எதிரி நாடுகள் இந்தியாவை பார்த்து ஆடிப்போயி உள்ளன!! சும்மாவா... 12 போர் விமானங்களுக்கு ஆர்டர் போட்டாச்சு!

இந்திய விமான படை (Indian Air Force)-இல் சேர்ப்பதற்காக நம் மத்திய அரசாங்கம் 12 சு-30-எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்திய விமான படையில் போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, படையை மேலும் பலப்படுத்தும் வகையில் கொண்டுவரப்படும் இந்த போர் விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் சூழல் ஏற்படாவிடினும், நாட்டின் படைகளை அவ்வப்போது புதியவைகள் மூலமாக அப்டேட் செய்துக் கொண்டே இருப்பது நல்லது மற்றும் அவசியமானதும் கூட. இராணுவத்தில் அதிக தொகையை செலவு செய்வது மற்ற எதிரி நாடுகளை பயமுறுத்தும் என்பது மட்டுமின்றி, இந்தியா மீதான மற்ற நாடுகளின் மதிப்புகளையும் உயர்த்தும். இது பல வழிகளில் இந்தியாவிற்கு நன்மை பயக்கூடியதாக மாறலாம்.

government orders su-30mki fighter aircrafts

எல்லாவற்றையும் விட, நாட்டின் படையை பலப்படுத்துவது படை வீரர்களுக்கு மிக பெரிய தைரியமாக அமையும். இவை எல்லாவற்றையும் உணர்ந்த காரணத்தினாலேயே, இந்திய விமான படைக்காக மேலும் 12 சு-30எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க மத்திய அரசு பச்சைக் கொடிக் காட்டியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால், இந்த போர் விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

60% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு, உள்நாட்டிலேயே ரஷ்யாவின் விமான உற்பத்தி நிறுவனமான சுகோய் (Sukhoi) உடன் இணைந்து இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த போர் விமானங்களை உருவாக்க உள்ளது. இந்திய விமான படையில் சு-30எம்.கே.ஐ போர் விமானங்கள் ஒன்றும் புதியது அல்ல. 21ஆம் நூற்றாண்டின் துவக்கங்களில் இருந்து இத்தகைய போர் விமானங்கள் நம் நாட்டு விமான படையில் பயன்படுத்தப்படுகின்றன.

government orders su-30mki fighter aircrafts

தற்போதுவரையில் மட்டுமே, சுமார் 260க்கும் அதிகமான சு-30எம்.கே.ஐ விமானங்கள் இந்திய விமான படையில் உள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மிகவும் அட்வான்ஸ்டு மாடர்ன் தரத்தில் புதிய சு-30எம்.கே.ஐ போர் விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னத்தான் பார்த்து, பார்த்து கவனத்துடன் உருவாக்கினாலும், இந்திய விமான படையில் உள்ள விமானங்களிலும் விபத்துகள் ஏற்படுவது உண்டு.

இது சில சமயங்களில் இயந்திர தொழிற்நுட்ப கோளாறாக இருக்கலாம் அல்லது மனித கோளாறாக இருக்கலாம். ஆனால் எப்படியோ, கடந்த சில வருடங்களில் இந்திய விமான படையில் 12 சு-30எம்.கே.ஐ போர் விமானங்கள் விபத்தில் சிக்கி நாசமாகியுள்ளன. அவற்றின் இடத்தை நிரப்பும் பொருட்டே புதியதாக 12 சு-30எம்கேஐ போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன.

government orders su-30mki fighter aircrafts

சு-30எம்கேஐ ஆனது ஓர் மல்டி-ரோல் போர் விமானம் ஆகும். அதாவது, இந்த விமானத்தில் பல்வேறு விதமான ஆயுதங்களை கொண்டு செல்லலாம். அதாவது, அஸ்ட்ரா எம்கே-1 லாங்-ரேஞ்ச் ஏர்-டூ-ஏர் ஏவுகணை, பிராஹ்மோஸ் வான் ஏவுகணையில் இருந்து வெடிக்குண்டுகள் வரையில் கொண்டுச் செல்ல முடியும்.

தற்போதைய 4.5ஆம் தலைமுறை சு-30எம்கேஐ போர் விமானங்கள் அதிவேகத்திலும், குறைந்த வேகத்திலும் எந்தவொரு இக்கட்டான சூழலில் இருந்து மீண்டுவரும் திறன் கொண்டவை. அதாவது, இந்த விமானத்தினால் 90 டிகிரியில் நேராக கூட வானை நோக்கி பறக்க முடியும். சூ-30எம்கேஐ போர் விமானங்களில் மிக பெரிய அளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. இவை இல்லாமல், வானத்திலேயே கூட இந்த விமானத்திற்கு எரிபொருளை நிரப்ப முடியும்.

government orders su-30mki fighter aircrafts

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்திய அரசு சு-30எம்கேஐ போர் விமானங்களை வாங்குகின்றது என்றால், இந்த வகை விமானங்களின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளது மற்றும் அந்த அளவிற்கு இந்த போர் விமானம் திறன்களை கொண்டுள்ளது என்று அர்த்தம். இத்தகைய விமானம் 60% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுவது, விமானங்கள் உற்பத்தியில் இந்தியாவின் தரத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 19:29 [IST]
English summary
Central government orders 12 su 30mki fighter aircrafts for indian air force
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X