ரூ36 லட்சத்திற்கு தயாரான தங்க சைக்கிள்! தயாரிச்சது போர்ஷே நிறுவனம் தான்!

கேவியர் என்ற நிறுவனம் தனது முதல் இ- பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கிற்கு ஹெர்ஸாக் என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இது ஒரு கஷ்டமைஸ்டு இ-பைக் ஆகும். இதன் விலையை பொறுத்த வரை ரூ36 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு இந்த இ-பைக்கில் என்ன இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

கேவியர் என்ற நிறுவனம் பல்வேறு விதமான கேட்ஜெட்களை மாஸ்டர் பீஸ்களாக மாற்றும் பிசினஸை செய்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள், கேமிங் கண்ட்ரோல், ஸ்மார்ட் வாட்ச், ஏன் ஷூக்களை கூட மாஸ்டர் பீஸ்களாக மாற்ற இந்நிறுவனம் பல்வேறு விதமான ஐடியாக்களை செய்து வருகிறது. இப்படியான பல்வேறு விதமான தயாரிப்புகளை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

caviar gold plated bike

இந்நிலையில் இந்நிறுவனம் முழுமையாக கஸ்டமைஸ் செய்யக்கூடிய முதல் லக்ஸரி இ-பைக்கை தயாரித்துள்ளது. இ பைக் என்றால் சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி இயங்கக்கூடிய வாகனமாகும். இந்த கேவியர் நிறுவனத்திற்கு 39 % பங்கை போர்ஷே என்ற கார் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளது. பேர்ஷே நிறுவனம் சிறப்பான வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் இ-பைக்கிற்கு ஹெஸாக் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெர்ஸாக் என்ற இ- பைக் போர்ஷே நிறுவனத்தின் காரை போல வெகு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறலாம். இந்த இ-பைக்கை போர்ஷே இ பைக் கிராஸ் மூன்றாம் தலைமுறை வாகனம் எனவும் அழைக்கிறார்கள். இதனால் இது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. போர்ஷே என்ற பெயர் இருப்பதால் பலர் இதை வாங்க நினைக்கிறார்கள்.

caviar gold plated bike

இதை வாங்க நினைக்கும் பலர் இதைப்பற்றி பார்க்கும் போது பல்வேறு விதமான அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. இந்த இ-பைக் ஸ்லிக்கான மற்றும் ஸ்போர்ட்டியான டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பவர் ஃபுல்லான ஹிம்மானோ மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சிறப்பான டிசைன் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சொகுசான ரைடு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெர்ஸாக் இ-பைக் ஒரு சிறந்த வடிவமைப்பின் அடையாளமாக இருக்கிறது. இந்த இ-பைக் 18 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கியுள்ளார்கள் .
ஒரு வாகனத்தை உருவாக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொண்டார்கள். ஒரு நகையை எவ்வளவு பார்த்து பார்த்து உருவாக்குவார்களோ அதுபோல இந்த இ-பைக்கை உருவாக்கி உள்ளார்கள்.

caviar gold plated bike

பல சொகுசு வாகனங்களை கலெக்ட் செய்யும் நபர்கள் இதை வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக போர்ஷே நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். இந்த இ-பைக்கின் பெயரான ஹெர்ஸாக் என்ற பெயருக்கும் போர்ஷே நிறுவனத்திற்கும் பல்வேறு விதமான தொடர்புகள் இருக்கிறது. இந்த பெயருக்கும் பல்வேறு விதமான தொடர்புகள் இருப்பதால் இந்த பெயரை நிறுவனம் வைத்துள்ளது.

இந்த இ-பைக் குறித்த டெக்னிக்கல் அம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதன் டிசைன் குறித்த தகவல் மட்டுமே நமக்கு வெளியாகி உள்ளது. 2025ம் ஆண்டு இது விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ-பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் போது 44 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 36 லட்சம் ஆகும்.

caviar gold plated bike

இவ்வளவு காஸ்ட்லியான விலைக்கு பல சொகுசு கார்களை வாங்கிவிடலாம் என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்ட இ பைக் என்பதால் இவ்வளவு அதிகமான விலை இருக்கிறது. இது மட்டுமல்ல இந்த ஹெர்ஸாக் இபைக்கை வாங்குபவர்களுக்கு அந்நிறுவனம் பிரத்தியேகமாக கேவியர் டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஐபோன் 6 போன் இலவச பரிசாக வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு காஸ்டிலியாக தங்கத்தால் செய்யப்பட்ட இ-பைக்கை அந்நிறுவனம் தயாரித்துள்ளது கலெக்ஷன் செய்பவர்கள் வாங்குவார்கள் என்ற எண்ணத்தில் தான். இது கமர்சியல் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரப்போவதில்லை. பெரும்பாலும் இந்த இ-பைக் விற்பனைக்கு வரும்போது அது ஏலத்திற்கு விடப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தயாரிப்புகள் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 10:56 [IST]
English summary
Caviar gold plated bike unveils porsche ebike worth rs 36lakhs
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X