China EV Battery Maker 1000கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரியை தயாரித்து சாதனை! இனியுமா பெட்ரோல் வண்டிய வாங்க போறீங்க!

சீனாவைச் சேர்ந்த ஓர் பேட்டரி உற்பத்தி நிறுவனம், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணிக்கும் ரேஞ்ஜை வழங்கக் கூடிய புதிய பேட்டரி பேக்கை தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேட்டரி பேக் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீனாவைச் சேர்ந்த முன்னணி பேட்டரி உற்பத்தி நிறுவனம் ஒன்று ஓர் முழு சார்ஜில் 1,000 கிமீ பயணிப்பதற்கான மின்சார திறனை சேமித்து வைக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக்கை தயாரித்து அசத்தி இருக்கின்றது. இது மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பேட்டரி பேக் ஆகும்.

Ev battery maker unveils its strongest unit

வெகு விரைவில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்கள் பலவற்றில் இந்த பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. கான்டெம்பரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கோ. லிமிடெட்., (CATL) எனும் நிறுவனமே இத்தகைய சூப்பரான பேட்டரி பேக்கை தயாரித்து மின்சார வாகன உலகையே திரும்பி பார்க்க செய்திருக்கின்றது.

2023 ஷாங்காய் ஆட்டோ ஷோ-விலேயே இந்த பேட்டரி பேக்கை சிஏடிஎல் நிறுவனம் வெளியீடு செய்தது. இதனை எலெக்ட்ரிக் விமானங்களிலும் எதிர்காலத்தில் பயன்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், முதலில் எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த பேட்டரி பேக் பயன்படுத்தப்படுமா? அல்லது எலெக்ட்ரிக் ஏர்கிராஃப்டில் இடம் பெறுமா?, என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழும்பி இருக்கின்றது.

Catl super strong battery

ஆனால், ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியபோது ஓர் வாகனத்தின் ஃப்ரேமில் வைத்தே அது காட்சிப்படுத்தப்பட்டது. புதிய பேட்டரி பேக்கின் எலெக்ட்ரிக் டென்சிட்டி மிக அதிகம் என சிஏடிஎல் தெரிவித்து இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கின் ஒரு கிலோகிராமிலேயே 500 watt-hours மின்சார திறனை சேமித்து வைத்துக் கொள்ள முடியுமாம்.

இதனை சிஏடிஎல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான உ கை உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த பேட்டரி பேக்கிற்கு நிறுவனம் குலின் (Quilin) எனும் பெயரை சூட்டி இருக்கின்றது. இதன் எனெர்ஜி டென்சிட்டி 255 Wh/kg ஆகும். கன்டென்சட் ஸ்டேட் பேட்டரி எனும் தொழில்நுட்பத்தில் குலின் பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருப்பதாக சிஏடிஎல் தெரிவித்து இருக்கின்றது.

இதுவே இந்த பேட்டரி பேக்கை விலை மலிவானதாக தயாரிக்க உதவியாக இருந்திருக்கின்றது. அதேவேளையில், இதன் பாதுகாப்பு தன்மையும் பலமடங்கு அதிகம் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த பேட்டரி பேக் மின்சார வாகன உலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் (புரட்சியைச் செய்யும்) என எதிர்பார்க்கப்படுகின்றது.

குலின் பேட்டரியின் உற்பத்தியை விரைவில் தொடங்க நிறுவனம் சிஏடிஎல் திட்டமிட்டு உள்ளது. ஆகையால், இன்னும் ஒரு சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகின்றது. இதைத்தொடர்ந்து, மின்சார ஏர்கிராஃப்டிலும் தன்னுடைய பங்களிப்பை வழங்க இருப்பதாக நிறுவனம் கூறி இருக்கின்றது. இதற்காக நிறுவனம் விரைவில் விமான உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டணியைத் தொடங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதுதவிர வேறு எந்த முக்கிய விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் மின்சார வாகனங்களுக்கு அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் ரேஞ்ஜ் திறன் போதுமானதாக இல்லை என பலர் கருத்துகின்றனர். பட்ஜெட் விலைக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓர் முழு சார்ஜில் 400கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜையே வழங்குகின்றன.

கோடி ரூபாயை விலையாகக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே ஓர் முழு சார்ஜில் 500கிமீ - 600கிமீ வரையில் ரேஞ்ஜை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன உலகில் புரட்சியை செய்யும் விதமாக சீன பேட்டரி உற்பத்தி நிறுவனம் முழு சார்ஜில் 1000கிமீ ரேஞ்ஜை வழங்கும் பேட்டரியை தயாரித்து அசத்தி இருக்கின்றது. இது விற்பனைக்கு வந்தால் மின்வாகன உலகையே தலை-கீழாக புரட்டி போட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 21:05 [IST]
English summary
Catl unveils 1000 km range battery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+