இவங்க ஷோரூமுக்கே வந்து டாடா கார் வாங்கனதை வெளிய சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க! சாவி குடுத்தவருக்கு மச்சம்தான்!
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் சாமானிய மக்கள் மட்டும்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களை வாங்கி கொண்டுள்ளனர் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், உடனே உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில், மிகவும் முக்கியமான நபர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.
கிம் ஷர்மா (Kim Sharma): பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையும், மாடல்களில் ஒருவருமான கிம் ஷர்மா, டாடா நானோ (Tata Nano) காரை வைத்துள்ளார். ஏழை மக்களுக்கான கார் என்ற அடையாளத்துடன் வந்த டாடா நானோ காரை, மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகை ஒருவர் பயன்படுத்தி கொண்டிருப்பது, உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

மந்த்ரா பேடி (Mandira Bedi): இந்தியாவின் நடிகர், நடிகைகள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்கி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர் என்றால், அது மந்த்ரா பேடிதான். இவர் கடந்த 2020ம் ஆண்டிலேயே, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரை வாங்கி விட்டார்.
மாதுரி தீக்ஸித் (Madhuri Dixit): பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஸித், கார் ஆர்வலர் ஆவார். அவரை போலவே, அவரது கணவர் டாக்டர். ஸ்ரீராம் நீனேவும் (Dr. Shriram Nene) கார் ஆர்வலர்கள்தான். இவர்களும் கூட, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கினர்.

உல்கா குப்தா (Ulka Gupta): வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான உல்கா குப்தா, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை வைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை உல்கா குப்தா வாங்கினார். இவர் டாடா ஷோரூமுக்கே நேரடியாக சென்று, கேக் வெட்டி, காரை டெலிவரி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal): பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான மோதிலால் ஓஸ்வால், டாடா சஃபாரி (Tata Safari) காரை வைத்துள்ளார். அவரிடம் இருப்பது டாடா சஃபாரி காரின் டார்க் எடிசன் (Dark Edition) மாடல் ஆகும். இந்த காரை வாங்கிய சமயத்தில், இந்திய கார் நிறுவனங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்புவதாக அவர் கூறியிருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கார்களை விற்பனை செய்ய தொடங்கி விட்டது. குறிப்பாக பாதுகாப்பு விஷயத்தில், டாடா நிறுவன கார்கள் அசத்துகின்றன. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா நிறுவனத்தின் நிறைய கார்கள், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
இது இந்தியாவிற்கு பெருமை தேடி தரக்கூடிய ஒரு விஷயம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல், மற்றொரு இந்திய நிறுவனமான மஹிந்திரா நிறுவனமும், தற்போது உலகத்தரம் வாய்ந்த, அதே சமயம் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே பிரபலங்கள் பலரும், இந்திய கார் நிறுவனங்களின் பக்கம் தற்போது தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








