குழந்தைபோல் ஜாலியா டாடா காரை ஓட்டி பார்த்தவர் யாரென்று தெரிகிறதா? ஒரு சமயத்தில் மாநிலம் முழுக்க இவர் கண்ட்ரோல்

இந்தியாவை ஆளும் பாஜக அரசு எலக்ட்ரிக் வாகனங்களில் கடந்த பல வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. முடிந்த வரையில் அனைத்து துறைகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சாலையில் ஓடும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை ஆவது எலக்ட்ரிக் வாகனங்களாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

இதனாலேயே பிரதமர் மோடியில் இருந்து மத்திய அமைச்சர்கள் வரையில் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை விளம்பரப்படுத்துவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எலக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக ஊக்கப்படுத்துவதையும், எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் வாங்க வலியுறுத்துவதையும் பார்க்க முடியும்.

central minister hd kumaraswamy drove tata harrier ev

ஆனால், சமீப காலமாக இத்தகைய செயல்களில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச்டி குமாரசாமி அவர்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது, டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) எலக்ட்ரிக் காரை மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி நேரில் ஓட்டி பார்த்துள்ளார். இதுதொடர்பான பதிவு ஒன்றை எச்டி குமாரசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எச்டி குமாரசாமி கடந்த 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சி அமைத்த பின் மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக பதவி அமர்த்தப்பட்டார். இதனால், தற்போது டெல்லியில் வசித்துவரும் எச்டி குமாரசாமியின் இருப்பிடத்திற்கே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களது பிராண்ட்-நியூ ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார் (Electric Car) உடன் சென்றுள்ளனர்.

central minister hd kumaraswamy drove tata harrier ev

அங்கு, அமைச்சர் எச்டி குமாரசாமியிடம் ஹாரியர் இவி காரை காண்பித்து வாழ்த்து பெற்ற டாடா நிறுவன அதிகாரிகள், ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரின் தன்னிச்சையாக பார்க் செய்து கொள்ளும் வசதியை அமைச்சர் முன் செய்து காண்பித்தனர். சரியான பார்க்கிங் பகுதியை அடையாளம் கண்டுவிட்டால், அதுகுறித்து காரில் பார்க்கிங் செட்டிங்கை ஏற்படுத்திவிட்டு காரை விட்டு கீழே இறங்கிவிட்டால், கார் தானாக பார்க் செய்துக் கொள்ளும்.

இதன் மூலமாக ஹாரியர் இவி எலக்ட்ரிக் கார்களை நெருக்கமாக நிறுத்த முடியும் என்பதால், பார்க்கிங் பிரச்சனைகளை குறைக்க முடியும். இத்தகைய வசதியை காரில் செய்து காட்டியதும் அசந்து போன மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி, பின்னர் ஆவலுடன் தனது இருப்பிடத்தின் வளாகத்திற்கு உள்ளேயே காரை ஓட்டி டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்த்துள்ளார்.

central minister hd kumaraswamy drove tata harrier ev

முறையாக சீட் பெல்ட் (Seat Belt) அணிந்துக் கொண்டு ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை எச்டி குமாரசாமி ஓட்டியுள்ளார். ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதனை கடந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வந்துள்ள முதல் எலக்ட்ரிக் கார், டாடா ஹாரியர் இவி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் சிறிய சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரிச்செய்ய வேண்டுமெனில் மக்கள் மத்தியில் தனது பிராண்ட் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் இவ்வாறான மக்கள் பிரதிநிதிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். அதன் முயற்சியாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமியிடம் தனது புதிய ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரை காண்பித்து ஆசி பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 21:25 [IST]
English summary
Central minister hd kumaraswamy drove tata harrier ev electric car check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X