சந்திரயான்-3 க்கு பின்னால் மூளையாக செயல்பட்டது இவரா? தமிழ்நாட்டில் பிறந்த இவரை பற்றி தமிழர்களுக்கே தெரியாது!
இன்று இஸ்ரோ நிலவுக்கு அனுப்பவுள்ள சந்திராயான்-3 விண்கலத்தை தயாரிப்பதில் மூளையாக செயல்பட்டது ஒரு தமிழன் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இவரைப் பற்றி பலருக்கும் தெரியாது ஆனால் இஸ்ரோவில் இவர் செய்த சாதனையை இன்னும் கொஞ்ச நாளில் உலகமே போற்றப் போகிறது. இவரைப் பற்றிதான் இங்கு காணப் போகிறோம்.
இந்தியாவின் நீண்ட ஆண்டு கால கனவு திட்டமான நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்ற சந்திராயான் திட்டம் இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நிலவில் வெற்றிகரமாக இந்தியா தனது தடத்தை பதிப்பதற்காக விண்கலத்தை நிலவிற்கு அனுப்புகிறது. இதுவரை மூன்று நாடுகளை செய்த இந்த சாதனையை தற்போது இந்தியா நான்காவது நாடாக செய்ய உள்ளது.

சந்திராயான்-3 குறித்த பல தகவல்களை நீங்கள் செய்திகள் மற்றும் ஊடகங்களில் படித்திருப்பீர்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் இந்த சந்திராயான்-3 விண்கலம் உருவாகியுள்ளது. இந்த விண்கலம் உருவாக மூளையாக செயல்பட்டது ஒரு தமிழன் தான் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் நிஜம்
இஸ்ரோவின் சீனியர் விஞ்ஞானியாக பணியாற்றுபவர் டாக்டர் P வீரமுத்துவேல். இஸ்ரோ இந்த சந்திராயான்-3 திட்டத்திற்காக மூன்று முக்கிய பொறுப்பாளர்களை நியமித்தது. மோகன் குமார் என்பவர் இந்தத் திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பிஜூ தாமஸ் என்பவர் ராக்கெட் ஏவுதலின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சந்திராயான்-3 விண்கலத்திற்கு இயக்குனராக டாக்டர் P வீரமுத்துவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திராயான்-2 விண்கலளம் சில தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சரியாக நிலவில் தரையிறங்கவில்லை. இந்த திட்டம் வெற்றிகரமாக அமையாத நிலையில் இதன் பின்பு சந்திராயான்-3 திட்டமிடப்படும் போது இதற்கான இயக்குனர்கள் மாற்றப்பட்டனர். அப்பொழுது சந்திராயான்-3 விண்கலத்தை தயாரிப்பதற்காக திட்ட இயக்குனராக தமிழரான டாக்டர் P.வீரமுத்துவேல் என்பவர் இஸ்ரோவால் நியமிக்கப்பட்டார்.
இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் நீண்ட நாட்களாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார் சந்திராயான்-2 திட்டத்திலும் இவர் பணி முக்கியமாக இருந்தது. சந்திராயான்-2 பணியை பொருத்தவரை இவர் நாசா விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொண்டு சில முக்கியமான தகவல்களை பெற்று அந்த திட்டத்திற்காக உதவினார்.
இவரது தந்தை பெயர் பழனிவேல், விழுப்புரத்தில் ரயில்வேதுறையில் டெக்னீஷியனாக பணியாற்றியவர். வீரமுத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தவர். பின்னர் இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தார். இவருக்கு விண்வெளி ஆய்வில் ஆர்வள் இருந்ததால் பின்னர் தாம்பரம் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சென்னை ஐஐடியில் மேற்படிப்பு படித்தார்.அப்பொழுது வர் ஏரோஸ்பேஸ் துறையில் முக்கியமான ஆய்வை மேற்கொண்டார்.
1989ம் ஆண்டு இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். வெளிநாடு மற்றும் இந்தியாவிலேயே இவருக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள் விண்வெளி ஆய்வில் இவர் கொண்ட ஆர்வம் காரணமாக இஸ்ரோவிலேயே பணியை தொடர்ந்தார். இந்நிலையில் அவரது பணியை பார்த்து இஸ்ரோ அவரை சசந்திராயான்-3 மிஷனிற்கான ஸ்பேஸ் கிராஃப்ட் (SpaceCraft) இயக்குனராக நியமித்தது.
30 ஆண்டு கால அவரது அனுபவத்தில் தனது பணியை துவங்கினார். இன்று அவரது தலைமையிலான குழுக்கள் தான் முழுவதுமாக சந்திராயான்-3 விண்கலத்தை வடிவமைப்பில் துவங்கி அதை தரை இறக்குவது, டெஸ்ட் செய்வது என அனைத்து விதமான விஷயங்களையும் செய்து முடித்தது. இனி சந்திரயான் 3 திட்டத்திற்கான இஸ்ரோ பொறுப்பாளர்களின் பட்டியலை காணலாம்.
1. சோம்நாத் - இஸ்ரோ சேர்மன்
2. வீரமுத்துவேல் - திட்ட இயக்குநர்
3. உன்னிகிருஷ்ணன் நாயர் - விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர்
4. ராஜராஜன் - ஏவுதல் அங்கீகார போர்டு சேர்மன்
5. சங்கரன் - யூ ஆர் ராவ் சேட்டிலைட் சென்டர்
தற்போது சந்திராயான்-3 உருவாகியுள்ளதற்கு முழு முதல் மூளையாக செயல்பட்டவர் இவர்தான். இவரைப் பற்றி ஊடகத்தில் பெரிய அளவில் வெளிச்சம் இல்லாவிட்டாலும் சந்திராயான்-3 வெற்றிக்குப் பிறகு பலர் இவரை கொண்டாட போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இன்று விண்ணில் ஏவப்படும் சந்திராயான்-3 அடுத்த 40 நாட்களுக்கு விண்வெளியில் பயணித்து நிலவை சென்றடைகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24 ஆம் தேதியில் இந்த விண்கலம் சந்திரனுக்கு சென்று அங்கு தரையிறங்கும் பணியை துவங்கும். புரொபல்லெலர் மாடுல் உள்ளிருந்து விக்ரம் லேண்டர் வெளியே வந்து சந்திரனில் தரையிறங்கும். அது வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து தனது ஆய்வு பணிகளை செய்ய உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழர்கள் பலர் இஸ்ரோவில் பல முக்கியமான சாதனைகளை படைத்து வருகின்றனர். மறைந்த டாக்டர் அப்துல் கலாம் முதல் இதற்கு முன்னர் சந்திராயான்-2 வை விண்ணில் ஏவிய சிவன் வரை இஸ்ரோவில் தமிழர்கள் செய்த சாதனைகள் மிகவும் அதிகம். அந்தப் பட்டியலில் சந்திராயான்-3க்கு பிறகு டாக்டர் P.வீரமுத்துவேலும் மிக முக்கியமான சாதனையை படைக்க உள்ளார் என்பதில் சந்தேகமேயில்லை.


Click it and Unblock the Notifications