அந்த சீரியல்ல அவங்களுக்கு பெரிய ரோல்கூட இல்ல! விலை உயர்ந்த ஆடி காரை தட்டி தூக்கிய பிரபல சின்ன திரை நடிகை!
சின்னத் திரை நடிகையாக இருந்துக் கொண்டு, முன்னணி திரைப்பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு விலை உயர்ந்த காரை டிவி சீரியல் நடிகை ஒருவர் வாங்கி இருக்கின்றார். அவர் யார்? அவர் என்ன காரை வாங்கி இருக்கின்றார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பாலிவுட் சின்னத் திரையைச் சேர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக சஹாட் கண்ணா இருக்கின்றார். இவர் பாலிவுட் சின்னத் திரையின் புகழ் பெற்ற சீரியல்களில் ஒன்றான படே அச்சே லக்தே ஹைன் (Bade Achhe Lagte Hain) எனும் சீரியலிலேயே முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

ஆனால், அது முன்னணி ரோல் என்று கூறிவிட முடியாது. அதன் ஹீரோ மற்றும் ஹீரோயின் வேறொருவர்கள் ஆவார். அவர்களுக்கு சினிமா ஹீரோ- ஹீரோயின்களைவிட ஃபேன்கள் அதிகம் ஆகும். நகுல் மேதா மற்றும் பிரியா ஆகியோரே அந்த சீரியலின் முன்னணி கதாபாத்திரங்கள் ஆவர்.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, சாதாரண ரோல் ஒன்றை இந்த நாடகத்தில் ஆற்றி விரும் சஹாட் கண்ணா, பிரபல நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். சஹாட் கண்ணா வாங்கி இருப்பது புத்தம் புதிய ஆடி ஏ6 சொகுசு செடான் ரக காராகும்.
இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 61.56 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரையில் இந்த கார் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலைக் கொண்ட சூப்பரான ஆடம்பர காரையே சஹாட் கண்ணா வாங்கி இருக்கின்றார்.
இவர் நேற்றுதான் பாலிவுட் சின்ன திரையுலகில் நுழைந்தவர் என எண்ணிக் கொள்ள வேண்டாம். தன்னுடைய சிறு வயது முதலில் இருந்தே இவர் நடிப்பு கலையில் ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில், அவர் முதலில் நடித்தது ஓர் விளம்பரத்தில்தான். புகழ்பெற்ற கேட்பரீஸ் சாக்லேட் விளம்பரத்திலேயே இவர் முதன் முதலில் தோன்றினார்.
2002ஆம் ஆண்டிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது. அந்த ஆண்டு முதலே அவர் நடிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவரின் முதல் டிவி ஷோ 'சச்சி பாத் சபி ஜாக் ஜானே' ஆகும். இதை அடுத்து இன்னும் டிவி தொடர்களில் அவர் நடித்திருக்கின்றார். இத்தகைய அயராத உழைப்பிற்கு கிடைத்த பலனே அவருடைய தற்போதைய வாழ்க்கை நிலைமை.
மேலும், இதற்கு கிடைத்த பரிசாகவே தற்போது அவர் வாங்கி இருக்கும் ஆடி சொகுசு கார் பார்க்கப்படுகின்றது. தன்னுடைய இந்த கார் கொள்முதலை அவரே தன்னுடைய ரசிகர்களுக்கு வெளிக்காட்டி இருக்கின்றார். மேலும், காரை திரையில் இருந்து திறந்து, அதற்கு பூஜை செய்யக் கூடிய வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா கணக்கில் வெளியிட்டு இருக்கின்றார்.
பூஜையை அடுத்து கேக் வெட்டியும் அவர் கொண்டாடினார். இதன் பின்னரே கார் அவருக்கு டெலிவரி கொடுக்கப்பட்டது. மிகுந்த ஆடம்பர வசதிகள் நிறைந்த செடான் ரக காராக ஆடி ஏ6 இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
கவர்ச்சியான தோற்றம் மற்றும் மனம் கவர் அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே சில முன்னணி நட்சத்திரங்களின் பிரியமான செடான் காராகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்-கள் இருக்கின்றன. மிருகத்தின் அழகிய கண்களைப் போன்ற தோற்றத்தில் அது இருக்கும்.
இதுமட்டுமின்றி, இரண்டு தொடுதிரைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று மற்ற கன்ட்ரோல்களை செய்யவும் உதவும். இதுதவிர, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த லக்சூரி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்தவரை இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 245 பிஎஸ் மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக இந்த காரில் வழங்கப்படுகின்றது. இத்தகைய சிறப்புகள் கொண்ட லக்சூரி காரையே சின்ன திரை நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சின்னத் திரை இந்த லக்சூரி காரை வாங்கி இருப்பது பnjலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரை வாங்கியதற்காக பலர் அவரை பாராட்டியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், அவரது ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








