விளம்பர தூதர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் கார் நிறுவனங்கள்!

By Saravana

கடும் சந்தைப்போட்டி நிலவும் இந்த காலக்கட்டத்தில், ஒரு பொருளை தயாரிப்பதைவிட, அதனை மக்களிடம் பிரபலப்படுத்தி விற்பனையை பெருக்குவது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கோடிகளை வாரி இறைத்து விளம்பரம் செய்யப்படுகிறது. இதில், வாகன துறை மட்டும் விதி விலக்கா என்ன?. கார் மற்றும் பைக் சந்தையில் நிலவும் கடும் சந்தைப் போட்டியால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல கோடிகளை வாரி இறைக்கின்றன கார் நிறுவனங்கள்.

பல நிறுவனங்களுக்கு இதில் கைமேல் பலன் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டருக்கு கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களால், அந்த ஸ்கூட்டரின் விற்பனை ஓரளவு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, திரை நட்சத்திரங்களையும், விளையாட்டுத் துறை பிரபலங்களையும் கோடிகளை கொட்டிக் கொடுத்து தங்களது தயாரிப்புகளுக்கு வாகன நிறுவனங்கள் விளம்பர தூதுவராக நியமித்து வருகின்றன. அவ்வாறு, வாகன துறையுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

லியோனல் மெஸ்ஸி- டாடா மோட்டார்ஸ்

லியோனல் மெஸ்ஸி- டாடா மோட்டார்ஸ்

தனது பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்காக சர்வதே அளவில் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரரான லியோனெல் மெஸ்ஸியை தனது நிறுவனத்தின் சர்வதேச விளம்பர தூதராக டாடா மோட்டார்ஸ் நியமித்து இருக்கிறது. விரைவில் வரும் டாடா ஸீக்கா காரை பிரபலப்படுத்துவதிலும் லியோனெல் மெஸ்ஸியுடன் கூடிய டீசர் வெளியிடப்பட்டது. உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான லியோனெல் மெஸ்ஸிக்கு பல கோடிகளை கொட்டிக் கொடுத்து விளம்பர தூதராக்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

ஷாரூக்கான்- ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஷாரூக்கான்- ஹூண்டாய் மோட்டார்ஸ்

பாலிவுட் பாதுஷா ஷாரூக்கானுக்கும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் நீண்ட காலமாக நெருக்கமான உறவு பேணப்பட்டு வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக ஷாரூக்கான்தான் ஹூண்டாய் கார்களுக்கான ஆஸ்தான விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். ஷாரூக்கான் நடித்த ஹூண்டாய் கார் விளம்பரங்களும் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

டாப்ஸி - ஹோண்டா டூ வீலர்ஸ்

டாப்ஸி - ஹோண்டா டூ வீலர்ஸ்

ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நடிகை டாப்ஸி நியமிக்கப்பட்டு இருக்கிறார். மாதந்தோறும் சராசரியாக 75,000 பெண்கள் ஹோண்டா ஸ்கூட்டர்களை வாங்குவதால், ஒரு பெண் நட்சத்திரத்தை விளம்பர தூதுவராக நியமித்தது. ஹோண்டாவின் பலம் ஸ்கூட்டர் என்பதோடு, இந்தியாவில் அந்த நிறுவனத்தின் முதல் பெண் விளம்பர தூதர் டாப்ஸி என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

வருண் தவான் - மஹிந்திரா

வருண் தவான் - மஹிந்திரா

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா கேயூவி100 என்ற புதிய மினி எஸ்யூவி மாடலுக்கு பாலிவுட் நடிகர் வருண் தவான் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த புதிய மினி எஸ்யூவிக்கு 30 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களை குறி வைத்து நிலைநிறுத்தப்பட இருப்பதால், வருண் தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறாராம்.

 அக்ஷய் குமார்- ஹோண்டா டூ வீலர்ஸ்

அக்ஷய் குமார்- ஹோண்டா டூ வீலர்ஸ்

ஹோண்டா ட்ரீம் வரிசை பைக்குகளின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக பரபரப்பான பேச்சு எழுந்தது. ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனையில் ட்ரீம் வரிசை பைக்குகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அமிதாப்பச்சன்- டிவிஎஸ் மோட்டார்ஸ்

அமிதாப்பச்சன்- டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டருக்கு பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டார். இதற்காக, வெளியிடப்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களின் புண்ணியத்தில், ஹீரோ மேஸ்ட்ரோவை வீழ்த்தி, நவம்பர் விற்பனையில் இந்தியாவின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெருமையை சமீபத்தில் பெற்றிருக்கிறது.

