இன்னிக்கு நைட் 7 மணிக்கு நடக்கபோற முக்கியமான சம்பவம்! சந்திரயான் 3 வெற்றியே இதில் தான் இருக்குது!
சந்திரயான் 3 விண்கலம் இன்று இரவு சரியாக 7மணிக்கு நிலவின் நீல் வட்ட பாதைக்குள் நுழையப் போவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விண்கலம் இதுவரை சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது கனவு திட்டமான சந்திரயான் திட்டத்திற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் சந்திரனுக்கு சென்று அங்கு தரை இறங்கி சில ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது.

சந்திரனில் இதுவரை பல நாடுகள் இதுபோல தரை இறங்கியிருந்தாலும் சந்திரயான் 3 விண்கலம் தான் முதன்முறையாக சந்திரனின் தென் துருவ பகுதியில் தரை இறங்கப் போகிறது. சந்திரனின் தென்துருவ பகுதியில் தான் தண்ணீர் ஐஸ் வடிவில் இருப்பது குறித்து சந்திரயான் 1 ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் தான் சந்திரயான் 3 அப்பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக கடந்த 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தொடர்ந்து பூமியை அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து மெல்ல மெல்ல விலகி பின்னர் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு மாறி நிலவுக்கு அருகே சென்று தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இதற்காக அதிக எரிபொருள் செலவு இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு உள்ளனர். அதன்படி பூமியின் ஈர்ப்பு சக்தியிலேயே சந்திராயனை பூமியை சுற்ற வைத்து, அவ்வப்போது வேண்டும் என்கிற அளவு, தேவையான அளவு எரிபொருளை செலவு செய்து உந்து சக்தியை ஏற்படுத்தி அதன் பாதையை மாற்றி நிலவிற்கு அருகே கொண்டு செல்ல திட்டமிட்டனர்.
இந்தத் திட்டத்தின் படி இன்று இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலம் பூமியில் நீல் வட்ட பாதையிலிருந்து பிரிந்து சென்று சந்திரனின் ஆர்பிட் பகுதிக்குள் நுழைகிறது. பின்னர் இது சந்திரனை சுற்றி வந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது உயரத்தை குறைத்து சந்திரனில் தரையிறங்கும்.
இந்த முறையை கேட்பது அதற்கு இவ்வளவு குழப்பமாக இருந்தாலும் இதை இஸ்ரோ வெகு சாதாரணமாக செய்துவிடும் ஏனென்றால் இஸ்ரோ இதற்கு முன்பாக இதை எல்லாம் வெற்றிகரமாக சாதித்திருந்தது சந்திரயான் 2 விண்கலம் நிலவிற்கு சென்ற போது இந்த கட்டத்தை எல்லாம் இஸ்ரோ சுலபமாக தாண்டி சென்றது.
அதனால் சந்திரயான் 3 இந்த கட்டத்தை சுலபமாக தாண்டி சந்திரனின் ஆர்பிட்டர்க்குள் நுழைந்து விடும் என்பதில் எந்தவித அச்சமும் தேவையில்லை. இப்படியாக சந்திரனின் ஆர்பிட்டாருக்குள் நுழையும் இந்த சந்திரயான் 3 விண்கலம் இனி மெல்ல மெல்ல சந்திரனை சுத்த ஆரம்பிக்கும் இது சந்திரனின் புவியீர்ப்பு விசையை வைத்து சந்திரனை சுற்றத் துவங்கும்.
வரும் 23 அல்லது 24 ஆம் தேதியில் இது சந்திரனுக்கு மிக அருகே நெருங்கி சந்திரனிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்போது இதில் உள்ள லாண்டர் இதன் கேப்சூலிலிருந்து வெளியாகி சந்திரனை நோக்கி கீழே விழும். இப்படியாக கீழே விழும் லேண்டர் குறிப்பிட்ட உயரத்துக்கு பின்பு அதில் உள்ள இன்ஜினை ஆக்டிவேட் செய்து மெதுவாக கீழே இறங்க முயற்சி செய்யும்.
இப்படியான சாஃப்ட் லேண்டிங் செய்யும் போது தான் அதில் பிரச்சனை ஏற்பட்டு சந்திரயான் 2 விண்கலம் நிலவில் மோதி அந்தத் திட்டமே வெற்றிகரமாக அமையாமல் போனது. ஆனால் இந்த முறை அந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் சிலண்டரில் மாற்றம் செய்யப்பட்டு அது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையம் எல்லாம் செவ்வாய் கிரகம் நோக்கி தனது ஆய்வை மாற்றின இந்நிலையில் சந்திரயான் 1 விண்கலம் தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பது குறித்து உறுதியான ஆதாரங்களை வெளிப்படுத்தியது. தற்போது சந்திரனின் தென் துருவப் பகுதியை நோக்கி தனது ஆய்வே நகர்த்தியுள்ளன. சந்திரயான்3 வெற்றிக்கு பிறகு உலக அறிவியல் மிகப்பெரிய அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications