தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கிய சியட்... நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல நடிகர் நியமனம்!
சியட் டயர்ஸ் (CEAT Tyres) நிறுவனம் அதன் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனம் சியட் டயர்ஸ் (CEAT Tyres). இந்நிறுவனம் அதன் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் கார்த்திக் சிவகுமாரை நியமித்துள்ளது. இந்நிறுவனம், இருசக்கர வாகனம், கார்கள், கனரக வாகனங்கள் என அனைத்திற்குமான டயர்களையும் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை செய்து வருகின்றது. இந்த நிலையிலேயே தனது செக்யூரா டிரைவ் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் டயர்களை புரமோட் செய்யும் வகையில் நடிகர் கார்த்திக் சிவகுமாரை நிறுவனம் நியமித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுக்கான பிராண்ட் அம்பாசிடர்களை பாலிவுட் திரையுலகில் தேர்வு செய்து வரும் நிலையில் சியட் நிறுவனம் டோலிவுட் திரையுலகைத் தேர்வு செய்திருக்கின்றது. மிகவும் பிரபலமான முகமாக நடிகர் கார்த்திக் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்த காரணத்திற்காகவே அவரை சியட் டயர்ஸ் நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.

சியட் நிறுவனம் தனது செக்யூரா டிரைவ் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் டயர்களை அனைத்து பிரிவுகளிலும் விளம்பரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. டிவி விளம்பரங்கள், ஆன்லைன் மற்றும் ஆஃப்-லைன் (செய்தி தாள் மற்றும் புத்தகங்கள்) போன்ற வெவ்வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்ய இருக்கின்றது.

தேசிய அளவில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. இவற்றில் டயர்களை சந்தைப்படுத்தும் நபராகவே நடிகர் கார்த்திக் இடம் பெற இருக்கின்றார். ஏற்கனவே, இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக சியட் டயர்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து விளம்பரங்களும் சியட் டயர்களின் எந்தளவிற்கு சிறப்பானவை என்பதை விளக்கும் வகையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓகில்வி (Ogilvy) வாயிலாக எடுக்கப்பட்டிருக்கும் ஓர் விளம்பர வீடியோ டயரின் உயர் தரத்தை வெளிக்காட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எந்த மாதிரியான சூழ்நிலையையும் அது சமாளிக்கும் என்பதே விளம்பரத்தின் சிறப்பம்சமாக இருக்கின்றது.

சர்ப்ரைஸ்களுக்கு குறைச்சலில்லாததே சாலைகள். அங்கு எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுமாதிரியான சாலைகளில் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே சியட் டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிக சிறந்த பிரேக்கிங் மற்றும் பிடிமானம் வசதிக் கொண்டதாகவும் அவை காட்சியளிக்கின்றன.

இவற்றை வெளிக்காட்டும் வகையிலேயே நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்கள் காட்சியளிக்க உள்ளன. அவற்றை நடிகர் கார்த்தி கூடுதலாக விளம்பரங்கள் வாயிலாக தெளிவுப்படுத்த இருக்கின்றார். சியட் செக்யூரா டிரைவ் டயர்கள் பிரிவில் பிரீமியம் செடான்கள் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான டயர்களை வழங்கும் பிரிவாக இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கொரல்லா, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி என பல வகையான கார்களுக்கு இப்பிரிவில் டயர்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இவற்றையே நிறுவனம் பிரத்யேகமாக விளம்பரம் செய்ய இருக்கின்றது. சியட் செக்யூரா டிரைவ் டயர்கள் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இன்டஸ்டிரியிலேயே முதன் முதலாக நிறுவனம் 3டி க்ரூவ் வால் மற்றும் ஸ்மார்ட் கம்பவுண்டிங் தொழில்நுட்பங்களில் டயர்களை உருவாக்கி வருகின்றது.

இவை சூப்பீரியர் டிரைவிங் கன்ட்ரோலை வழங்குகின்ற வகையிலான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஈரமான மற்றும் காய்ந்த சாலைகள் எதுவாக இருந்தாலும் மிக சிறந்த இயக்க அனுபவத்தை அது வழங்கும். தொடர்ந்து, சாலையில் செல்லும்போது கம்ஃபோர்டான டிரைங் அனுபவத்தை வழங்கும் வகையில் அவை குறைவான சப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








