டூ-வீலர்களுக்கான புதிய சியட் டயர் விற்பனைக்கு அறிமுகம்.. ஒரு செட்டோட விலையே இவ்ளோதானா!
புகழ்பெற்ற டயர் உற்பத்தி நிறுவனமான சியட் (CEAT), உயர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கான புதிய டயர் (Tyre) வகைகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது டூ-வீலர்களுக்கான பிரத்யேக டயர் (Two Wheeler Tyre) ஆகும். இந்த டயர் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த டயர் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சியட் (CEAT), புதிய ஒரு ஸ்டீல் ரேடியல் வகை டயரை (Steel Rad tyre) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது உயர் வகை மோட்டார்சைக்கிள்களுக்கான டயர் ஆகும். இரண்டு விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

ஸ்போர்ட்ரேட் (SPORTRAD) மற்றும் கிராஸ்ரேட் (CROSSRAD) என இரு விதமான தேர்வுகளில் புதிய டயர் விற்பனைக்குக் கிடைக்கும். உயர் செயல்திறன்மிக்க பைக்குகளின் செயல்திறனை மேலும் கூட்ட இந்த டயர் பெரும் உதவியாக இருக்கும். இதற்கேற்பவே புதிய ஸ்டீல் ரேடியல் வகை டயர்களை சியட் தயார் செய்திருக்கின்றது.
அதேவேளையில், ஒவ்வொரு தேர்வும் வெவ்வேறு விதமான இயக்க அனுபவத்தை வழங்கும் வகையில் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், ஸ்போர்ட்ரேட் அதீத வேகத்தைக் கையாளவும் மற்றும் மிக சிறந்த திருப்பத்தை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஸ்போர்ட்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இந்த டயர் மிகுந்த உதவி அளிக்கக் கூடியதாக இருக்கும்.

அதேவேளையில், இதன் கிராஸ்ரேட் தேர்வானது எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் வசதியைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. நம்மில் ஒரு சிலர் அட்வென்சர் பயணத்தை மேற்கொள்வதில் அதிகம் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த மாதிரியானோரின் பயணத்தை சிறப்பானதாக மாற்ற கிராஸ்ரேட் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், இது ஓர் ஸ்டீல் ரேடியல் டயர்கள் என்பதால் அவ்வளவு எளிதில் அது பாதிப்பைச் சந்திக்காது என தெரிகின்றது. மேலும், நீடித்து உழைக்கும் தன்மையும் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்டீல் ரேடியல் என்பது, அந்த டயரின் உருவாக்கத்தில் ஸ்டீல் பெல்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதே பொருள் ஆகும்.
இதுவே ஆக சிறந்த ஹேண்ட்லிங் மற்றும் ஸ்பீடை வெளிப்படுத்தவும் உதவியாக இருக்கின்றது. கிராஸ்ரேட் ஒரு செட் ரூ. 4,300 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இந்த டயர் தேர்வு யமஹா எஃப்இசட் மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் போன்ற பைக் மாடல்களுக்கே பொருத்தமானதாக இருக்கும்.
ஸ்போர்ட்ரேட் வகை டயர் அதிக செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள்களான கேடிஎம் ஆர்சி390, ட்யூக் 390, பஜாஜ் டோமினார் 400, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்ட பைக்குகளுக்கு பொருத்தமானது ஆகும். இந்த டயரின் ஒரு செட் ரூ. 12,500 ஆகும். ஸ்போர்ட்ரேட் தேர்வு மிட்-கிரவுன் போன்ற பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுவே பள்ளங்களை சமாளிக்கவும், அதிக கிரிப்பான ரைடை வழங்கவும் உதவியாக இருக்கின்றது. இந்த டயரை சிலிக்கா கலவையைக் கொண்டே சியட் தயாரித்து இருக்கின்றது. மேலும், இதுவே டயரின் விறைப்புத் தன்மைக்கு பெரும் உதவியாக இருக்கின்றது. தொடர்ந்து, நம்முடைய எதிர்பார்ப்பை மீறிய ஸ்போர்ட்டி செயல்திறனை இதில் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
குறிப்பாக, ஈரமான சாலை, சட்டென் திருப்பங்களில்கூட அது அதன் அதீத செயல்பாட்டை வழங்கும் என்று சியட் கூறி இருக்கின்றது. இதற்கு ஸ்போர்ட்ரேட்டின் ஸ்லீக் வகை ஷோல்டரும் ஓர் காரணம் என தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், மணிக்கு 270கிமீ வேகத்தில்கூட இந்த டயரின் வாயிலாக பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இதேபோல், கிராஸ்ரேட் அதிக பயனை வழங்கக் கூடியதாகவும், ஆஃப்-ரோடு பயன்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பை இது பூர்த்து செய்யும் என்றும் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா இரண்டு சக்கர வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாகும். இதனால்தான் இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக சியட் தற்போது புதிய வகை ஸ்டீல் ரேடியல் டைப் டயரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் வகை டயர் ஆகும். இதற்கு என்ன மாதிரியான வரவேற்பு சந்தையில் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








