சந்திரயான் 3 விண்கலம் ஏவியதில் 4 நொடி லேட்! சிதம்பர ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோ!
கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கி மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது இந்த ராக்கெட் ஏவுதலில் நடந்த ஒரு சுவாரசியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. திட்டமிட்டதை விட நான்கு நொடிகள் தாமதமாக தான் இந்த ராக்கெட் கிளம்பி உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதற்கு முன்னர் நடந்த மிகப்பெரிய சாதனையாக சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கியது தான் மிகப் பெரிய சாதனையாக பார்க்க முடிகிறது. உலகமே வியந்து பார்க்கும் இந்த சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிகழ்த்தியதற்கு பின்னால் உள்ள சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தான் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவ வேண்டும் என்ற முடிவை இஸ்ரோ எடுத்திருந்தது. இதற்கான அனைத்து திட்டங்களையும் மிகச் சரியாக போடப்பட்டிருந்தது. எந்த அளவுக்கு சரியாக போடப்பட்டிருந்தது என்றால் அடுத்த ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கும் வகையில் இஸ்ரோ ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி கண்காணித்து வந்தது.
இதன்படி திட்டமிட்டு தான் எத்தனை மணிக்கு ராக்கெட் ஏவுதல் நடக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. இந்நிலையில் ராக்கெட் ஏவுதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் இந்த ராக்கெட் ஏவுதலில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரோவிடம் உள்ள கொல்யூஷன் அவாய்டன்ஸ் அனலைசிஸ் என்ற தொழில்நுட்பம் இந்த பிரச்சனையை கண்டறிந்தது.

அதன்படி திட்டமிடப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டிருந்தால் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கழிவு பொருள் ஒன்று இந்த ராக்கெட் மீது மோத அதிகமான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கழிவு பொருள் அதிகமான வேகத்தில் சுற்றி வருவதால் இது ராக்கெட் மீது மோதும் போது ராக்கெட் ராக்கெட்டின் உள்ளே இருக்கும் விண்கலமும் சுக்கு நூறாக உடைந்து போக அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.
இதைப்பார்த்ததும் விஞ்ஞானிகள் எல்லாம் ஒரு நிமிடம் பதறித்து விட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகளிடம் உள்ள இந்த தொழில்நுட்பம் இதற்கான மாற்று வழியையும் உடனே வழங்கியது. அதன்படி தற்போது கிளம்ப திட்டமிடப்பட்ட நொடியை தாண்டி நான்கு நொடிகளுக்குப் பிறகு ராக்கெட் கிளம்பினால் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இந்த கழிவை தவிர்த்து விட்டு தனது பயணத்தை தொடங்கலாம் என்பதை கண்டறிந்து அதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகளுக்கு காட்டியது.
அதன்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ராக்கெட் பறப்பதற்கான பட்டனை அழுத்தும் நொடியை நான்கு நொடிகளுக்குப் பிறகு அழுத்தி உள்ளார்கள். இதனால் விண்வெளியில் கழிவு பொருட்களுடன் மோதி மிகப் பெரிய அளவு விபத்து ஏற்பட்டிருக்க இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடைசி நொடியில் விஞ்ஞானிகள் செய்த இந்த மாற்றம் இந்தியாவிற்கே மிகப்பெரிய பெருமையை தேடிக்கொண்டு உள்ளது என்று சொல்லலாம்.
இதுவரை சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி தான் செயல்பட்டது என நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இஸ்ரோ இந்த நான்கு நொடி தாமதம் குறித்து தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ துரிதமாக செயல்படும் வகையில் தனது தொழில்நுட்பத்தை வடிவமைத்து இருந்ததால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கடைசி நேரத்தில் விண்வெளி கழிவு மூலம் வரப்போகும் ஆபத்தை உணர்ந்ததும், அதை உடனடியாக சரி செய்வதற்கான தீர்வுகளை கண்டுபிடித்ததும் நிச்சயம் அவர்களது திறனை காட்டுகிறது. விண்வெளி ஆய்வில் நிச்சயம் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராக்கெட் ஏவுதல் என்பது உலகிலேயே மிக கடினமான வேலையாக இருக்கிறது. பல்வேறு விதமான கணக்கீடுகளை செய்து ஒவ்வொரு கணக்கீடும் எந்த ஒரு பிழையும் இல்லாமல் இருந்தால்தான் திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் பாயும். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடைசி நிமிடம் கூட அனைத்து தகவல்களையும் பெற்று ராக்கெட்டியவுதலை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு உழைத்து உள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








