2 நாள் தான் இருக்கு! இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விஷயத்தையும் சாதிப்பார்களா? திக் திக் திக் நிமிடம் நெருங்குகிறது!

நிலவில் தரை இறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்துவிட்டு உறக்க நிலைக்கு சென்ற நிலையில் நிலவில் மீண்டும் பகல் நேரம் துவங்கிய பின்பு அது உறக்கத்திலிருந்து எழுந்து தனது பணிகளை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த லேண்டரும்,ரோவரும் எழுந்திருக்க வாய்ப்புள்ளதா அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? கடைசி வாய்ப்பு எப்பொழுது? திக் திக் திக் நிமிடங்களில் நடக்கப்போவது என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

chandrayaan 3

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி உலக அளவில் உள்ள விஞ்ஞானிகளை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் நிலவில் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திராயன் 3 திட்டத்தின் படி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி அங்கு ஆய்வுகளை நடத்தி அங்குள்ள தரவுகளை பூமிக்கு அனுப்பி வைத்தது.

இந்த சந்திரயான்-3 திட்டத்தின் படி நிலவில் இந்த லேண்டரும் ரோவரும் தரை இறங்கி 14 நாட்களுக்கு தான் தரவுகளை அனுப்பியது. இருந்தாலும் நிலவில் இரவு நேரம் வருவதற்கு முன் அந்த பிரக்யான் ரோவரையும்,லேண்டரையும் உறக்க நிலைக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும்14 நாட்களுக்குப் பிறகு சூரிய உதயம் வரும்போது மீண்டும் அதை ஆக்டிவேட் செய்து அதன் பணிகளை செய்ய வைக்க முடியுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

எதிர்பார்த்தபடி பிரக்யான் ரோவரும் விக்ரம் லேண்டரும் நிலவில் தனது பணிகளை எல்லாம் முடித்தது முடித்த பின்பு இந்த லேண்டரும், ரோவரும் உறக்க நிலைக்கு சென்றது அதற்கு முன்பாக நிலவிலிருந்து கிளம்புவதற்காக லேண்டனில் ஒரு சிறிய சோதனை ஒன்று செய்யப்பட்டது. வருங்காலத்தில் நிலவிற்கு மனிதர்கள் அனுப்பி அங்கிருந்து மீண்டும் கிளம்பி பூமிக்கு வருவதற்கான தொழில்நுட்பத்தை ஒரு சிறிய ஆய்வு மூலம் சோதித்துப் பார்த்து அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தது இஸ்ரோ.

இந்நிலையில் நிலவில் இரவு நேரம் வந்தது இந்த இரவு நேரத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் -120 முதல் -200 வரையிலான குளிர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அளவிலான குளிர் இருக்கும் போது அங்கு எலெக்ட்ரிக் பாகங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன சரியாக இருக்க முடியாத நிலை ஏற்படும்.

ஒன்று அது அதிக குளிரில் உடைந்து போக கூட வாய்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் இந்தக் குழுவையும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு திட்டமிட்டு தான் பிரக்யான் ரோவரும் விக்ரம் லேண்டரும் டிசைன் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. இதற்காக பல ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதியே லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும் பகுதியில் நிலவில் சூரிய உதயம் வந்துவிட்டது. அதன் பின்பு பூமியிலிருந்து லேண்டரையும் ரோவரையும் ஆக்டிவேட் செய்ய கமெண்டுகள் அனுப்பப்பட்டன. ஆனால் அந்த கமெண்ட்கள் எதற்கும் இதுவரை பதில் வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உறக்கத்திலிருந்து எழுப்ப கமாண்டுகளை அனுப்பி முயற்சிகளை செய்வார்கள் என கூறப்பட்டு வந்தது.

நாட்கள் பல கடந்தும் லேண்டரும் உறக்கத்திலிருந்து எந்திரிக்காத நிலையில் பலருக்கு இந்த நிலவின் இரவு நேர சோதனையில் இஸ்ரோ எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் லேண்டர், ரோவரையில் உறக்க நிலையில் இருந்து எழுப்ப இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதாவது செப் 30ம் தேதி வரை லேண்டர் மற்றும் ரோவரை உறக்க நிலையில் இருந்து மீண்டும் உயிர்பிக்க வைக்க முடியும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரும் 30ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நிலவில் சூரியன் அஸ்தமனமாகும் நாட்கள் துவங்கிவிடும். அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலவில் மீண்டும் லேண்டர் மற்றும் ரோவர் இருக்கும் பகுதியில் இரவு நேரம் வர துவங்கிவிடும். இதனால் மீண்டும் லேண்டர், ரோவரை எழுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். இப்படி நிகழ்ந்தால் லேண்டர், ரோவரை நிலவில் நிரந்தரமாக எழுப்ப முடியாத நிலை ஏற்படும். லேண்டரும் ரோவரும் இந்தியா நிலவில் தரையிறங்கியதற்கான ஆதாரமாக நிற்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம் என்பதை சாதித்துள்ளனர். திட்டத்தின்படி நிலவில் தரை இறங்கி அங்கு ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டத்தின் தலையான நோக்கமாக இருந்தது. இதற்கு கூடுதல் போனஸாக சில ஆப்ஷன்களை வைத்திருந்தார்கள் மீண்டும் லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் இருந்து எழுந்திருப்பது பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்தது மிகப்பெரிய சாதனைதான்.

Article Published On: Thursday, September 28, 2023, 18:48 [IST]
English summary
Chandrayaan 3 vikram and pragyans potential revival major update
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+