"திக்.. திக்.. திக்.." நேரம் துவங்கியது! சரியான டைமில் சந்திரயான்-3 கிளம்பினால் தான் இதெல்லாம் நடக்கும்!

இஸ்ரோ நாளை சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தத் தயாராகிவிட்டது. இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக இஸ்ரோ அனுப்பப் போகும் இந்த சந்திரயான்-3 விண்கலம் குறித்த முழுமையான தகவல்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். சந்திரயான்-3 பூமியிலிருந்து கிளம்பும் முதல் நிலவுக்குச் சென்று அங்குத் தனது பணியைச் செய்து முடிக்கும் வரை அனைத்து விதமான தகவல்களையும் இங்கே விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் கனவுத் திட்டம் தான் சந்திரயான்-3. இஸ்ரோ நிலவு ஆய்வு செய்வதை பெரும் கனவாக வைத்து நீண்ட ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி வருகிறது. சந்திரயான்-1 ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு தனது ஆய்வுகளைச் செய்து முடித்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது..

chandrayaan 3 launch

ஆனால் சந்திரயான்-2 லேண்டரான விக்ரம் லேண்டர் சரியாக நிலவில் லேண்ட் ஆகாமல் நிலவில் மோதியதில் அந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாயத் தயாராக உள்ளது.சந்திரயான்-2 போல இல்லாமல் அதில் கற்ற பாடத்தை வைத்து சந்திரயான்-3 விண்கலத்தை மிக நுட்பமாக ஆய்வு செய்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

நாளை சரியாக இந்திய நேரப்படி மதியம் இரண்டு 2:35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோவின் எல்எம்வி 3 ரக ராக்கெட் மூலம் இந்த சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த விண்கலத்தின் பேலோடாக விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளே பிரக்யான் என்ற ரோவர் இருக்கிறது.

chandrayaan 3 launch

எல்விஎம் 3 ராக்கெட் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தை நேராக ஜிடிஓ எனப்படும் பூமியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி உள்ள இடத்திற்குக் கொண்டு சென்று விடும். அங்கிருந்து இந்த பேலோடு தனியாகக் கழன்று திரஸ்ட் மூலம் இயங்க துவங்கும். சுமார் 40 நாட்கள் வரை இந்த பேலோடு நிலவை நோக்கி மெல்ல மெல்ல நகரும்.

சரியாக நிலவிலிருந்து நூறு கிலோமீட்டர் முன்பு வரை இந்த பேலோடு திரஸ்ட் மூலம் இயக்கப்பட்டு நிலவிற்கு அருகில் செல்லும். அங்கிருந்து விக்ரம் லேண்டர் தனது லேண்டிங் பணியைத் துவங்கிவிடும். முதலில் ஃப்ரீ பாலாக கீழே விழும் விக்ரம் லேண்டர் நிலவில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் தனது இன்ஜினை ஆக்டிவேட் செய்து தனது வேகத்தைக் குறைக்கும்.

அதன்படி விக்ரம் லேண்டர் ஒரு நொடிக்கு 3 மீட்டர் கீழ் இறங்கும் அளவிற்கு வேகத்தில் நிலவில் தரை இறங்கும். இதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குச் சவாலான விஷயமாக அமையப் போகிறது. கடந்த முறை இப்படியாக விக்ரம் லேண்டர் லேண்டிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதில் தான் சந்திரயான்-2 வெற்றிகரமாக அமையவில்லை.

இந்நிலையில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் லேண்ட் செய்யும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விக்ரம் லேண்டரை மாற்றியமைத்து தற்போது விண்ணில் ஏவ உள்ளனர். தற்போது திட்டமிட்டுள்ளது படி ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி இந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க வேண்டுமென்றால் அங்குச் சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும். அதைக் கணக்கிட்டுத் தான் விக்ரம் லேண்டரை சரியாக இந்த நாளில் விண்ணில் செலுத்துகின்றனர். கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அடுத்த தரையிறக்குதல் முயற்சி நடக்க ஒரு மாதம் வரை ஆகும்.

