ஊரையே வளச்சு போட்ற அளவுக்கு சொத்து இருந்தும் சாதாரண ஸ்விஃப்ட் காரை வாங்கிய தேவதை! அவங்களா இது! அடையாளமே தெரியல
உலகின் மிகப்பெரிய கார் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான கார்கள் விற்பனையாகி வருகின்றன. சமீப காலமாக விலை உயர்ந்த சொகுசு கார்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பிரபலமான கோடீஸ்வரர்கள், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் புதிய கார்களை வாங்கிய பிரபலங்களை பற்றிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், சமீபத்தில் புதிய கார்களை வாங்கிய பிரபலங்களை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி நடிகரும், தயாரிப்பாளருமான ஜிம்மி ஷெர்கில் (Jimmy Shergill), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஹெச்எஸ்இ (Land Rover Defender HSE) காரை வாங்கியுள்ளார். இதன் விலை 1.17 கோடி ரூபாய் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நடிகர் ஹிருத்திக் ரோஷனின் (Hrithik Roshan) தந்தை ராகேஷ் ரோஷனும் (Rakesh Roshan) புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) ஆகும். இதன் விலை 1.50 கோடி ரூபாய் என்று இந்த வைரல் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan), பாடகர் ஏபி தில்லான் (AP Dhillon) ஆகியோரும் புதிய கார்களை வாங்கியுள்ளனர். அவர்கள் வாங்கியிருப்பது முறையே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 எக்ஸ் (Land Rover Defender 130 X) மற்றும் பிஎம்டபிள்யூ 740ஐ எம் ஸ்போர்ட் (BMW 740i M Sport) ஆகியவை ஆகும்.

இதில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 எக்ஸ் காரின் விலை 1.87 கோடி ரூபாய் எனவும், பிஎம்டபிள்யூ 740ஐ எம் ஸ்போர்ட் காரின் விலை 2.08 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சயிஃப் அலி கானின் (Saif Ali Khan) மகன் இப்ராஹிம் அலி கானும் (Ibrahim Ali Khan) புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது மெர்சிடிஸ் இக்யூஎஸ் 580 (Mercedes EQS 580) ஆகும். இந்த காரின் விலை 1.66 கோடி ரூபாய் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகை காத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் (Ekta Kapoor) ஆகியோரும், மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளனர்.
அவர்கள் வாங்கியிருப்பது முறையே ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி 3.0 ஆட்டோபயோகிராபி (Range Rover LWB 3.0 Autobiography) மற்றும் ரேஞ்ச் ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராபி (Range Rover SV Autobiography) ஆகியவை ஆகும். இவற்றின் விலை முறையே 2.98 கோடி ரூபாய் மற்றும் 5.26 கோடி ரூபாய் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடிகரும், தொழில் அதிபருமான விவேக் ஓபராய் (Vivek Oberoi) மற்றும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் (Mukesh Ambani) ஆகாஷ் அம்பானி (Akash Ambani) ஆகியோரும் புதிய கார்களை வாங்கியுள்ளனர். இதில், விவேக் ஓபராய் வாங்கியிருப்பது, 10 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) ஆகும்.
மறுபக்கம் ஆகாஷ் அம்பானி வாங்கியிருப்பது, 12 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) ஆகும். இவர்கள் அனைவருமே வாங்கியுள்ளது மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஆகும். ஆனால் ஒரு நடிகை மட்டும் மிகவும் வித்தியாசமாக சாதாரண மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை வாங்கியுள்ளார்.
இதற்காக அவரை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். அவர் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். அவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 130 கோடி ரூபாய் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் இருந்தும், சாதாரண மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ள நடிகை, ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) ஆவார்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் VXi O வேரியண்ட்டைதான், ஷ்ரத்தா கபூர் வாங்கியுள்ளார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இதன் ஆன்-ரோடு விலையே (On-Road Price) சுமார் 8.20 லட்ச ரூபாய் மட்டுமே. இதன் மூலமாக ஷ்ரத்தா கபூரின் எளிமையை நம்மால் உணர முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை பிரபலங்கள் பலரும் வாங்கி வரும் நிலையில், ஷ்ரத்தா கபூர் மிகவும் சாதாரணமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை வாங்கியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரிடம் ஏற்கனவே எளிமையான கார்கள் நிறைய இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








