பாட் கார் டாக்சிக்கு மத்திய அரசு அனுமதி... நவீன இந்தியாவின் புதிய போக்குவரத்து சாதனம்!

By Saravana

பாட் கார் என்ற புதிய போக்குவரத்து சாதனத்தை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. போக்குவரத்தில் மூச்சுத் திணறி வரும் பெரு நகரங்களுக்கு இந்த புதிய போக்குவரத்து சாதனம் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில், மோனோ ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களைவிட பன்மடங்கு கூடுதல் அனுகூலங்களை கொண்ட இந்த புதிய போக்குவரத்து சாதனம் மக்களிடத்தும் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

 குர்கானில் அறிமுகம்

குர்கானில் அறிமுகம்

நாட்டிலேயே முதல்முறையாக குர்கானில் இந்த பாட் டாக்சி சேவை அறிமுகமாக இருக்கிறது. மேலும், பீகார் மாநில அரசும் இந்த புதிய போக்குவரத்து சாதனத்தை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

நகரங்களுக்கு இடையிலும்...

நகரங்களுக்கு இடையிலும்...

மத்திய அரசின் அனுமதி காரணமாக, பெருநகரங்களில் மட்டுமல்லாது, நகரங்களுக்கு இடையிலும் இந்த சேவையை அறிமுகம் செய்யும் வாய்ப்புக்கு வழிகோலியுள்ளது. இந்த பாட் டாக்சியை நகரங்களுக்கு இடையிலும் இயக்குவதற்கு பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

குர்கானில் இந்த புதிய திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு கட்டிடம் மற்றும் சாலைகள் பிரிவுக்கான மத்திய பொதுப்பணித்துறை அமைச்சர் ராவ் நர்பீர் சிங் அனுமதி வழங்கியிருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

 முதல்கட்டமாக...

முதல்கட்டமாக...

குர்கான்- டெல்லி எல்லையிலிருந்து சோனா ரோடில் உள்ள பாத்ஷாபூர் மோட் வரையிலான 13 கிமீ தூரத்திற்கு முதல்கட்டமாக இந்த புதிய போக்குவரத்து சாதனத்தை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இடையில் 16 நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

முதலீடு

முதலீடு

இந்த திட்டத்தை தனியார் நிறுவனம் செயல்படுத்த இருப்பதுடன், முற்றிலும் தனியார் முதலீட்டுடன் நிறுவப்பட உள்ளது. ரூ.850 கோடி முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 மெட்ரினோ டாக்சி

மெட்ரினோ டாக்சி

இந்த திட்டத்தை மெட்ரினோஸ் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மெட்ரினோ டாக்சியிலும் 5 பேர் அமர்ந்து செல்ல முடியும்.

பாட் கார்கள்

பாட் கார்கள்

தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடத்தில் காந்த விசையின் மூலமாக இந்த பாட் டாக்சி கார்கள் செல்லும். சில நிமிட இடைவெளிகளில் இந்த பாட் கார்களை ஒன்றன்பின் ஒன்றாக இயக்க முடியும்.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் இந்த பாட் டாக்சியை இயக்கப்படும். இது மிக விரைவான போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

எளிது

எளிது

இந்த பாட் டாக்சியை முன்பதிவு செய்துகொண்டு தனியாக எடுத்துச் செல்ல முடியும். மெட்ரோ, மோனோ ரயில்களைவிட முதலீடு மிக குறைவு என்பதால், கட்டணமும் மெட்ரோ ரயிலைவிட குறைவாக நிர்ணயிக்கும் வாய்ப்பு உள்ளதால், நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

 பிற நகரங்களிலும்...

பிற நகரங்களிலும்...

விரைவில் இந்த பாட் டாக்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது வரவேற்பை பெறும் பட்சத்தில், சென்னை, பெங்களூர், மும்பை உள்பட நாட்டின் இதர பெரு நகரங்களிலும் இந்த பாட் டாக்சி சேவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

 சென்னை- மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில்

சென்னை- மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Govt approves India's first pod taxi project in Gurgaon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X