ஸ்டீல்பேர்டு கொண்டு வந்திருக்கும் சிறப்பு பதிப்பு ஹெல்மெட்.. விநாயகரே இனி உங்க தலமேலதான்!
இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கினை தலைக்கவசங்கள் (helmet) வகிக்கின்றன. இந்த ஹெல்மெட் தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது ஸ்டீல்பேர்டு (Steelbird). டூ-வீலர் ரைடர்களுக்கான பலதரப்பட்ட பாதுகாப்பு கியர்களை அது தயாரித்து வருகின்றது. இந்த பிராண்டே தற்போது கடவுள் விநாயகர் பிரியர்களைக் கவரும் விதமாக ஓர் சிறப்பு பதிப்பு தலைக்கவசத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அந்த தலைக்கவசம் எஸ்பிஎச்-34 கணேஷ் எடிசன் (SBH-34 Ganesh Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதன் சிறப்பே விநாயகரை பிரதிபலிக்கும் கிராஃபிக்குகளைக் கொண்டிருப்பதுதான். விநாயகர், அவரின் வானமாக கருதப்படும் எலி, ஸ்வஸ்திக், திரிசூலம், பட்டை மற்றும் கோவிலின் சின்னம் ஆகியவையே இந்த ஹெல்மெட்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், கோவில் மணிகளும் இதில் இடம் பெற்றிருக்கும்.

அதிக பாதுகாப்பு தரும் ஹெல்மெட்டில் கடவுள் நம்பிக்கை ஊட்டும் விதமாக ஸ்டீல்பேர்டு இந்த ஹெல்மெட்டை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டே இந்த ஹெல்மெட்டை அது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த ஹெல்மெட்டை க்ளாஸ்ஸி மற்றும் மேட் என இரண்டு விதமான வண்ண பூச்சுகளிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இத்துடன் பலதரப்பட்ட வண்ண தேர்வுகளிலும் இந்த ஹெல்மெட் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பு மற்றும் தங்க நிறம், கருப்பு மற்றும் கிரே, கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய வண்ண தேர்வுகளிலேயே இந்த ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த ஹெல்மெட் அதிக பாதுகாப்பை தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில் உயர் தர தெர்மோ பிளாஸ்டிக்கினால் ஆன கூட்டைக் கொண்டே இந்த ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு தயார் செய்திருக்கின்றது.
இது பாதுகாப்பை உறுதிப்படுத்தும், அத்தோடு அதிக கம்ஃபோர்ட்டான உணர்வையும் இது வழங்கும். இதைத்தொடர்ந்து, அதிகபட்ச தாக்கத்தை உறிஞ்சிக் கொள்ளும் விதமாக அதிக அடர்த்தி கொண்ட இபிஎஸ் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுவும் ரைடரின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். மேலும், இதன் கண்ணாடியில் ஸ்கிராட்சை தவிர்க்கும் வசதியும் வழங்கப்பட்டு இருப்பதாக ஸ்டீல்பேர்டு தெரிவித்து இருக்கின்றது.

இது ஸ்கிராட்சை தவிர்க்கும் திறன் கொண்டது மட்டுமல்ல, துள்ளியமான பார்வையை வழங்கும் மற்றும் எதிர் வாகனங்களின் அதிக பிரகாசமான வெளிச்சத்திலும் இது பார்வை திறனை வழங்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், ரைடரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஹெல்மெட்டின் பின் பக்கத்தில் பிளாஸ்டிக்காலான ரெஃப்ளக்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
எனவே இந்த ஹெல்மெட் பாதுகாப்பான பயணம் மற்றும் கம்ஃபோர்ட்டான பயணம் என இரண்டிற்கும் வழிவகுக்கும் என தெரிகின்றது. தொடர்ந்து, இந்த ஹெல்மெட்டை மீடியம் (580 மிமீ), லார்ஜ் (600 மிமீ) ஆகிய அளவுகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், இந்த ஹெல்மெட்டிற்கு அறிமுக விலையாக ரூ. 1,349 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
அனைவரும் எஸ்பிஎச் 34 கணேஷ் எடிசன் ஹெல்மெட்டை வாங்கிக் கொள்ளும் பொருட்டு இந்த அளவு குறைவான விலை அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டீல்பேர்டு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், அநேகரால் இந்த ஹெல்மெட்டை வாங்கி பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இரண்டு சக்கர வாகன ஓட்டி மட்டுமல்ல அவருக்கு பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்த மாதிரியான ஓர் அம்சத்திலேயே கடவுளின் உருவத்தை வழங்கி, இதன் வாயிலாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது ஸ்டீல்பேர்டு.


Click it and Unblock the Notifications









