மோடியின் அதிரடி திட்டம்...! சென்னை, பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..!

இந்தியாவில் மெட்ரோ ரயிலுக்கு போட்டியாக ரோப்வே, கேபிள் கார், இழுவை ரயில் போன்ற திட்டங்களை பொது போக்குரவத்திற்காக கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. சென்னை, பெங்களூர

இந்தியாவில் மெட்ரோ ரயிலுக்கு போட்டியாக ரோப்வே, கேபிள் கார், இழுவை ரயில் போன்ற திட்டங்களை பொது போக்குரவத்திற்காக கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் இது போன்ற திட்டங்கள் வருமா? அல்லது வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்பது தற்போது கேள்வி குறியாகவுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையால் ஜன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. குறிப்பாக பெருநகரங்களுக்கு மக்கள் அதிக அளவில் குடிபெயர்ந்து வருவதால் பெருநகரங்களில் நெருக்கடி அளவுவிற்கு அதிகமாக உள்ளது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

குறிப்பாக டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நகரங்களில் உள்ள நெருக்கடியை அந்த நகரங்களில் உள்ள சாலைகளில் பயணித்தாலே தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

பெருகி வரும் தொழிற் வளர்ச்சி காரணமாக நகரங்களை நோக்கி மக்கள் வருவதை நம்மால் இன்னும் சில காலங்களுக்கு தடுக்க முடியாது. துறைமுகங்கள், பன்னாட்டு விமான நிலையங்கள், என வெளிநாடுகளுக்கு எளிதாக பொருட்களை ஏற்றி செல்லும் வசதிகள் உள்ள நகரங்கள் தான் தொழிற்வளர்ச்சியடைகிறது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

சென்னை, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களில் வளர்ச்சி பெறுவதற்கு துறைமுகங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும் இது மட்டும் இல்லாமல் இந்த நகரங்கள் தான் அந்தந்த மாநிங்களின் தலை நகராக இருப்பதால் புதிய நிறுவனங்களும் இந்த பகுதியில் தான் துவங்கப்படுகின்றன.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இதன் காரணமாகவே இந்த நகரங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படி மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த நகரங்களில் பொது போக்குவரத்து வசதியாக பஸ்கள், ரயில்கள், மெட்ரோக்கள் மட்டுமே உள்ளன.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இந்த ரக போக்குவரத்தில் தான் விலை குறைவாக இருக்கிறது. ஆனால் இந்த மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மக்கள் தொகையை கணக்கிடும் போது பஸ் ரயில் , மெட்ரோ போக்குவரத்து வசதிகள் காணாது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இந்த நகரங்களில் உள்ள அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது போதாது என்று இன்று பலர் கார் மற்றும் பைக்குகளை வாங்க துவங்கி விட்டனர். இன்று சொந்த வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சொந்த வாகன பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

அதிக மக்கள் தொகை இருக்கும் நகரங்களின் நிலை தான் இப்படி என்றால் இரண்டாம் கட்டமாக அதிக மக்கள் தொகை இருக்கும் நகரங்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. அந்த நகரங்களில் பொது போக்குவரத்து வசதி மோசமாக இருக்கிறது. இந்த மாதிரியான நகரங்களில் பஸ்களை தவிர வேறு வசதியே இல்லை.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

உதாரணத்திற்கு தமிழகத்தில் கோவை, மதுரையை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த நகரங்களுக்கு உள்ளாவே பயணிக்க பஸ்களை தவிர குறைந்த விலை பொது போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. இதனால் மக்கள் சொந்த வாகன பயன்பாட்டிற்கு அதிகம் வந்து விட்டனர்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இது போன்ற நகரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களை விட சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே பெரு நகரங்களை போலவே இந்த நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் இருந்து வருகிறது. இதற்கிடையில் பராமரிப்பு இல்லாத ரோடுகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் என இங்கு வேறு சில சிக்கல்களும் உள்ளது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இதற்கிடையில் மத்திய சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை துறை அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் : "பெருநகரங்களில் உள்ள நெருக்கடியையும், மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாசு இல்லாத அதே நேரத்தில் குறைந்த பயண செலவில் செயல்படகூடிய புதிய வகையான போக்குவரத்துகளை வரவேற்று அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

