சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்ப்பது எப்படி? இஸ்ரோ செய்துள்ள திட்டம் இது தான்!

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெற்றிகரமாக பயணித்து வரும் இந்த லேண்டர் தற்போது நிலவிற்கு மிக அருகில் உள்ளது. இதுகுறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோவின் கனவு திட்டமாக இருப்பது சந்திரயான். இந்த திட்டத்திற்காக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் சந்திரயான் 3 விண்கலத்தை ராக்கெட் மூலம் ஏவியது. இந்த சந்திரயான் 3 பூமியின் புவியீர்ப்பு விசையில் பூமியை சுற்றி வந்து மெல்ல மெல்ல பூமியிலிருந்து விலகி நிலவின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு தற்போது நிலவை சுற்றி வருகிறது.

chandrayaan 3 landing live telecast

நிலவில் சுமார் 135 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது இதன் புரொபல்ஷன் மாடுலில் இருந்து இதன் லேண்டர் தனியாக பிரிந்தது. கடந்த 20ஆம் தேதி அப்டேடடின் படி இந்த லேண்டர் நிலவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் உயரத்தில் தான் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் எந்நேரம் வேண்டுமானாலும் நிலவில் தரையிறங்கலாம். தற்போது இஸ்ரோ நிலவில் தரையிறங்கும் பகுதியில் சூரிய வெளிச்சம் ஏற்படுவதற்காக காத்திருக்கிறது.

பொதுவாக நிலவில் ஒரு துருவத்தில் 14 நாட்களும் மற்றொரு துருவத்தில் 14 நாட்களும் வெயில் இருக்கும் அதனால் தற்போது நிலவில் தென்துருவப் பகுதியில் வெயில் இல்லை. அங்கு இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு வெயில் வரத் துவங்கிவிடும் வெயில் வந்ததும் சரியாக லேண்டர் தனது லேண்டிங் பொசிஷனை பார்த்து அங்கு தரை இறங்கும் பணியை துவக்கிவிடும்.

இதன்படி கணக்கிட்டால் விக்ரம் லேண்டர் சரியாக இந்திய நேரப்படி வரும் 23ஆம் தேதி மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கி விடும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இஸ்ரோ திட்டமிட்டபடியே அனைத்து பணிகளும் சரியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் விக்ரம் லண்டன் விரைவில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நிலவில் தடம் பதித்து சாதனையை படிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை அமெரிக்கா,சீனா,ரஷ்யா ஆகிய நாடுகள் தான் வெற்றிகரமாக நிலவில் தர இறங்கி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்த தரையிறங்குதல் மூலம் இந்தியாவும் மிகப்பெரிய சாதனையை படைத்து விண்வெளி உலகில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்க உள்ளது. இந்த மூன்று நாடுகளும் நிலவில் தரை இறங்கியிருந்தாலும் பெரும்பாலும் இது வடதுருவத்தை மையமாக வைத்து தரையிறங்கியுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது என்பது சவாலான விஷயமாக இருக்கிறது. ஏற்கனவே சந்திரயான் 2 இதற்கான முயற்சியில் ஈடுபட்டு அது பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் சந்திரயான் 2 மூலம் இஸ்ரோ கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து உருவாக்கப்பட்ட விண்கலமாக இருப்பதால் இது வெற்றிகரமாக தரையிறங்கும் என உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரயானுக்கு போட்டியாக ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் கடந்த 11ஆம் தேதி அனுப்பியது. இது சந்திராயனை விட சீக்கிரமாக விண்ணில் சென்று தரை இறங்கும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த லூனா 25 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் முன்பே பல விஞ்ஞானிகள் இது குறித்து விமர்சனம் செய்தனர். இந்த விண்கலம் சரியான முறையில் வடிவமைக்கப்படாததால் இது நிலவில் தரையிறங்குவது சாத்தியமே இல்லை என கூறினார்.

அதன்படி லூனா 25 விண்கலம் நிலவில் தரையிறங்காமல் நிலவில் சென்று மோதியது. தற்போது வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலம் தான் நிலவின் தென் துருவ பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதி மாலை இந்தியா நிலவில் தன் காலடித்தடத்தை பதித்து பெரும் சாதனையை படைக்கப் போகிறது என்பது உறுதியாக தெரிகிறது.

இந்தியா இந்த சாதனையை படைக்க போகும் நிகழ்வை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதன்படி வரும் 23ஆம் தேதி மாலை 5:27 மணிக்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர், பேஸ்புக், யூடியூப், போன்ற தளங்களிலும் தூர்தர்ஷன் டிவி மூலமும் இதன் நேரலை காட்சிகள் ஒளிபரப்பப்படும் அதன் மூலம் மக்கள் நிலவில் சந்திரயான் 3 தரை இறங்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நேரடியாக காண முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவது என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் பல பள்ளி/ கல்லூரிகளில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவது குறித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ,ஆசிரியர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்டுக்க உள்ளனர்.. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நீங்களும் உங்கள் வீடுகளிலும், உங்கள் செல்போன்களிலும் நேரடியாக பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 10:43 [IST]
English summary
Chandrayaan 3 landing on the moon aug 23 time live telecast details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+