சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரூட்டுக்கு வரும் வந்தே மெட்ரோ.. வந்தே பாரத்தே இதுக்கு முன்னாடி மண்டியிடனும் போலையே!

இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களுக்கு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே வந்தே பாரத் ரயிலை தழுவி உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில்கள் (Vande Metro Train) பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, சென்னையில் சென்ட்ரல் (Central) - அரக்கோணம் (Arakkonam) மார்க்கத்தையும், சென்னை பீச் (Chennai Beach Station) - செங்கல்பட்டு (Chengalpattu) வழித்தடத்தையும் இணைக்கும் வகையில் விரைவில் வந்தே மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vande bharat rail

இதுதவிர, சென்னை - திருப்பதி, லக்னோ - கன்பூர் மற்றும் ஆக்ரா - மதுரா உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயிலை தழுவி உருவாக்கப்பட்ட வந்தே மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய நிலவரப்படி இந்த வழித்தடங்களில் எலெக்ட்ரிக் பயணிகள் ரயிலே முக்கிய போக்குவரத்து ரயில்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு பதிலாக வந்தே மெட்ரோ ரயில்கள் சேவையில் களமிறக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து மாலை மலர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், ரயில்வேத்துறை வந்தே மெட்ரோ ரயில்களை மேலே குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியிட்டு இருக்கின்றது.

Vande bharat

வந்தே பாரத் ரயிலை தழுவி உருவாக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டவே, அதேநேரத்தில் அவை சட்டென வேகத்தை குறைத்து நிற்கும் திறன் கொண்டவை ஆகும். எனவே பெரிய அளவில் நேரம் வீணடிக்கப்படாமல் அதிக ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

வந்தே மெட்ரோ ரயில்களின் உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அந்த ரயில்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, அந்த ரயில்களின் சோதனையோட்டமும் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த பணிகளும் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.

இந்த ரயில்களின் பெட்டிகள் வந்த பாரத் ரயில்களைப் போலவே இருக்கும். ஆனால், புறநகர் பயன்பாட்டிற்கு ஏற்ப அது மாற்றங்களைக் கொண்டிருக்கும். அதேவேளையில், பிரீமியம் பயண உணர்வு இந்த ரயிலில் கிடைக்கும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 12 பெட்டிகளைக் கொண்டதாகவே இந்த ரயில் இருக்கும்.

அதேவேளையில், தேவைக்கு ஏற்ப இந்த பெட்டிகளின் 16 வரையில் உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி லோக்கல் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கின்றது. அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக அதிக பெட்டிகளை இதில் தெற்கு ரயில்வே சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் மணிக்கு 100 கிமீ முதல் 250 கிமீ வரையிலான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை என கூறப்படுகின்றது. ஜூலை மாதத்திலேயே இதன் சோதனையோட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே மெட்ரோ ரயில்கள் மட்டுமல்ல விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் கொண்ட ரயில்களும் நாட்டில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி வந்தே பாரத் ரயில்களில் அமர்ந்து மட்டுமே பயணிக்க மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த குறையைப் போக்கும் விதமாக இந்தியன் ரயில்வேஸ் விரைவில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 30, 2024, 19:11 [IST]
English summary
Central arakkonam routes soon to get vande metro rail
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+