நெடுஞ்சாலைகளில் புதிய மாற்றம்... மத்திய அரசு அதிரடி முடிவு... இப்படி ஒரு திட்டத்தை யாருமே எதிர்பார்க்கல...
மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மின்மயமாக்குவது குறித்துப் பேசியுள்ளார். இந்தத் திட்டம் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடுகள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மக்கள் பெட்ரோல், டீசல் இன்ஜின் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தயாராகிவிட்டனர். ஆனால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் அதன் விலை மற்றும் ரேஞ்ச். இன்று விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்கள் ரியல் வேர்ல்டில் அதிக ரேஞ்ச் அளிப்பதில்லை.

ரேஞ்ச் குறைவாக இருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்ற கார் இல்லை என மக்கள் கருதுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக ரேஞ்ச் கொண்டு வருவதில் பல தொழிற்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு ஒரே வழி ஆங்காங்கே சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது தான் வாகனம் நீண்ட தூரம் பயணிக்கும் போது அவர்கள் குறிப்பிட்ட தூரம் பயணித்தவுடன் சார்ஜ் ஏற்றும் வசதி இருக்க வேண்டும்.

ஆனால் இன்று இந்தியாவில் போதுமான சார்ஜிங் கட்டுமானங்கள் இல்லை. இதுவும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வேகம் பிடிக்காததற்கு முக்கியமான காரணம். இந்நிலையில் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் இன்டோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காம்ர்ஸ் கூட்டத்தில் பேசினார். அப்பொழுது இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டம் குறித்துப் பேசினார்.

அதில் அவர் இந்தியாவில் பெரும்பான்மையான வாகனங்கள் நீண்ட தூரப் பயணத்தை நெடுஞ்சாலைகளில் தான் செய்கிறார்கள். பொதுப் போக்குவரத்தும் நெடுஞ்சாலைகளில் தான் இருக்கிறது. இதனால் மத்திய அரசு நெடுஞ்சாலைகளை மின்மயமாக்கல் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பேசினார்.

அதாவது எப்படி ரயில்வே தண்டவாளங்களுக்கு மேலே மின் வயர் போடப்பட்டு அதன் உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தி ரயில்கள் பயணிக்கிறதோ அதே போல நெடுஞ்சாலைகளிலும் மின்சார வயர்கள் அமைக்கப்படலாம் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த மின்சார வயர்களை பயன்படுத்தி அதில் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது மட்டுமல்ல நெடுஞ்சாலை முழுவதும் மின்சாரத்தால் இணைக்கப்பட்டால் அந்த மின்சாரத்தை வைத்தே ஆங்காங்கே சார்ஜ் ஸ்டேஷன்களையும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறினார். இதற்காகத் தேவைப்படும் மின்சாரத்தை நெடுஞ்சாலைகளிலிருந்தே சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைத் தயாரித்து அதைப் பயன்படுத்த யோசித்து வருவதாகவும் கூறினார்.

இது மட்டுமல்ல தற்போது இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்கள் விரைவில் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், அது அகற்றப்படும் பட்சத்தில் அந்த இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களாக மாற்றலாம் என்ற யோசனையும் மத்திய அரசு இருப்பதாகவும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வது வருவதாகவும் கூறினார்.

இப்படியாக நெடுஞ்சாலைகள் எல்லாம் மின் மயமாகிவிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் வளரும். மக்கள் போக்குவரத்திற்கான செலவு குறையும், இப்படியான பல நன்மைகள் நடப்பதால் இதை மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

கடந்த வாரம் மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கார்களுக்கான 6 ஏர்பேக் கட்டாயம், சீட் பெல்ட் அலகத்தைக் கட் செய்யும் கருவிகளுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது இந்த நெடுஞ்சாலைகளை மின் மயமாக்கள் குறித்துப் பேசியுள்ளார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








