டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரித்த நட்சத்திர பட்டாளம்!

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச வாகனக் கண்காட்சி வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாட்களில் நடந்த பல்வேறு வாகனங்கள் அறிமுக விழாவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.

அவ்வாறு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு வந்து, விழா மேடைகளை அலங்கரித்த பிரபல நட்சத்திரங்கள் பற்றிய ஒரு தொகுப்பை வழங்குகிறோம்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலின் அறிமுக நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

கவர்ச்சி உடையில் போஸ்

கவர்ச்சி உடையில் போஸ்

கவர்ச்சி உடையில் வந்ததோடு, காரின் பானட்டிலும் ஏறி அமர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேமராக் கண்களுக்கு விருந்தளித்தார்.

 சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

பிஎம்டபிள்யூ விளம்பர தூதர் என்பதற்காக மட்டுமில்லாமல், பிஎம்டபிள்யூ கார்கள் மீது சிறு வயதிலிருந்தே அதிக ஆசையை வளர்த்துக் கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். அந்த ஆசையின் காரணமாக பிஎம்டபிள்யூ நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். இதேபோன்று, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்யவும் அவர் வருகை தந்திருந்தார்.

 இதர கார்கள்

இதர கார்கள்

பிஎம்டபிள்யூ ஐ8 காரின் டிசைன் வெகுவாக கவர்ந்துவிட்டதால், காரின் உள்ளே அமர்ந்து பார்த்து தனது ஆசையை தீர்த்துக் கொண்டார் சச்சின். பிஎம்டபிள்யூ ஐ8 கார் தவிர்த்து 3 சீரிஸ் கிராண் டூரிஷ்மோ, புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்- 5 மற்றும் எம்6 கிரான் கூபே உள்ளிட்ட கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

 கரீனா கபூர்

கரீனா கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் டிசி டிசைன் நிறுவனத்தின் 2 புதிய பிரியமியம் கார்களை அறிமுகம் செய்தார்.

கரீனா வாழ்த்து

கரீனா வாழ்த்து

டிசியின் டியா மற்றும் எலிரான் ஆகிய இரண்டு புதிய கார்களின் டிசைன் மிக பிரத்யேகமாக இருப்பதாகவும், இந்த தயாரிப்புகள் வெற்றியடைய தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

ஹீரோவின் புதிய மாடல்கள் அறிமுக விழாவில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கலந்து கொண்டார். ஹீரோவின் மூன்று புதிய மாடல்களை அவர் அறிமுகம் செய்தார்.

 போஸ் தவறவில்லை

போஸ் தவறவில்லை

அறிமுகம் செய்த கையோடு, 150சிசி திறன் கொண்ட இசட்ஐஆர் என்ற புதிய ஸ்கூட்டரில் ஹீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சாலுடன், பின்னால் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்தார்.

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

பிற நட்சத்திரங்களைவிட சமீரா ரெட்டியின் வருகை வித்தியாசமான முறையில் அமைந்தது. ஏனெனில், பிரபல வர்தேஞ்சி கஸ்டமைஸ் நிறுவனத்தின் புதிய கான்செப்ட் பைக் மாடலை சமீரா ரெட்டி அறிமுகம் செய்தார். வர்தேஞ்சி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அக்ஷய் வர்தேவைத்தான் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மோட்டோ மொரினி

மோட்டோ மொரினி

இத்தாலியை சேர்ந்த மோட்டோ மொரினியுடன் கைகோர்த்துள்ள வர்தேஞ்சி நிறுவனத்தின் புதிய கான்செப்ட் பைக்கை அறிமுகப்படுத்தியதுடன், அந்த பைக்கில் ஏறி அமர்ந்து பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்து அசத்தினார் சமீரா ரெட்டி.

ஜான் ஆபிரஹாம்

ஜான் ஆபிரஹாம்

பைக் பிரியரான ஜான் ஆபிரஹாம் யமஹா இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டு வருகிறார். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உள்ள யமஹா அரங்குக்கு வந்த அவர், யமஹா ஆர்1 பைக்கில் ஏறி அமர்ந்து போஸ் கொடுத்தார்.

அளவளாவல்

அளவளாவல்

யமஹாவின் அரங்கிற்கு வந்திருந்த அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் ஜான் ஆபிரஹாம் அளவளாவிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின்போது, யமஹாவின் விளம்பர தூதராக மேலும் இரண்டுகள் ஜான் ஆபிரஹாம் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

 ஆடி அரங்கில்...

ஆடி அரங்கில்...

ஆடியின் புதிய குறைந்த விலை செடான் கார் மாடலான ஏ3 கார் முதல் நாளிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் நடந்த நிகழ்ச்சியில் ஆடி ஏ3 காரின் விளம்பரத்துக்கான நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் நடிகை இலியான டி க்ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2014, 16:35 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+