ஹாலிவுட் படத்துல கூட இப்படி ஒரு சீனை பார்த்திருக்க மாட்டீங்க! சந்திரயான் 3 இப்படி தான் நிலைவில் தரையிறங்கும்!
சந்திரயான் 3 நாளை மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது சந்திரயான்2 வெற்றிகரமாக அமையாத நிலையில் தற்போது அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது இது நாளை எப்படி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் இதற்காக போடப்பட்டுள்ள திட்டங்கள் என்ன என விரிவாக காணலாம் வாருங்கள்.
இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாக இந்த சந்திராயன் திட்டம் பார்க்கப்படுகிறது. நிலவில் சென்று ஆய்வுகளை நடத்திய ஒரு சில நாடுகளில் இந்தியாவும் நாளை இணையப் போகிறது இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திராயன்3 விண்கலத்தை விண்வெளிக்கு ஏவினர்.

சந்திரயான் 3 விண்கலம் பூமியை சுற்றி பின்பு நிலவின் புவியீர்ப்பில் ஈர்க்கப்பட்டு நிலவை சுற்றி தற்போது லேண்டர் தனியாக பிரிந்து நிலவில் 25 கிலோமீட்டக்கு 132 கிலோமீட்டர் என்ற சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது. இந்த லாண்டர் நாளை சரியாக இந்திய நேரப்படி மாலை 5:47 மணிக்கு தனது தரையிறங்கும் பணியை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுதான் இந்த திட்டத்திலேயே மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 2 இப்படியாக நிலவில் தரையிறங்கும் போது தான் பிரச்சனை ஏற்பட்டு அது நிலவில் மோதியது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் சாஃப்ட் லேண்டிங் ஆக நிலவில் தரையிறங்க விஞ்ஞானிகள் பல முக்கியமான கணக்கீடுகளை செய்துள்ளனர். இது பற்றி தான் இங்கு நாம் இப்பொழுது விரிவாக காணப்போகிறோம்.

இஸ்ரோ இந்த சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் ஆவதற்கு மொத்தம் நான்கு விதமான கட்டங்களாக இதன் பணிகளைப் பிரித்துள்ளது. இதன் முதல் கட்டம் ரஃப் பிரேக்கிங் அதாவது விக்ரம் லேண்டர் நாளை மாலை சரியாக 5:47 மணிக்கு அது தரையிறங்கும் பகுதியில் இருந்து சுமார் 745.5 கிலோமீட்டர் தொலைவில் 30 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்.
இந்த நேரத்தில் விக்ரம் லேண்டர் மணிக்கு 1.68 கிலோமீட்டர் வேகத்தில் தன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஆரம்பத்தில் அதன் உயரம் குறையாமல் தொடர்ந்து 30 கிலோமீட்டர் உயரத்திலேயே தன் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கும்.அந்த நேரத்தில் அதன் இன்ஜின்கள் செயல்பட்டு தன் இலக்கை நோக்கி பயணிக்கும் நேரத்தை வினாடிக்கு 358 மீட்டராக குறைக்கும்.

அதே நேரம் அதன் உயரத்தை குறைக்க இன்ஜின்கள் இயக்கப்பட்டு வினாடிக்கு 60 மீட்டர் என்ற கணக்கில் உயரம் குறையும். சுமார் 690 வினாடிகள் இதன் உயரம் குறையும் பணி நடைபெறும் அதே நேரம் இலக்கை நோக்கி செல்லும் தனது வேகத்தை குறைக்கவும் செய்யும்.
அப்பொழுது இதை இன்ஜின்கள் செயல்பட்டு லேண்டரை அதன் தரையிறங்கும் பகுதியை நெருங்க நெருங்க உயரத்தையும் குறைத்துக் கொண்டே வரும் சுமார் 30 கிலோமீட்டர் உயரத்திலிருந்து 7.42 கிலோ மீட்டர் உயரம் வரை அதன் உயரத்தை குறித்து அதே நேரம் லேண்டிங் பகுதியையும் சுமார் 30 கி.மீ தொலைவு என்ற தூரத்தில் நெருங்கும்.

அடுத்ததாக இரண்டாவது கட்டம் இந்த கட்டத்திற்கு பெயர் ஆல்டிடியூட் ஹோல்டு அதாவது 7.42 கிலோமீட்டர் உயரத்தில் இந்த லேண்டர் வரும்போது அதன் உயரம் மேலும் குறைக்கப்படாமல் தொடர்ந்து அதே உயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில் சாய்வாக இருக்கும் இந்த லேண்டர் அதன் இன்ஜின்களை பயன்படுத்தி நேராக மாறும் இப்படியாக நேராக மாறும்போது தான் லேண்டர் தரையில் இறங்கும்போது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இறங்க முடியும்.
சந்திரயான் 2 விண்கலம் இப்படியாக நேராக மாறுவதில்தான் பிரச்சனை ஏற்பட்டது இதனால் தான் இது சரியாக நிலவில் தரையிறங்காமல் நிலவில் சென்று மோதியது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் படி இந்த ஆல்டியூட் ஹோல்டு கட்டம் வெறும் பத்து நோடிகளில் நடந்து முடியும்.

