ஜூலை 13ல் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 ; இந்த முறை இடியே விழுந்தாலும் டார்கெட் மிஸ் ஆகாது!
இஸ்ரோ நிலவை ஆய்வு சந்திரயான் 3 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது. இதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து முடிந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான பணி தற்போது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவிற்கான விண்வெளி ஆய்வு பணிகளை இஸ்ரோ அமைப்பு செய்து வருகிறது. இஸ்ரோ சந்திரனிற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திராயன் என்ற திட்டத்தை வகுத்து விண்வெளியில் ஆய்வுகளை நடத்தி வருகிறது. முதன்முறையாக சந்திரயான் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

இது சந்திரனின் நள் வட்ட பாதையில் சென்று நிலவில் உள்ள விஷயங்களை ஆய்வு செய்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2 திட்டத்திற்கான பணிகள் நடந்தது. இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரோவரை விண்ணில் இறக்கி அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த சந்திராயன் 2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான் 2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்பொழுதே சந்திரயான் 3 என்ற ஒரு திட்டத்தை துவங்கப் போவதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு விட்டது. முன்னர் நடந்தது போல் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இந்த முறை வெற்றிகரமாக நிலவில் இந்தியா தரை இறங்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு சோதனைகளும் செய்யப்பட்டுவிட்டன.
வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சோதனைகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு தற்போது ஏவுதலுக்கு தயாராக தயார் செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 மூலம் இந்தியா படித்த பாடத்தை வைத்து சந்திரயான் 3 வடிவமைப்பை மாற்றியுள்ளனர். சந்திரயான் 2 வில் இருந்தது போல் சந்திரயான 3-யில் ஆர்பிட்டர் என்ற விஷயம் இல்லை. இதன் பேலோடில் லேண்டை மற்றும் ரோவர் ஆகிய இரண்டு விஷயங்கள் மட்டுமே இருக்கிறது.
பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட் சரியாக இந்த லேண்டர் மற்றும் ரோவரை நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் முன் வரை கொண்டு சென்று விடும். பின்பு அங்கிருந்து லேண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிக்கப்பட்டு லேண்ட்டர் நிலவில் தரையிறக்கப்படும். லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பின்பு அதிலிருந்து ரோவர் வெளியேறி தனது ஆய்வு பணிகளை துவங்கி விடும்.
தற்போது இந்த சந்திரயான் 3 திட்டத்திற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக லேண்டர் பாதுகாப்பாக திரையறங்குவது, சாஃப்டான லேண்டிங், மற்றும் ரோவர் நிலவின் மற்ற பகுதிகளுக்கு பயணிக்கும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டது. இதில் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது.
இது மட்டுமல்ல இந்த ரோவர் நிலவில் இறங்கியதும் அங்குள்ள மணல் மற்றும் மற்ற பொருட்களில் உள்ள கெமிக்கல் மற்றும் இயற்கையான பொருட்கள் ஆகியவற்றை டெஸ்ட் செய்வதுடன், நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவட்டை செய்ய உள்ளது. இந்த தகவல்களை நேரடியாக பூமிக்கு அனுப்பும்.
இது ஒரு புறம் இருக்க நிலவிலிருந்து பூமியையும் ஆராய்ச்சி செய்யும் பணியையும் பணிக்காக இந்த லேண்டருடன் ஸ்பெக்ட்ரோ போலோமெட்ரி ஆப் ஹாபிட்டபிள் பிளானட் எர்த் என்ற ஒரு கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இது நிலவின் நீள் வட்ட பாதையிலிருந்து பூமியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திரயான்3 திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்விற்கு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திரயான் 3 திட்டத்திற்காக மொத்தம் ரூ 615 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திரயான் 3 குறித்த மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இஸ்ரோ பல முக்கியமான சாதனைகளை மிக அசாதாரணமாக செய்கிறது. சந்திரயான் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் அறிவியல் துறையில் பல முக்கியமான மாற்றங்களை செய்யும் என நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த சந்திரயான் ஏவுதலுக்காக உங்களை போல நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.


Click it and Unblock the Notifications








