சந்திரயான் -3 தரையிறங்குவதில் இப்படி ஒரு சிக்கலா? மீண்டும் அதே தவறு நடக்காமல் இருக்குமா?
இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை வரும் 14ஆம் தேதி நிலவுக்கு அனுப்பியுள்ள நிலையில் தரை இறங்குவது என்பது குதிரைக்கொம்பான விஷயமாகவே இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தர இயக்குவதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? இதில் ஏன் தோல்விகள் வருகிறது? நிலவில் தரையிறங்கும் பிரச்சினையை ஏன் விஞ்ஞானிகளால் முதலிலேயே கண்டுபிடிக்க முடியவில்லை? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு ஆய்வு செய்வதற்காக அனுப்ப உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டமாகும். இந்தியா சந்திரயான் 1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் பின் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு நிலவில் அதன் லேண்டெர் மோதியது.

இதனால் சந்திரயான் 2 வெற்றி பெறவில்லை. இந்தியா மட்டுமல்ல சமீபத்தில் ஜப்பான் நிலவிற்கு அனுப்பிய விண்கலமும் நிலவில் சரியாக லேண்ட் ஆகாமல் மோதி தோல்வியில் முடிந்தது. இப்படியாக நிலவில் விண்கலத்தை தரை இறக்குவதில் அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது? ஏன் அதைக் குதிரைக்கொம்பான ஒரு விஷயமாக விஞ்ஞானிகள் பார்க்கின்றார்கள் என்பதை தான் இங்கே காணப் போகிறோம்
நிலவில் ஒரு விண்கலத்தை தரக்குவது என்பது உண்மையில் ஒரு சாதாரண விஷயம் இல்லை. இதில் பல்வேறு கணக்குகளை செய்ய வேண்டியது இருக்கிறது. விண்கலம் செல்ல வேண்டிய பாதை உள்ளிட்ட அனைத்தையும் முன்னரே திட்டமிட வேண்டியது இருக்கிறது. சரியான நேரத்தில் விண்கலத்தின் இன்ஜின்களை இயக்க வேண்டியது இருக்கிறது.

அதற்கு முன்னர் சரியான நேரத்தை கணக்கிட்டு பூமியிலிருந்து ராக்கெட் செல்வது சரியான நொடியில் கிளம்ப வேண்டிய படி திட்டமிடப்பட வேண்டியது இருக்கிறது. அதே நேரம் நிலவில் விண்கலம் தரையிறங்கும் போது சரியான நேரத்தில் சரியான அளவில் அதன் வேகத்தை குறைக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.இப்படியான பல விஷயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்தால் கூட இந்த விண்கலம் தரையில் இறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு விடும்.
சந்திரயான் 3 தற்போது எல்எம்பி3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டின் புரோபெல்ஷன் சந்திரனிலிருந்து 100 கிலோமீட்டர் முன்பு வரை அதன் லாண்டரையும் ரோவரையும் எடுத்துச் சென்றுவிடும். நிலவிலிருந்து 100 கி.மீ மேல் இருக்கும்போது லேண்டரும் ரோவரும் புரோப்பெல்ஷனிலிருந்து வெளியே வரும்.

அது புரோபெல்ஷனிலிருந்து வெளியே வந்த அடுத்த வினாடியே நிலவில் விழுகத் துவங்கிவிடும். பூமியை விட நிலவில் 1/6 தான் புவியீர்ப்பு விசை இருக்கிறது அதனால் பூமி போல இல்லாமல் மிக மெதுவாக தான் இந்த லேண்டரும் கீழே விழும். லேண்டருக்குள் தான் ரோவர் இருப்பதால் இரண்டும் பிரிந்து போக வாய்ப்பில்லை.
இந்த லேண்டர் கீழே விழும்போது அதன் வேகத்தை அது கட்டுப்படுத்த வேண்டும். அதிகமான வேகத்தில் கீழே விழுந்து விட்டால் நிலவுடன் மோதி டேமேஜ் ஆகிவிடும். அதே நேரம் அது நேராக விழாமல் சைடுலிலும் சென்று விடக்கூடாது. இதற்காக லேண்டரில் அனைத்து திசைகளிலும் பயணிக்கும் வகையில் இதன் இஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது கீழே விழும்போது சரியாக அதன் வேகம் மற்றும் மற்ற அனைத்தையும் கணக்கிட்டு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு சாஃப்ட்டான லேண்டிங்கை வழங்கும். இது முற்றிலும் தானங்கியாக மட்டுமே செயல்பட முடியும். அதற்கான புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இந்த லேண்டரை பூமியிலிருந்து இயக்குவது என்பது முடியாத விஷயமாகும்.
ஏனென்றால் இங்கிருந்து கொடுக்கப்படும் தகவல் நிலவுக்கு செல்ல சில மணி நேரங்கள் வரை கூட ஆகலாம், அதனால் அவ்வளவு நேரம் லேண்டரால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் அதை தானியங்கியாக செயல்படும்படி வடிவமைத்துள்ளனர். நிலவில் லேண்டர் தரையிறங்கும் போது ஒரு நொடிக்கு மூன்று மீட்டர் மட்டுமே கீழே இறங்கும் படியான வேகத்தில் தர இறங்க வேண்டும்.
அப்படி இறங்கினால் தான் அது சாஃப்ட் லேண்டிங்காக இருக்கும். இதை கணக்கிட்டு தான் தற்போது நிலவில் சந்திரயான் 3 யை தரையிறக்கும் லேண்டரை வடிவமைத்துள்ளனர். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்பு தான் லேண்டரிலிருந்து ரோவர் வெளியே வரும். இதற்காக புரோகிராமும் செய்யப்பட்டிருக்கும்.
லேண்டரிலிருந்து ரோவர் வெளியே வந்துவிட்டாலே இந்தத் திட்டம் வெற்றிகரமான திட்டமாக மாறிவிடும். ரோவர் வழக்கமாக நிலவில் சென்று அதன் ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கிவிடும். பின்னர் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சாம்பிள்களை டெஸ்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்ய துவங்கிவிடும். அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் ஒரு கடினமான விஷயத்தை செய்யும் போது இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லை எளிதாக செய்துவிடலாம் என மற்றவர்களை ஊக்கப்படுத்துவோம். ஆனால் இஸ்ரோ செய்வது உண்மையிலேயே ராக்கெட் சயின்ஸ் தான்.அதனால் இதில் ஏகப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து தான் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த சாதனையை செய்ய உள்ளனர் அவர்களுக்கு நாம் எப்பொழுதும் துணை நிற்க வேண்டும்


Click it and Unblock the Notifications