அதுவரை பேலோடில் இருந்து விக்ரம் லேண்டர் வெளியே வராமல் காத்துக் கொண்டிருக்கும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாதம் 23 முதல் 24ஆம் தேதிக்குள் விக்ரம் லேண்டர் தரை இறங்கி விடும் என எதிர்பார்க்கலாம். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கி விட்டால் அடுத்த கட்டமாக ரோவரை வெளியேற்ற வேண்டியது தான் பாக்கி.

விக்ரம் லேண்டருக்குள் பிரகியான் என்ற ரோவர் இருக்கிறது. இந்த ரோவர் தான் நிலவில் இறங்கி தனது ஆராய்ச்சியைச் செய்யப் போகிறது. விக்ரம் லேண்டர் தரை இறங்கியதும் அதன் கதவுகள் திறக்கப்பட்டு ரோவர் வெளியே வரும். ரோவர் வெளியே வந்து அதன் ஆய்வுப் பணிகளைத் திட்டமிட்டபடி துவங்கிவிடும்.

இந்த ரோவர் நிலவில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த ரோவரில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் எல்லாம் பூமிக்கு வந்து சேரும். இது போக இந்த ரோலில் இரண்டு ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கருவிகள் மூலம் இந்த ரோவர் நிலவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து சாம்பிள்களை எடுத்து ரோவரிலேயே டெஸ்ட் செய்து அந்த முடிவுகளைப் பூமிக்கு அனுப்பும். அந்த முடிவுகளின் தரவுகள் படி பூமியில் உள்ள விஞ்ஞானிகள் நிலவில் உள்ள விஷயங்கள் குறித்துத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இதற்காகத் தான் சந்திரயான்-3 விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

அக்டோபர் 23 அல்லது 24 இல் விண்ணில் தரையிறங்கும் சந்திரயான்-3 அடுத்த 14 நாட்களுக்கு வேலை செய்யும். நிலவைப் பொருத்தவரை பூமி போல் இல்லாமல் 14 நாட்களுக்கு வெயிலும் 14 நாட்களுக்கு இருட்டும் இருக்கும். சந்திரயான்-3 ரோவர் சூரிய வெளிச்சத்தில் தான் இயங்கும் என்பதால் வெயில் இருக்கும் நேரத்தில் தான் இது தரையிறக்கப்படுகிறது. தொடர்ந்து வெயில் இருக்கும் வரை இது பணியில் இருக்கும்.

வெயில் இல்லாத நேரத்தில் இது செயலிழந்து விடும். அதே நேரம் மீண்டும் 14 நாட்களுக்குப் பிறகு வெயில் வந்தால் தனது பணியை மீண்டும் துவங்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த 14 நாட்களுக்குள் இந்த ரோவர் அனுப்பும் தகவல்கள் இஸ்ரோவில் சேகரிக்கப்பட்டு விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அனுப்பப்படும்.

விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்து அதன் பின்னர் நிலவில் உள்ள விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்து இது குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவார்கள். குறிப்பிட்ட லாக்இன் நேரத்திற்குப் பிறகு ரோவர் அனுப்பிய தகவல்கள் எல்லாம் பொதுவெளியில் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் சிரமப்பட்டு இந்த சந்திரயான்-3 விண்கலத்தைத் தயார் செய்து இந்தியாவிற்குப் பெருமை தேடித் தரத் தயாராகி விட்டார்கள். இஸ்ரோவின் இந்த விண்கல ஏறுதல் என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கும் மிகப் பெருமையான விஷயம். உலக அரங்கில் வெகு சில நாடுகளே சாதித்த இந்த சாதனையை இந்தியாவும் விரைவில் சாதிக்கப் போகிறது இதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 13:01 [IST]
English summary
Chandrayaan 3 launch beginning to end complete details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+