ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு சமீபலகாலமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், 60 ஆயிரம் மின் கார்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளாவிய அளவில் சராசரியாக 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதில், பெரும்பாலும் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே முக்கிய காரணமாக உள்ளது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்த வெளியேறும் புகையானது அதிகளவு நச்சினைக் கொண்ட கரிய அமில வாயுவை வெளியிடுகிறது. இந்த வாயுவானது காற்றில் ஏற்கனவே கலந்துள்ள உலோகம், தூசு, மண், சல்பர் ஆக்ஸைடு ஆகியவற்றுடன் கலந்து விஷமாக மாறுகின்றது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

இதனை சுவாசிக்கும் மனிதனுக்கு நுரையீரல் புற்றுநோய், இதய கோளாறுகள், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த அமிலத்தின் வீரியம் அதிகரிக்கும்போது, இறப்பையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

அதனடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு மாற்றான சக்தியை வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுத்து வருகின்றன. அதனடிப்படையில், இயற்கைக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத சுற்றுச்சூழலின் நண்பான மின்வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

இதற்காக சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகள் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மின்வாகனங்களுக்கு மானியம் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

முன்னாதக மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், சார்ஜிங் நிலையங்களை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிமீ தூரத்துக்கும் சாலையின் இரு பக்கங்களிலும் மின்சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களையும் மின்மயமாக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் பங்கிற்கு இணையாக சார்ஜிங் நிலையங்கள் இல்லாத நிலையை மாற்றும் வகையிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி நகரங்களிலும் இ-ஸ்டேஷன்கள் அமைக்கப்படும்.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

இந்நிலையில், பொதுமக்களை மின்வகானத்தின் பக்கம் ஈர்க்கும்படி மேலும் ஒரு கவர்ச்சி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, மின் கார்களுக்கு ரூ. 2.5 லட்சம் வரை மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

இந்த திட்டத்தின்படி, முதல் 60 ஆயிரம் கார்களுக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, 20 ஆயிரம் ரூபாய் 20 ஆயிரம் ஹைபிரிட் கார்களுக்கு வழங்கப்பட உள்ளது. பசுமை எரிபொருள் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

மேலும், இத்திட்டத்தின் மூலம் இரண்டு மற்றும் மூன்று சக்கரவாகனம் உட்பட பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பஸ்களுக்கும் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையும், பஸ்ஸிற்கு அதிகபட்சமாக ரூ. 60 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

எடுத்துக்காட்டாக, மஹிந்திரா இ-வெரிட்டோ காரை வாங்குபவருக்கு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டமானது வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 2.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு: மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு எதற்காக தெரியுமா???

இந்த மானியம் மின்வாகனத்தின் பேட்டரி கிலோவாட்டை பொருத்து வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.10 ஆயிரம் மானியமும், பஸ்ஸிற்கு மட்டும் அது 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மின்வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

source: TOI

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Central Govt May Offer Up To RS 2.5l Subsidy For EV. Read In Tamil.
Story first published: Thursday, February 28, 2019, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X