மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

மோடிக்கு எதிராக மக்களை திரட்டுவதற்காக சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல் அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார்.

ஆனால் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததால், பாஜக கூட்டணியில் இருந்து அவர் திடீரென விலகினார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்பது மிக நீண்ட நாட்களாக சந்திரபாபு நாயுடுவால் வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையாகும்.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

இருந்தபோதும் மத்திய அரசு அதனை தற்போது வரை நிறைவேற்றவே இல்லை. இதன் காரணமாகதான் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. இதன்பின் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் நடவடிக்கைகளிலும் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். அத்துடன் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பல்வேறு போராட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் (பிப்.11, திங்கள் கிழமை) மிக பிரம்மாண்ட போராட்டத்தை சந்திரபாபு நாயுடு நடத்துகிறார். இதன்மூலம் மத்திய அரசின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்க்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

எனவே பல்லாயிரக்கணக்கான பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி விரும்புகிறது. இதற்காக தென் மத்திய ரயில்வேவிடம் இருந்து 2 சிறப்பு ரயில்களை ஆந்திர பிரதேச மாநில அரசு வாடகைக்கு எடுத்துள்ளது.

ஒவ்வொரு சிறப்பு ரயிலும் தலா 20 கம்பார்ட்மெண்ட்களை கொண்டதாக இருக்கும். டெல்லி போராட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி செல்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் அனந்த்ப்பூர் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் இருந்து இவ்விரு ரயில்களும் புறப்படுகின்றன.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

சரியாக நாளை காலை 10 (பிப்.10, ஞாயிறு) மணிக்கு, இரண்டு ரயில்களும் டெல்லியை சென்றடையும். டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த ரயில்களில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ரயில்களையும் வாடகைக்கு எடுப்பதற்காக மட்டும் ஆந்திர பிரதேச அரசின் பொது நிர்வாக துறை 1.12 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது!!! பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.

எனவே பொதுமக்களுடன் சேர்த்து, பாஜக மற்றும் மோடிக்கு எதிரான மனநிலையில் உள்ள எதிர் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தெலுங்கு தேசம் கட்சி நடத்தும் இந்த போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளை மறுநாள் தலைநகர் டெல்லி குலுங்க போவது நிச்சயம். ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருப்பதால், சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மோடிக்கு எதிராக ரயிலில் மக்களை அழைத்து சென்று சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடும் சூழலில், தமிழகத்துடன் தொடர்புடைய 2 முக்கியமான ரயில்களை தொடங்கி வைக்க உள்ளார் மோடி.

டிரெயின்-18 மற்றும் தேஜஸ் ஆகியவைதான் அந்த 2 முக்கியமான ரயில்கள். இதில், டிரெயின்-18 ரயிலானது சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF-Integral Coach Factory) உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

தற்போதைய நிலையில் இதுதான் இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படுகிறது. டெல்லி-ராஜதானி வழி தடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டிரெயின்-18 ரயில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது மணிக்கு 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் டிரெயின்-18 ரயில் பறந்தது.

இந்தியாவில் வேறு எந்த ரயிலும் இவ்வளவு வேகத்தில் செல்லாது. எனவேதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை டிரெயின்-18 பெற்றுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் இதற்கு ''வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்'' என பெயர் சூட்டினார்.

இந்த சூழலில் வரும் 15ம் தேதி (வெள்ளி) டெல்லியில் நடைபெற உள்ள விழாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படவுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தற்போதைக்கு தமிழகம் உள்பட எந்த ஒரு தென் இந்திய மாநிலத்திற்கும் இயக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தென் இந்திய பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ள இரண்டாவது முக்கியமான ரயில் தேஜஸ். சென்னை-மதுரை இடையே தேஜஸ் அதிவேக விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. தேஜஸ் ரயிலின் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு வெறும் ஆறரை மணி நேரத்தில் (6.30) சென்று விட முடியும்.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

சென்னை-மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் ரயில்தான் தற்போது வரை தெற்கு ரயில்வேயின் அதிவேக ரயிலாக உள்ளது. இதன் பயண நேரம் 7 மணி நேரம் 70 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த சாதனையை தேஜஸ் அதிவேக விரைவு ரயில் முறியடிக்கவுள்ளது.

இந்த ரயிலும் கூட சென்னை பெரம்பூர் ஐசிஎப்பில்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சென்னை-மதுரை இடையிலான தேஜஸ் அதிவேக விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி (செவ்வாய்) தொடங்கி வைக்கிறார்.

இவ்விரு ரயில்களும் இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளன. என்றாலும் டிரெயின்-18தான் உலக அளவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டிரெயின்-18 ரயில் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிறப்பம்சங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பட்ஜெட் நியாயமானதாகவே கருதப்படுகிறது. வரும் காலங்களில் இன்னும் ஏராளமான டிரெயின்-18 ரயில்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. தொடர்ச்சியான தயாரிப்பின் மூலம் இதன் உற்பத்தி செலவு இன்னும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெயின்-18 ரயிலின் வெளிப்புற தோற்றம் புல்லட் ரயிலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இன்ஜின் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவின் முதல் ''இன்ஜின்லெஸ்'' (Engineless) ரயில் என்ற பெருமையையும் இது பெறுகிறது.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

டிரெயின்-18 ரயிலில் 16 கோச்கள் இணைக்கப்பட்டிருக்கும். இதில், 1,128 பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். சோதனை ஓட்டத்தின்போது டிரெயின்-18 ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது.

ஆனால் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக டிரெயின்-18 ரயில் கருதப்படுகிறது. சதாப்தி எக்ஸ்பிரசுடன் ஒப்பிடுகையில் டிரெயின்-18 ரயிலின் பயணம் நேரம் 15 சதவீதம் குறைவு.

வெறும் 18 மாதங்களில் டிரெயின்-18 ரயில் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. ரயில் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, டிவி திரை, சொகுசான இருக்கைகள், வை-பை என டிரெயின்-18 ரயிலின் இதர சிறப்பம்சங்களும் அமர்க்களப்படுத்துகின்றன.

இதில், நவீனகால பயணிகளுக்கு ஏற்றவாறு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையிலும் கழிவறைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்தியாவிடம் இருந்து டிரெயின்-18 ரயிலை வாங்க உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், மலேசியா, பெரு, இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் என உலகின் பல்வேறு நாடுகளும் டிரெயின்-18 ரயிலை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன. மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டுள்ள டிரெயின்-18 ரயிலில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களே இதற்கு காரணம்.

மோடிக்கு எதிராக மக்களை திரட்ட சந்திரபாபு நாயுடு செலவிடும் தொகை இதுதான்... கடும் அதிர்ச்சியில் பாஜக

ஒரு டிரெயின்-18 ரயிலை உருவாக்க இந்தியாவிற்கு ஆன செலவு 100 கோடி ரூபாய்தான். ஆனால் வெளிநாடுகளுக்கு ஒரு ரயிலை 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் தேஜஸ் அதிவேக விரைவு ரயிலிலும் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தேஜஸ் அதிவேக விரைவு ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதிலும் வை-பை, சிசிடிவி கேமரா என கிட்டத்தட்ட விமானத்திற்கு இணையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chandrababu Naidu Led Andhra Government Spends Rs.1.12 Crore On Special Trains To Ferry People For Delhi Protest. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X