அதன் படி மலை பகுதிகளில் மற்றம் வடகிழக்கு பகுதிகளில் உள்ள கடினமான பகுதிகளை கடக்க ரோப் வேஸ், கேபிள் கார்கள், இழுவை ரயில்கள் போன்றவற்றை பொது போக்குவரத்து வசதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இது போன்ற திட்டங்கள் இரண்டாம் கட்ட நகரங்கள் அல்லது மலை பிரதேசங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் காரணமாக மக்கள் சொந்த வாகனத்தை விட்டு விட்டு பொது வாகன பயன்பாட்டிற்கு மெதுமெதுவாக நகர துவங்குவார்கள்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இதற்காக மத்திய அரசு தற்போது WAPCOS மற்றும் Doppelmayr போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதில் WAPCOS என்பது இந்தியாவில் இருந்து செயல்படும் முன்னணி இன்ஜினியரிங் கட்டுமான நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் இருந்துகொண்டே உலகில் உள்ள 45 நாடுகளில் இன்ஜினியரிங் கட்டுமான பணிகளை செய்து வருகிறது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

Doppelmayr என்ற நிறுவனம் ஆஸ்திரியாவை சேர்ந்தது. இந்நிறுவனம் தான் உலகின் மிகப்பெரிய மற்றும் உயர் தர ரோப்வே தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரோப்வே வழிதடங்களை அமைத்து போக்குவரத்தை இயக்க வைத்துள்ளது.

எங்கள் டெலிகிராம் சேனிலில் உடனடியாக இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்..!

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

தற்போது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பொது போக்குவரத்திற்காக ரோப்வேகள், கேபிள்கார்கள், இழுவை ரயில்கள் உள்ளிட்ட திட்டங்களை கட்டமைக்க முழு திட்ட வரையாறை, கட்டுமான திட்டம், கட்டுமான பொருட்களை வாங்கும் திட்டம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என ஆய்வு செய்து வருகிறது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

பல்வேறு மாநிலங்களில் ரோப்வேகளை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்காக தற்போது வடிவமைக்கப்படும் திட்டம் உலக தர பாதுகாப்பு வசதியுடனும், நீடித்த உழைப்புடனும் இருக்கும் வகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி மாசு குறைவது மட்டும் அல்ல சுற்றுலாவும் மேம்படும். சுற்றுலா தளங்களில் இதை செயல்படுத்துவதன் மூலம் சுற்றுலாதுறைக்கு வருமானமும் பல மடங்களாக பெருகும். இது மட்டும் இல்லாமல் புதிய வேலைவாயப்புகள் உருவாகவும் இது உதவிபுரியும்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

மேலும் இந்த திட்டங்கள் எல்லாம் மாற்று எரிபொருளான மெத்தனால், எத்தனால் அல்லது எலெக்ட்ரிக் மூலங்களை வைத்தே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டதால் இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு பாரம் ஏற்படாது. பெரும்பாலும் எலெக்டரிக் இயந்திரங்களை கொண்டே இது செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

பொதுமக்கள் தங்கள் வாழ்விலும் மாற்ற எரிபொருளை பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும். அதாவது புதிதாக வாகனம் வாங்குபவர்கள் பெட்ரோல் வாகனத்திற்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் எலெக்ட்ரிக், மற்றும் மாற்றி எரிசக்தி திறன் கொண்ட வாகனங்களை பயன்படுத்த முன் வர வேண்டும் " என கூறினார்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி என்பது மிக அதிகமாக இருக்கிறது. இதற்கு மக்கள் அதிக அளவில் சொந்த வாகனங்களை பயன்படுத்துவது தான் முக்கியமான காரணம் மக்களை அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தவைக்க அரசு திட்டமிட வேண்டியது அவசியம்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

அதே நேரத்தில் மக்கள் தற்போது உள்ள பொது போக்குவரத்து என்ன அசெளகரியத்தை அடைகின்றனர். எதனால் அதை வெறுக்கின்றனர். என்பதை உணர்ந்து அதற்கு தீர்வு ஏற்படுவது போல் பொது போக்குவரத்தை கட்டமைக்க வேண்டும்.

சென்னை பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..! மோடி அரசின் புதிய திட்டமா?

இந்தியாவில் உள்ள மக்கள் தொகை கணக்கில் கொண்டு அதிக அளவிற்கு மக்கள் பயணிக்கும் வகையிலான போக்குவரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முடிந்த அளவிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

ஜப்பான் அரசு அந்நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டிராபிக்கை தற்போதே கணக்கிட்டு அதற்கு முன்னேற்பாடாக பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியாரை சேர்ந்த சுமார் 21 நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் 10 ஆண்டுகளில் ஜப்பானில் கார்களை பறக்கவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

பறக்கும் கார்களை நாம் இதுவரை திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளாகவோ அல்லது கார்டூன் சேனல்களிலோ பார்த்திருப்போம். சிறு வயதில் பறக்கும் கார்களில் செல்லவேண்டும் என ஆசைப்பட்ட நாம் விரைவில் அந்த கனவை நினைவாக்க காத்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

பறக்கும் கார்கள் என்பது விரைவில் சாத்தியமாகவுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது ஜப்பானும் இனைந்துள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

ஜாப்பான் அரசு தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களான உபேர், ஏர்பஸ், போயீங், டோயோட்டா குழுமத்தின் ஸ்டார்ட்அப் ஆன கார்டிவேட்டர், ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளட்ட 21 வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவோரை இணைந்து பறக்கும் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான் அரசு சுமார் 40.4 பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

இந்த 21 குழுமங்களும், பறக்கும் கார் தயாரிக்க பயன்படும் பல்வேறு வகையான தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்கி வரும் நிறுவனங்கள். அதிக திறன் கொண்ட பேட்டரி தயாரிக்கும் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் மோட்டார் தயாரிக்கும் நிறுவனம், பறக்கும் கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம், கார்களுக்கான தின பயன்பாட்டில் அனுபவம் நிறைந்த நிறுவனம் இவ்வாறான நிறுவனங்கள் ஒன்றினைந்துள்ளன.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

இந்நிறுவனங்களின் பிரதி நிதிகள் வரும் 29ம் தேதியில் ஜப்பானில் சந்தித்து இந்த திட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்ற ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

இதில் உபேர் நிறுவனம் ஏற்கனவே பிரான்ஸ், பாரீஸ் ஆகிய பகுதிகளில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர தற்போது அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

இது குறித்து ஜப்பான் அரசு கூறுகையில் : "பறக்கும் கார்களை தயாரிக்க ஐப்பான் அரசு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யும். ஜப்பானில் உள்ள டிராப்பிக்கிற்கு இந்த பறக்கும் கார்கள் தீர்வு சொல்லும் என நம்புகிறோம். இந்த கார்களுக்கு ஏற்றபடி எங்களது சட்ட விதிமுறைகளையும் மாற்ற முடிவு செய்துள்ளோம். " என கூறினார்.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

உலகில் எந்த இடங்களில் தற்போது பறக்கும் கார்கள் செயல்பாட்டில் இல்லை இன்றும் ஆராய்ச்சி மற்றும் விடிவமைப்பில் தான் உள்ளது. பறக்கும் ட்ரோன்கள் தான் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பறக்கும் ட்ரோன்களுக்கு என்று சில விதிமுறைகளை வைத்துள்ளனர்.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

இதற்கிடையில் உபேர் நிறுவனம், மற்றும் டெக்ஸாஸ் பல்கலை., அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து ராணுவ ஆய்வு லேப்பை அமைத்து அதில் பறக்கும் வானகங்கள் குறித்த தயாரிப்பை உருவாக்கி வருகிறது. தற்போது அந்த குழு புதிய வித ரிக்கிங் ரோட்டார்களை தயாரித்து டெஸ்ட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

மேலும் அதே உபேர் நிறுவனம் தற்போது பாரீஸ் மற்றும் பிரான்ஸ் பகுதியில் பறக்கும் கார்களை தயாரிக்கும் குழுவிற்காக சுமார் 23 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது உள்ள சுழ்நிலையில் இந்தியாவில் பறக்கும் கார் திட்டம் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது சாத்தியம் இல்லை என கூறமுடியும்.

ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

பிரான்ஸ் மற்றும் பாரீஸ் நகரின் கட்டமைப்புகள் மிக நேர்த்தியாக இருப்பதால் அந்த நாடுகளில் பறக்கும் கார்களை செயல்படுத்துவது சுலபம் ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் கட்டமைப்பு ஒழுங்கு இல்லை. இதனால் இந்தியாவில் தற்போதய சூழ்நிலைக்கு பறக்கும் கார்கள் சாத்தியமில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
central govt planning for new mode of public transport. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X