ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இன்று தமிழகத்தில் பரபரப்பாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து வரும் சூழ்நிலையில் பிரபலங்கள் எல்லாம் தங்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இதன்படி இன்று காலை முதல் பல பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்த தேர்தலுக்கு பிரபலங்கள் எந்த வாகனங்களில் வந்து வாக்களித்தார்கள் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்
முதல்வர் ஸ்டாலின்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னை சிட்டிக்குள் பயணிக்க லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் காரை பயன்படுத்தி வருகிறார். அந்த காரில் தான் இவரும், இவரது மனைவி துர்காஸ்டாலினும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள். முழு பாதுகாப்புடன் இவர்கள் வாக்கு சாவடிக்கு வந்து இறங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

இயக்குனர் பாரதிராஜா: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரான பாரதிராஜா இன்று தனது இன்னோவா கிரைஸ்டா காரில் வந்து வாக்குச்சாவடியில் தனது வாக்கு செலுத்தினார். இவர் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் இருக்கும் நிலையில் முடியாமல், தனது இன்னோவா கடைசியாக வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ் தனது மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரில் வந்து இறங்கி தனது வாக்கை பதிவு செய்தால், இந்த கார் சென்னையில் ரூபாய் 3.71 கோடி என்ற ஆன்ரோடு விலையில் விற்பனையாகி வருகிறது. இவர் இந்த காரில் வந்து இறங்கிய காட்சிகளை பார்க்கும்போது பலர் இவரை விட இவர் வந்த காரை தான் வேடிக்கை பார்த்தார்கள்.

விஜய் சேதுபதி: வழக்கமாக சினிமா பிரபலங்கள் எல்லாம் கார்களில் வந்து இறங்கி வாக்குகளை பதிவு செய்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பைக்கில் வந்து இறங்கி வாக்குகளை பதிவு செய்தார். அவருடன் வந்தவர் பைக்கை ஓட்டி வந்த நிலையில் இவர் பைக்கின் பின் சீட்டில் அமர்ந்து வந்து வாக்கை பதிவு செய்துவிட்டு பைக்கிலேயே சென்றார். இவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: நடிகராகவும் தமிழக விளையாட்டு துறை அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் வழக்கமாக பயன்படுத்தும் இன்னோவா கிரைஸ்டா காரில் தான் தனது மனைவி கீர்த்திகாவுடன் வந்து எனது வாக்கை பதிவு செய்தார். இவரது தந்தையும் முதல்வருமான ஸ்டாலின் வாக்குப்பதிவு செய்துவிட்டு சென்ற அடுத்த ஒரு சில நிமிடங்களில் இவர் வாக்கு பதிவு செய்ய வந்தார்.

கமலஹாசன்: நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் தனது வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் லேண்ட்ரோவர் காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அவர் நீண்ட ஆண்டுகளாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயணிப்பதற்கு இந்த காரை தான் பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் அவர் கெத்தாக வந்த இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திரிஷா: நடிகை திரிஷாவும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வந்து இறங்கி தனது வாக்கை பதிவு செய்தார். இந்த கருப்பு நிறத்தில் இருந்தது. பொதுவாக இந்த கார்களை பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி நடிகர் கமலஹாசனை தொடர்ந்து நடிகை திரிஷாவும் இந்த காரைத்தான் பயன்படுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

யோகி பாபு: காமெடி நடிகராக இருந்தே இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக மாறி இருக்கும். யோகி பாபு இன்று தனது மனைவியுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அவர் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா காரில் வந்திறங்கி தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி பொதுவாகவே பைக்கில் அடிக்கடி வளம் வருவதை நம்மால் பார்க்க முடியும். இப்படியாக இவர் தனது யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கில் வந்தது தனது வாக்கை செலுத்தி விட்டு சென்றார். இவர் இப்படியாக பைக்கில் வலம் வருவது சாதாரண விஷயம் தான். இவரும் ஹெல்மெட் அணியாமல் தான் பைக்கில் வந்து வாக்கு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
சீமான்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்திறங்கி வாக்கு பதிவு செய்தார். இவர் தனது மனைவி கயலுடன் வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தார். இருவரும் காரில் வந்திறங்கி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சிவக்குமார் குடும்பம்: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரே நேரத்தில் ஒன்றாக வாக்களிக்க வந்திருந்தார்கள். அதன்படி நடிகர் சிவக்குமார் தனது கியா கார்னிவெல் காரில் வந்திருந்தார் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் இணைந்து தனது கருப்பு ரேஞ்ச் ரோவர் காரில் வந்திருந்தார்கள். இவர்கள் காரில் வந்திறங்கி வாக்களிக்க செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய்: கடந்த தேர்தலில் சைக்கிளில் வந்து வந்து தனது வாக்கை செலுத்திய விஜய் இன்று வெளிநாட்டிலிருந்து ஓட்டளிப்பதற்காக சென்னை வந்தார். இவர் எந்த வாகனத்தில் வருவார் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் இவர் சாதாரணமாக டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரில் வந்து தனது வாக்கை செலுத்தினார். இவர் வருவதை முன்னிட்டு வாக்குசாவடியில் கூட்டம் கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக பிரபலங்கள் எல்லாம் காஸ்ட்லியான கார்களை வைத்திருப்பார்கள். ஆனால் இதுபோன்ற பொது நிகழ்ச்சிக்கு வரும்போது சாதாரணமாக அவர்கள் அன்றாடம் சிட்டியில் பயணிக்கும் கார்களில் வருவார்கள் இப்படியாகத்தான் பல நடிகர் நடிகைகள் தங்களிடம் காஸ்ட்லியான கார்கள் இருந்தாலும் சாதாரண கார்களிலேயே வந்து வாக்குகளை செலுத்தி விட்டு சென்றார்கள். நடிகர் தனுஷ் மட்டும் இதில் விதிவிலக்கு


Click it and Unblock the Notifications









