சிட்டா பாயலாம்! தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகப்படுத்த முடிவு?

இந்தியாவில் தற்போது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி தேசிய நெடுஞ்சாலை தான். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான மக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலைகளைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த சாலைகளை மத்திய மத்திய அரசு, நெடுஞ்சாலைத் துறை முறை நிர்வகித்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சாலை வசதிகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வரைவாகத் தடையின்றி ஒரு ஊரிலிருந்து மற்றொ ஊருக்குச் செல்ல முடிகிறது.

சிட்டா பாயலாம்! தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகப்படுத்த முடிவு?

மேலும் ஊர்களில் டிராஃபிக் மற்றும் தேவைகளைக் கணக்கிட்டு சாலையை விரிவாக்குவது, புதிய சாலைகளைக் கட்டமைக்கும் பணிகளையும் மத்திய போக்குவரத்துத் துறை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு சாலைக்கும் ஒவ்வொரு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிகபட்சம் இவ்வளவு வேகத்தில் தான் செல்ல வேண்டும் எனச் சாலை கட்டமைக்கும் போதே விதிக்கப்படும்.

தற்போது அதிகபட்சமாக எக்ஸ்பிரஸ் சாலைகளில் 120 கி.மீ வேகம் வரை அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக டில்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு ஃபெரிஃபெரல் ஹைவே, ஆகிய சாலைகளில் 120 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ வேகம் தான் அதிகபட்ச வேகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஒரு அறிவிப்பின் படி ஒவ்வொரு சாலைகளுக்கும் அதிகபட்ச வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வேக கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய போக்குவரத்துத் துறை தான்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்தியாவில் சாலைகளில் உச்சபட்ச வேகம் என்பது குறைவாக இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியச் சாலைகளின் வாகனங்கள் செல்லும் உச்சபட்ச வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது. இதற்காக ஆய்வுகளை ஒரு புறம் நடத்தி வருகிறது. மாநில அரசு அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி வருகிறது.

இந்தியாவில் சாலைகள் சிறப்பாக இருக்கிறது. அதனால் அதற்கு ஏற்ற வேகம் இல்லை அதிகபட்ச வேகமே சாலையின் தரத்திற்கு மிகவும் குறைவாக இருப்பதால் அதிகபட்ச வேகத்தை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்தியாவில் அதிவேகமாகச் செல்வதால் நடக்கும் விபத்துகளும் ஒரு புறம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. 2021ம் ஆண்டு அதிக வேகம் காரணமாக மொத்தம் 3 லட்சம் விபத்துகள் நடந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த விபத்துக்களில் 1.07 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2020ம் ஆண்டு 4.49 லட்சம் விபத்துக்கள் அதிக வேகம் காரணமாக நிகழ்ந்துள்ளன. இத்தனைக்கும் அந்தாண்டு கொரோனா காரணமாக பெரும்பாலான நாட்கள் லாக்டவுனில் இருந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 16:00 [IST]
English summary
Center plans to increase NH speed limits Nitin Gadkari hints
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+