பர்ஹான் அக்தர் - ஃபோர்டு ஆஸ்பயர்

பர்ஹான் அக்தர் - ஃபோர்டு ஆஸ்பயர்

கடந்த ஆண்டு புதிதாக வந்த ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காருக்கு பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். இந்த காருக்கு பயன்படுத்தப்பட்ட விளம்பர வாசகம், காரின் பெயருக்கு ஏற்றாற்போல அமைந்தது. இதனால், இந்த விளம்பரம் ஈர்ப்பதாக அமைந்தது.

ஆடி- விராத் கோஹ்லி

ஆடி- விராத் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரமாக ஜொலித்து வரும் விராத் கோஹ்லி ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக 5 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டார். வெறும் ஒப்பந்தத்திற்காக அவர் ஆடி கார்களை பிரபலப்படுத்தவில்லை. ஆடி பிராண்டின் தீவிர ரசிகர் என்பது, அவரிடம் இருக்கும் 4 ஆடி கார்களே சொல்லிவிடும். ஆம், அவரிடம் சொந்தமாக ஆடி ஆர்8, ஆர்8 எல்எம்எக்ஸ், க்யூ7 மற்றும் ஆடி8எல் கார்கள் உள்ளன.

சச்சின் டெண்டுல்கர் - பிஎம்டபிள்யூ

சச்சின் டெண்டுல்கர் - பிஎம்டபிள்யூ

2012ம் ஆண்டிலிருந்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பர தூதர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், சிறு வயது முதலே, பிஎம்டபிள்யூ என்பது எனது கனவு பிராண்டு என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

ரன்வீர் சிங்- மாருதி

ரன்வீர் சிங்- மாருதி

ஹோண்டா சிட்டி மார்க்கெட்டை உடைப்பதற்காக மாருதி சியாஸ் காரின் விளம்பர தூதராக ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டார். சவால்களை எதிர்கொள்வதில், சியாஸ் போன்றே ரன்வீர் சிங்கும் பல்திறமை கொண்டவர் என்று மாருதி சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறது.

அல்லு அர்ஜுன் - ஹீரோ

அல்லு அர்ஜுன் - ஹீரோ

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார். ஹோண்டா தயாரிப்புகள் பக்கம் வாடிக்கையாளர்களை திசை திருப்ப செய்யவிடாமல் இருப்பதே அல்லு அர்ஜுனின் முக்கிய பணி. மேலும், தென் இந்தியாவில் வலுவான மார்க்கெட்டை ஹீரோ வைத்திருப்பதும் ஒரு காரணம்.

 பாகுபலி பிரபாஸ்- மஹிந்திரா டியூவி300

பாகுபலி பிரபாஸ்- மஹிந்திரா டியூவி300

கடந்த ஆண்டில் வெளியான பாகுபலி சினிமாவும், மஹிந்திரா டியூவி300யும் வெற்றியை பதிவு செய்தவை. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் பாகுபலி பிரபாஸை டியூவி300 எஸ்யூவியின் விளம்பர தூதராக நியமித்திருக்கிறது மஹிந்திரா. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருவது இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும் பலன்.

விளம்பர மோகம்

விளம்பர மோகம்

சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள் மீது மக்களிடம் இருக்கும் மோகம், அசாத்திய நம்பிக்கையின் காரணமாக, இந்த விளம்பர தூதர்கள் மூலமாக வாகனத் துறை நிறுவனங்கள் பலனடைகின்றன. அதேநேரத்தில், சிறந்த தயாரிப்புகளை இனம் கண்டு வாங்குவது மக்களின் கையில்தான் இருக்கிறது. இல்லாவிட்டால், விளம்பரங்களை நம்பி நூடுல்ஸ் முதல் கார் வரை வாங்கிவிட்டு பின்னால் அவஸ்தை பட வேண்டியிருக்கும்.

Article Published On: Thursday, January 7, 2016, 12:48 [IST]
English summary
Celebrities And Their association with automobile brands.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+