அவங்க அம்மாவை அப்படியே உரிச்சு வெச்சிருக்காங்க! 3 கோடி ரூபா கார்ல போகும் இவங்களை அடையாளம் தெரியுதா?
இந்திய திரையுலகினர் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லெக்ஸஸ் எல்எம் (Lexus LM). மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 7 சீட்டர் விஐபி (Lexus LM 350h 7 Seater VIP) மற்றும் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி (Lexus LM 350h 4 Seater Ultra Luxury) ஆகியவைதான் அந்த வேரியண்ட்கள். இதில், முதலாவது வேரியண்ட் 2 கோடி ரூபாய் விலையிலும், 2வது வேரியண்ட் 2.50 கோடி ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 2.30 கோடி ரூபாய் மற்றும் 2.90 கோடி ரூபாய் வரும். லெக்ஸஸ் எல்எம் காரின் 2 வேரியண்ட்களிலும் ஒரே இன்ஜின் ஆப்ஷன்தான் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. அது 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும்.

இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு 48 இன்ச் பொழுதுபோக்கு திரை, 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 23 ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 8 ஏர்பேக்குகள், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் அஸிஸ்ட் போன்ற வசதிகள் எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து இந்த வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
லெக்ஸஸ் எல்எம் காரை பொறுத்தவரையில், மிகவும் விலை உயர்ந்த லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி வேரியண்ட்டைதான் திரையுலகினர் விரும்புகிறார்கள். திரையுலகில் யார் யாரிடம் எல்லாம் இந்த கார் உள்ளது? என்பதை விளக்கும் வீடியோ ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், சுமார் 11 வயது மட்டுமே ஆன ஷாருக்கானின் மகன் ஆப்ரம் கான், ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர், நடிகர் ரன்பீர் கபூர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடிகர் நாகார்ஜூனா மற்றும் நடிகர் ராம் சரண் போன்றவர்களிடம் எல்லாம் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி கார் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி கார், விலை உயர்வானதாக இருந்தாலும் கூட, சொகுசான பயணத்தை வழங்க கூடியது. இதன் காரணமாகவே திரையுலகினர் மத்தியில் லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி கார் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