இதில் லேண்டெர் தனது பொசிஷனை சாய்வாக இருந்து நேராக மாற்றுவதற்குள் 3.48 கிலோமீட்டர் தனது இலக்கை நெருங்கியிருக்கும். அதே நேரம் தனது உயரத்தை 7.42 கிலோமீட்டர் இருந்து 6.8 கிலோமீட்டர் குறைத்திருக்கும். அதே நேரம் இலக்கை நோக்கி நொடிக்கு 336 மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் உயரத்தையும் நொடிக்கு 59 மீட்டர் என்ற வேகத்தில் குறைத்துக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் மூன்றாவது கட்டத்திற்கு இந்த லேண்டர் நுழையும் இந்த மூன்றாவது கட்டம் மொத்தம் 175 நொடிகள் வரை செயல்படும். இதில் விக்ரம் லேண்டர் தான் தரை இயங்கக்கூடிய இடத்திலிருந்து 28.58 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அதே நேரம் உயரத்தை பொருத்தவரை 6.8 கிலோ மீட்டர் இருக்கும் இப்பொழுது இதன் உயரம் 800 முதல் 1300 மீட்டராக குறைக்கப்படும் குறைக்கப்படும். அதற்குள் தான் இறங்கவேண்டிய இலக்கு பகுதி அருகே நெருங்கிவிடும்.
இந்த இடத்தில் தான் விக்ரம் லேண்டரின் சென்சார்கள் செயல்பட துவங்கும். இதன் சென்சாரகள் லேண்டிங் செய்யப்படும் இடத்தின் தன்மையை குறித்து ஆய்வு செய்யும் அதே நேரத்தில் மெதுவாக விக்ரம் லேண்டரும் தனது உயரத்தை குறைத்துக் கொண்டே வரும். ஆனால் குறைவான வேகத்தில் தான் தரையிறங்கும்.
சரியாக தான் இறங்கும் இடத்திலிருந்து 150 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் இருக்கும் போது இதன் சென்சார்கள் உள்ள தகவல்களை வைத்து இந்த இடத்தில் இறங்கலாமா வேண்டாமா என்ற முடிவே விக்ரம் எடுக்கும். எந்த பிரச்சினையும் இல்லாமல் இறங்கலாம் என்ற முடிவு வந்தால் தொடர்ந்து தனது உயரத்தை குறைத்துக் கொண்டே வரும்.
அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதுவே தானாக தனது இன்ஜின்களை செயல்படுத்தி அந்த இடத்தை நோக்கி நகரத் துவங்கி விடும். அதன் உயரம் குறைய குறைய விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி செல்லும் வேகமும் வெகுவாக குறையும்.
அதற்கு தகுந்தார் போல் இஞ்சினின் வேகமும் இருக்கும். இதுதான் இஸ்ரோ சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை சரியாக நிலவில் லேண்ட் செய்ய செய்துள்ள திட்டம். இது எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் ஆகிவிடும்.
சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள் இந்த சந்திரயான் 3 விண்கலத்தில் செய்யப்பட்டுள்ளன சந்திரயான் 2 விண்கலத்தில் தரையிறங்குவதற்காக 400 நியூட்டன் திறன் கொண்ட நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தது ஆனால் இந்த சந்திரயான் 3 விண்கடத்தில் 740 நியூட்டன் திறன் கொண்ட நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது அதாவது முன்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக திறன் கொண்ட இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன் புதிய தொழில்நுட்பம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாய்வாக இருக்கும் லேண்ட்டரை நேராக நிமிர்த்து விடும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்படியாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது அதன் வேகம் நொடிக்கு மூணு மீட்டர் என்ற வேகத்தில் நிலவில் சென்று தரையிறங்கும்.
நொடிக்கு 3 மீட்டர் என்றால் ஏதோ குறைவான வேகம் என நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம் இந்த வேகத்தில் ஒரு மனித உடல் தரையில் விழுந்தால் எலும்புகள் எல்லாம் நொறுங்கி விடும் அளவிற்கு சேதாரம் ஏற்படும். மனிதர்கள் இந்த வேகத்தில் விழுந்தால் உயிர் பிழைக்க கூட முடியாது இதை தான் சாஃப் லேண்டிங் என சொல்கிறார்கள்.
ஆனால் விக்ரம் லாண்டரை வடிவமைத்த விஞ்ஞானிகள் இந்த வேகத்தில் சென்று விக்ரம் லேண்டெர் நிலவில் தரையிறங்கினாலும் விக்ரம் லாண்டருக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் இதை வடிவமைத்துள்ளனர். மேலும் இதில் உள்ள அனைத்து சென்சார்களும் கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் போனாலும் எந்தவித பிரச்சனையும் இன்றி இதன் இன்ஜின்கள் செயல்பட்டு விக்ரம் லாண்டரை பாதுகாப்பாக தரை இறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
அதே நேரம் இதில் பொருத்தப்பட்டுள்ள நான்கு இன்ஜினில் இரண்டு இன்ஜின்கள் செயல்படாமல் போனாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் இந்த பிரச்சனையும் இருக்காது. அதற்காக தான் இந்த இன்ஜினின் திறன் இரண்டு மடங்காக வழங்கப்பட்டுள்ளது.. வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியவுடன் அதிலிருந்து ரோபோ வெளியாகி புகைப்படம் எடுத்து அதை இஸ்ரோவிற்கு அனுப்பும். இப்படியாக நாளை மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 என்பது இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டமாக இருக்கிறது. வெகு சில நாடுகளே நிலவில் தரையிறங்கியுள்ள இந்நிலையில் தென்துருவப் பகுதியில் இதுவரை வெற்றிகரமாக எந்த நாடும் தரையிறங்கவில்லை. இந்தியா இந்த சாதனையை செய்தால் உலகிலேயே இந்த சாதனையை செய்த முதல் நாடாக இந்தியா தான் இருக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த சாதனையை இந்தியாவிற்காக செய்வார்கள் என்று நாம் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications









