டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' சேவை!

டெல்லி- ஹரியானா இடையே விரைவில் வாட்டர் டாக்சி சேவை துவங்கப்பட உள்ளது.

By Saravana Rajan

டெல்லி- ஹரியானா இடையில் படகு போக்குவரத்து துவங்குவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. வரும் ஜுன் மாதம் முதல் படகு போக்குவரத்து சேவையை துவங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

வஸீராபாத்- பல்லா ஆகிய இடங்களுக்கு இடையே யமுனை ஆற்றில் இந்த படகு போக்குவரத்து சேவையை துவங்கப்படுகிறது. இந்த படகு போக்குவரத்து மூலமாக இரு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பயன்படும் என்பதுடன் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

குறிப்பாக, வஸீராபாத் மற்றும் பதேபூர் ஜத் ஆகிய இடங்களுக்கு நீர் வழித்தடம் மூலமாக இணைப்பு கிடைக்க உள்ளது. இதனால், பரபரப்பு மிகுந்த சமயத்தில் சாலை மார்க்கமாக வருவதற்கு 3.5 மணிநேரம் பிடிக்கும் நிலையில், படகு சேவையின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றுவிட வழி பிறக்க உள்ளது.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

தேசிய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த படகு போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. முதல் கட்டமாக 3 படகுகளை வாங்குவதற்கான நடைமுறைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

இந்த படகு போக்குவரத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திடனம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் படகு போக்குவரத்து துவங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும்.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

வஸீராபாத் மற்றும் பல்லா இடையிலான 22 கிமீ தொலைவுக்கு 5 நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 3 நிறுத்தங்களுடன் இந்த படகு போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

இந்த படகு போக்குவரத்தை தொடர்ந்து நீர் விளையாட்டுப் போட்டிகளை இதே பகுதியில் ஏற்படுத்துவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாத் துறை வெகுவாக மேம்படும்.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

இதுதவிர, டெல்லி- ஆக்ரா இடையில் ஆக்ரா கால்வாய் திட்டத்தின் மூலமாக பயணிகள் படகு போக்குவரத்தை ஏற்படுத்தும் திட்டமும் மத்திய அரசின் வசம் உள்ளது. இதன்மூலமாக, சுற்றுலாத் துறை வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி - ஹரியானா இடையே விரைவில் 'வாட்டர் டாக்சி' துவங்குகிறது!

இவை எல்லாவற்றையும் விட சாலை மார்க்கத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலும் சற்று தணியும் என்று நம்பப்படுகிறது. இதனிடையே, இந்த வழித்தடத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Centre Govt plans To Start Water Taxis on Yamuna Soon.
Story first published: Tuesday, January 31, 2017, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X