பெட்ரோல் போட வரும் வண்டிகளுக்கு குறி வச்ச அரசு! இது இல்லாம இனி பெட்ரோல் போட போயிடாதீங்க!
டில்லியில் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக அம்மாநில அரசு புதிய யுக்தி ஒன்றை தற்போது கையில் எடுத்துள்ளது. இதன்படி அம்மாநிலத்திற்குள் புகை சான்று இல்லாமல் இயங்கும் வாகனங்களை குறிவைத்து பிடிப்பதற்காக புதிய டெக்னாலஜி ஒன்றை பயன்படுத்தப் போகிறார்கள். இது தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக இருக்கிறது. அம்மாநிலத்தில் குளிர்காலங்களில் காற்று மாசு காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்திருக்கும். இந்நிலையில் காற்று மாசுவை குறைப்பதற்காக நம் மாநிலத்தில் பல்வேறு விதமான சட்ட விதிமுறைகள் அமலில் உள்ளது.

முக்கியமாக அதிகமாக மாசுகளை வெளியேற்றும் வாகனங்களை அம்மாநிலத்திற்குள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அம்மாநிலத்திற்குள் புகை சான்று இல்லாமல் பயணிக்கும் வாகனங்களை கண்காணிப்பதற்காக தற்போது புதிய யுக்தி ஒன்றை மாநில அரசு கையாள உள்ளது. இதன்படி மாநிலத்திற்குள் புகை சான்று இல்லாமல் வாகனங்கள் எதுவும் இயங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.
இதற்காக டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மாநில அரசு சார்பில் ஆங்காங்கே ஸ்மார்ட் கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் கேமராக்கள் பெட்ரோல் பங்குகளுக்கு வரும் வாகனங்களை கேப்சர் செய்து அதில் உள்ள வாகன பதிவு எண்ணை வைத்து குறிப்பிட்ட வாகனத்திற்கு புகை சான்று இருக்கிறதா இல்லையா என்பதை ஆன்லைன் மூலம் கண்காணிக்கும்.

இப்படியாக புகை சான்று இல்லாமல் வரும் வாகனங்களை கண்காணித்து பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்களுக்கு குறிப்பிட்ட வாகனத்தில் புகை சான்று இல்லை என்பதை தெரியப்படுத்தும். பெட்ரோல் பங்கில் உள்ள ஊழியர்கள் இந்த தகவலை வாகனத்தில் உள்ள டிரைவரிடம் சொல்லி உடனடியாக புகை சான்று எடுக்கும்படி அறிவுறுத்துவார்கள். மேலும் அந்தப் பெட்ரோல் பங்கிலேயே புகை சான்று எடுப்பதற்கான வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படியாக ஒரு வாகனம் புகை சான்று இல்லாமல் பெட்ரோல் போட வந்து மாநில அரசின் கேமராவில் சிக்கிவிட்டால், குறிப்பிட்ட பதிவெண்ணை தொடர்ந்து கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் புகை சான்று என்பது எடுக்கப்பட்டு ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து அந்த வாகன ஓட்டி வாகனத்தை பயன்படுத்தலாம்.

ஒருவேளை கேமராவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த பின்பும் 3 மணி நேரத்திற்குள் புகை சான்று அப்டேட் செய்யப்படவில்லை என்றால், குறிப்பிட்ட கேமரா பதிவையே ஆதாரமாக வைத்து அம்மாநில போக்குவரத்து துறை குறிப்பிட்ட வாகனத்திற்கு புகை சான்று இல்லாமல் இயங்கியதற்காக ரூ 10,000 அபராதம் விதித்து அபராத செல்லான்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைப்பார்கள்.
தற்போது பெட்ரோல் பங்குகளில் இந்த சிசிடிவி கேமராவை பொருத்துவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் டில்லியில் உள்ள 500 பெட்ரோல் பங்குகளில் இந்த கேமராவை பொருத்தி வாகனங்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 100 பெட்ரோல் பங்குகளில் இந்த கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துவிட்டன.
அம்மாநில அரசிடம் உள்ள தரவுகளின் படி டெல்லியில் மொத்தம் 22 லட்சம் வாகனங்கள் முறையான புகை சான்று இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அதில் 19 லட்சம் வாகனங்கள் டூவீலர்களாக உள்ளன. பாக்கி உள்ள மூன்று லட்சம் வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாக உள்ளன. இவை அனைத்தையும் புகை சான்று பெற்ற வாகனங்களாக மாற்றுவதற்காக தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காற்று மாசு என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதுவும் டெல்லியில் காற்று மாசு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இருப்பதால், அங்கு இது போன்ற தொழில்நுட்ப உதவியுடன் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. டில்லி மாநில அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









