட்டு, சற்று பிரிமியம் கார் மாடலை விரும்புவோர்க்கு ஹூண்டாய் எலைட் ஐ20 கார்தான் மிகச்சிறப்பானது. சிறப்பான டிசைன், தரமான பிளாஸ்டிக் பாகங்கள், வசதிகள் மற்றும் இடவசதி என அனைத்திலும் நிறைவை தருகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு அடுத்து ஃபோக்ஸ்வேகன் போலோ கார் சிறப்பான டிசைன் கொண்டிருப்பதுடன் தரமாகவும் இருக்கிறது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் மிகச் சிறப்பாக இருக்கிறது. உட்புறத்தில் மட்டுமல்ல, வெளிப்புறத்த தோற்றம், கட்டுமானத் தரம் என அனைத்திலும் சிறந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் சிறப்பான இன்டிரியர் அமைப்பும், இடவசதியும் கொண்ட மாடல் டாடா ஸெஸ்ட். அத்துடன், போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காருக்குள் ஒரு பிரிமியமான உணர்வை ஏற்படுத்துகிறது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

தரமான பிளாஸ்டிக் பாகங்கள் பயன்பாடு, நாகரீகமான டிசைன், வசதிகள் என அனைத்திலும் நிறைவை தரும் இன்டிரியரை கொண்ட மாடல் மாருதி டிசையர். முன் இருக்கைகளின் இடவசதியும் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் இன்டிரியர்தான் சிறப்பானதாக கூற முடியும். டிசைனில் கவர்ச்சியாகவும், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதும் இதன் மீதான ஈர்ப்பு குறையாத வகையில் உள்ளது.

 ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

மாருதி எஸ் க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா என இரண்டு காம்பேக்ட் எஸ்யூவி வகை மாடல்களின் இன்டிரியரும் சிறப்பாக இருக்கிறது. ஒப்பீட்டளவில், ஹூண்டாய் க்ரெட்டா சிறிதளவு முன்னிலை பெறுகிறது. வழக்கம்போல் ஹூண்டாய் மாடல்களின் இன்டிரியர் தரமும், டிசைனும் இந்த காரை முன்னிலை பெறச் செய்வதுடன், வசதிகளிலும் குறைவில்லை.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி சிறந்த மாடல். வெளிப்புற டிசைன் மட்டுமின்றி, உட்புறத்தில் தரமான பாகங்கள், நவநாகரீக டிசைன் நெஞ்சை அள்ளுகிறது. இடவசதியிலும் மிகச்சிறப்பான மாடல். இதுதான் ஹோண்டா சிட்டி பிராண்டுக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் போன்ற கார்கள் தரத்தில் சிறப்பாக இருக்கின்றன. மாருதி சியாஸ் காரின் இன்டிரியர் குறை சொல்ல முடியாது. அதேநேரத்தில், தரமான பாகங்களுடன் கூடுதல் கவர்ச்சியான இன்டிரியரை பெற்றிருப்பது ஹூண்டாய் வெர்னா 4எஸ் கார் என்பதுதான் சரியாக இருக்கும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are some Car Models available with Best Interiors in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark