இடியை இறக்கீட்டாங்க! பெட்ரோல், டீசலில் ஓடும் கார், டூவீலர்களுக்கு செக்! இவ்ளோ பெரிய ஆப்பு வரும்னு எதிர்பாக்கல!
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக, பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. இதற்காக எலெக்ட்ரிக் வாகன கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
யூனியன் பிரதேசமான சண்டிகரை (Chandigarh) பொறுத்தவரையில், அதன் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சண்டிகரில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அல்லாத மற்ற வாகனங்களை பதிவு செய்வதை படிப்படியாக குறைப்பதற்கு இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என நம்பப்படுகிறது.

நடப்பு 2023-24ம் நிதியாண்டில், எவ்வளவு பெட்ரோல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல்/டீசல் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யலாம்? என இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில், 6,202 பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை மட்டுமே சண்டிகரில் பதிவு செய்ய முடியும்.
இந்த எண்ணிக்கை எட்டப்பட்ட பிறகு, எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். நடப்பு 2023-24ம் நிதியாண்டு தொடங்கிய கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தற்போது வரை சண்டிகரில், 4,032 பெட்ரோல் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. எனவே நடப்பு நிதியாண்டில் இன்னும் 2,170 பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இந்த 2,170 பெட்ரோல் இரு சக்கர வாகனங்கள் நடப்பு ஜூன் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் ஜூலை மாதத்தில் இருந்து பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை பதிவு செய்வதை நிறுத்துவதற்கு சண்டிகர் நிர்வாகம் தயாராகி கொண்டுள்ளது.
மறுபக்கம் சண்டிகர் நிர்வாகம் நடப்பு நிதியாண்டில் மேற்கொண்டு 22,626 எலெக்ட்ரிக் அல்லாத நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே பதிவு செய்யவுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் டிசம்பர் மாதத்திற்குள் எட்டப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு இந்த வாகனங்களை பதிவு செய்யும் பணிகளும் நிறுத்தப்பட்டு விடும்.
அதாவது வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு, சண்டிகரில் பெட்ரோல்/டீசல் கார்களை பதிவு செய்ய முடியாது. எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். மக்கள் வழக்கமான பெட்ரோல்/டீசல் வாகனங்களில் இருந்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் காலங்களில் இந்தியா முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். பெட்ரோல், டீசல் வாகனங்களின் சகாப்தம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் என்பதால், தற்போதே வாடிக்கையாளர்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தொடங்கி விட்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








