சுங்கச்சாவடி கட்டண முறையில் அதிரடி மாற்றம்... ஃபாஸ்ட் டேக் வாங்குனது எல்லாம் வீணாபோகபோகுது...
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்பட்டு நேரடியாக வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்தே சுங்ககட்டணம் கழிக்கப்படும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஆங்காங்கே அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து அந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணங்களை வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகச் செலவிடப்படுகிறது.

இப்படியாகச் சுங்க கட்டணம் பணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கட்டாயம் பாஸ்ட் டேக் முறைக்கு சுங்கச்சாவடிகள் மாற்றப்பட்ட வாகன ஓட்டிகளும் கட்டாயம் பாஸ்ட் டேக் கார்டை வாங்க வேண்டும் என விதிமுறை வகுத்தது. பாஸ்ட் டேக் கார்டு இல்லாத பயணிகள் இரு மடங்கு கட்டணம் கட்ட வேண்டும்.
இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது சுங்கச்சாவடிகள் குறித்துப் பேசினார். அப்பொழுது மத்திய அரசு இந்தியாவில் சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறினார். சுங்கச்சாவடிகள் அகற்றம் என்றால் பணம் செலுத்தத் தேவையில்லை என அர்த்தம் கிடையாது.
மாறாகச் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை மாறுகிறது. தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டு முறையில் உள்ள சுங்க கட்டண வசூல் முறை இனி தானியங்கி கேமராவில் கார்களின் நம்பரை எடுத்து அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளும் தொழினுட்பத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருவதாகக் கூறினார்.
மேலும் தற்போது ஒரு சுங்கச்சாவடியில் பணம் கட்டிவிட்டுப் பயணிக்கத் துவங்கினால் முழுமையாகப் பயணிக்கவில்லை என்றாலும், முழு கட்டணம் தான் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வரப்போகும் தொழிற்நுட்பத்தின்படி எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்ற விதிமுறை வரவுள்ளது.
அதே போல தற்போது கார், பஸ்,வேன், எனப் பொதுப்படையாக வாகனத்தைப் பிரித்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி கார்களிலேயே சிறிய கார்கள், எஸ்யூவிகள் எனப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாகனமும் சாலையில் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தார் போலக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபாஸ்ட்டேக் கட்டாயப்படுத்தும் முன்பு சுங்கச்சாவடியில் சராசரியாக ஒரு காரின் காத்திருப்பு காலம் 7-8 நிமிடங்கள் வரை இருந்தது. இது ஃபாஸ்ட் டேக் வந்ததும் 42 விநாடிகளாகக் குறைந்துவிட்டாலும் பெருநகர பகுதிகளில் பெரிய மாற்றம் இல்லை.ஆனால் புதிய முறையில் சுங்கச்சாவடிகளில் வாகனம் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. வாகனத்தின் நம்பர் பிளேட்டை வைத்து நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துவிடும்.
ஒரு வேளை வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் உங்கள் பயணம் தடைப் படாது மாறாக வங்கிக் கணக்கில் நெகடிவ் பேலன்ஸில் கழியும்,அடுத்து நீங்கள் அந்த வங்கி கணக்கில் பணம் போடும் போது தானாகக் கழிந்து கொள்ளும். இந்த வசதி தடையில்லா பயணத்திற்காக வழங்கப்பட்டது. ஆனால் இதன் பின்னால் அபராத கட்டணம், என அதிகப் பணத்தை மக்களிடமிருந்து பறிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








