சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது; நிலவில் தடம் பதிக்கப்போகும் இந்தியா!
இந்தியாவின் பெரும் கனவான சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. எல்விஎம் 3- எம்4 ராக்கெட்டில் பயணித்த சந்திரயான் 3 நிலவை நோக்கி தனது பயணத்தைத் துவங்கியுள்ளது. ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி இது நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமாக இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் பெரும் சாதனை என்றால் அதில் சந்திரயான் 1 சாதனை என்று தான் சொல்ல வேண்டும். நிலவிலிருந்து ஒரு விண்கலத்தைச் சந்திரனின் நீல் வட்டப் பாதைக்கு அனுப்பி அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியை இஸ்ரோ பெற்றது.

இது உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நிலவில் தண்ணீர் இல்லை எனப் பல பெரும் நாடுகள் எல்லாம் முடிவெடுத்திருந்த நிலையில் இஸ்ரோ அனுப்பிய சாட்டிலைட் தண்ணீரைக் கண்டுபிடித்து அனுப்பியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிலவில் தரை இறங்கி தண்ணீர் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள சில திட்டமிட்டது.
அதன்படி கண்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ விண்வெளிக்குச் சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. நிலவில் தரை இறங்குவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல அதற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யப்பட்டாலும் அது இறங்கும் நேரம் அங்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து அந்தத் திட்டம் தோல்வியில் முடியக் கூட வாய்ப்புள்ளது.

சந்திரயான் 2 எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமையவில்லை அதன் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி விட்டது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்காக ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே நடந்த தவறு இந்த முறை நடக்காமல் விண்ணில் சந்திரயான் 3யை செலுத்த ஏற்பாடுகள் நடந்தது.
அதன்படி இன்று மதியம் சரியாக 2:35 மணி 17 நொடியில் சந்திரயான் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றது. இந்த ராக்கெட் மொத்தம் மூன்று கட்டங்களாக இருக்கிறது. சாலிட் புரோபல்ஷன், லிக்விட் புரோபல்ஷன், கிரையோஜெனிக் புரோபல்ஷன். இந்த மூன்றும் அடுத்தடுத்து இயக்கப்பட்டு சந்திரயான் டு விண்வெளிக்குச் சென்றது.

எல்விஎம் 3 ராக்கெட் இந்த சந்திரயான் 3 விண்கலத்தைப் பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து ராக்கெட்டில் உள்ள பேலோடு எனப்படும் சந்திரயான் 3 விண்கலம் வெளியே வந்துள்ளது. தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின் புரோபல்ஷன் மாடுல் இயக்கப்பட்டு அது சந்திரனை நோக்கி தனது பயணத்தைத் துவக்கியுள்ளது.
சுமார் 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு இந்த புரோபஷனல் மாடுல் சந்திரனுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அங்கிருந்து விக்ரம் லேண்டர் வெளியே வரும். விக்ரம் லேண்டர் வெளியே வந்த அடுத்த ஒரு சில வினாடிகளில் அது நிலவை நோக்கி கீழே விழத் துவங்கி விடும்.
அதன் பிறகு விக்ரம் லேண்டர் தனது இஞ்ஜின்களை பயன்படுத்தி நிலவில் சாஃப்டாக லேண்ட் ஆகும். நிலவில் சாஃப்டு லேண்டிங் ஆன பிறகு விக்ரம் ஆண்டிற்குள் உள்ள பிரக்யான் என்ற ரோவர் நிலவில் இறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கும். அதன் பின்னர் அது சேகரிக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட காலமாக பெரும் கனவாக இருந்த சந்திரன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது நினைவாக்கியுள்ளனர். வெற்றிகரமாகச் சந்திரயான் 3 பயணத்தைத் துவக்கியுள்ளனர். இன்று துவங்கிய சந்திரயான் 3 பயணம் இன்னும் 40 நாட்களுக்குள் நிலவில் கரை இறங்கி விடும். இது எல்லாம் நம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திறமை மற்றும் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகி உள்ளது.


Click it and Unblock the Notifications
