வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டியிருந்தால் கடும் நடவடிக்கை... காவல் துறை புதிய உத்தரவு... என்னனு தெரியுமா?
வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களில் ஸ்டிக்கர்கள் வாயிலாக சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா மாநிலம் குர்கான் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த விதிமீறல் கண்டறியப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கும் வகையில், இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். இந்த புதிய உத்தரவு தொடர்பான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டு விட்டது. எனவே அவர்கள் உடனடியாக நடவடிக்கையை தொடங்கவுள்ளனர்.

வாகனங்களின் எந்த பகுதியிலும் சாதிய அடையாளங்களை ஸ்டிக்கர்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடாது. குறிப்பாக நம்பர் பிளேட்டில் அத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ''நாங்கள் சோதனை செய்யும் ஒவ்வொரு 20 வாகனங்களிலும் ஒரு வாகனம் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களுடன் வருகிறது'' என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடுப்பதற்காகவும், நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்காகவும், குர்கான் காவல் துறையினர் சிறப்பு வாகன தணிக்கையை நடத்தவுள்ளனர். கார், மோட்டார்சைக்கிள் உள்பட எந்தவிதமான வாகனத்திலும், எந்த வகையிலும் சாதிய அடையாளங்களை வெளிக்காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க கூடாது.

இந்த உத்தரவை மீறினால், வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சாலையில் தங்கள் சமூக அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக வாகன உரிமையாளர்கள் இந்த காரியத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் எவ்வளவு அபராதம் விதிக்கவுள்ளனர்? என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால் இந்த பிரச்னை குர்கானில் மட்டுமல்லாது, கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. வாகனங்களின் நம்பர் பிளேட்கள், விண்டு ஸ்க்ரீன்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகன உரிமையாளர்கள் பலர் ஒட்டி வருகின்றனர்.

எனவே அத்தகைய வாகன உரிமையாளர்கள் மீது தற்போது நாடு முழுவதும் படிப்படியாக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குர்கான் காவல் துறையினருக்கு முன்னதாகவே, உத்தர பிரதேச மாநில காவல் துறையினர், அத்தகைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கி விட்டனர். உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை மீறலுக்காக ஏற்கனவே பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் நாட்களில், இந்தியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த காவல் துறையினரும், வாகனங்களில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஸ்டிக்கர்கள் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தலாம் என்பதால், காவல் துறையினரின் நடவடிக்கை அவசியமாகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








